Gmail-ல அடிக்கடி இந்த பிரச்சனை ஏற்படுகிறதா? காரணம் என்ன? சரி செய்ய இதோ வழிகள்..
உலகம் முழுவதும் அதிக மக்கள் ஜிமெயில் (Gmail) சேவையைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மாணவர்கள், அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள், முதியவர்கள் என அனைவரும் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தொழில் ரீதியாக அதிக மக்கள் ஜிமெயில் கணக்கைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல் இந்த ஜிமெயிலில் ஸ்டோரேஜ் ஃபுல் (Gmail storage full) ஆவது பொதுவான பிரச்சனை ஆகும்.
அதாவது ஈமெயில் லிங்க்ஸ், பெரிய ஃபைல்கள் மற்றும் தேவையற்ற விளம்பர ஈமெயில் காரணமாக இந்த ஸ்டோரேஜ் விரைவாக ஃபுல் ஆகிவிடும். அதேபோல் ஜிமெயில் ஸ்டோரேஜ் லிமிட் பற்றி பேசுகையில் ஜிமெயில், புகைப்படங்கள், டிரைவ் மற்றும் பிற சேவைகளில் டேட்டாவை சேமிக்க பயனர்களுக்கு 15ஜிபி வரை இலவச ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

ஆனால் நீங்கள் ஜிமெயிலை நீண்ட நேரம் பயன்படுத்தினால், தேவையற்ற மெயில்களை டெலிட் செய்யாமல் இருந்தால் அது கிளவுட் ஸ்டோரேஜை விரைவாக ஃபுல் ஆக்குகிறது. குறிப்பாக ஜிமெயிலில் ஸ்டோரேஜ் ஃபுல் ஆனால் புதிய ஈமெயில்களை அனுப்புவதிலும், பெறுவதிலும் சிரமம் ஏற்படலாம். ஆனால் இந்த பிரச்சனையை சரி செய்ய வழிகள் உள்ளன. இது குறித்து விரிவான தகல்களை இங்கே பார்க்கலாம்.
தேவையற்ற ஈமெயில்களை நீக்க வேண்டும்:
உங்கள் ஜிமெயில் கணக்கில் ஸ்பேம் செய்திகள், நியூஸ்லெட்டர்கள் மற்றும் பிற விளம்பரங்கள் போன்றவை வருவதால் ஓவர்லோட் ஆகலாம். எனவே ஜிமெயிலில் தேவையற்ற அல்லது முந்தைய மெயில்களை அடிக்கடி டெலிட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பில்டர் அம்சம் பயன்படுத்துவது நல்லது:
அதாவது ஜிமெயில் கணக்கில் பில்டர் அம்சம் ஆனது ஈமெயில்களை எளிதாகப் பிரிக்க அல்லது பில்டர் செய்ய உங்களை அனுமதிக்கிறது. குறிப்பாக இது உங்கள் ஈமெயில்களை கண்டறிந்து, மேனேஜ் செய்வதை எளிதாக்குவதுடன் தானாகவே ஃபைல்களை அரேஞ்சு செய்து கொள்கிறது.
ட்ராஷ் ஃபைல்களை டெலிட் செய்ய வேண்டும்.
குறிப்பாக உங்கள் ஜிமெயிலில் இருந்து தேவையற்ற மெயில்களை டெலிட் செய்த பிறகு, அது நிச்சயம் ட்ராஷ் ஃபைல்களில் இருக்கும். எனவே கட்டாயம் ட்ராஷ் ஃபைல்களில் உள்ள மெயில்களையும் டெலிட் செய்ய வேண்டும்.
அதேபோல் உங்களுக்கு தேவையற்ற நிறுவனங்கள் அல்லது நியூஸ்லெட்டர்களில் இருந்து வரும் ப்ரோமோஷனல் ஈமெயில்களை அன்சப்ஸ்கிரைப்டு செய்வது நல்லது. இது உங்கள் இன்பாக்ஸை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் தேவையற்ற மெயில்களை வருவதையும் எளிமையாகத் தடுத்துவிடலாம்.

கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற ஆல்டர்நேட்டிவ்களை பயன்படுத்துவது நல்லது:
ஜிமெயில் கணக்கை பயன்படுத்தும் மக்கள் கூகுள் ஸ்டோரேஜ் தவிர மற்ற கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற ஆல்டர்நேட்டிவ்களையும் தேர்வு செய்து, ஸ்பேஸ்-ஐ மேனஜ் செய்து கொள்ளலாம். மேலே கூறிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் ஜிமெயில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ்-ஐ காலி செய்வதுடன், உங்கள் ஆப்-ஐ வேகமாகவும், சிறப்பாகவும் மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கூகுள் (Google) நிறுவனம் இந்த ஜிமெயில் சேவையில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு கூட ஜிமெயில் சேவையில் பல அம்சங்கள் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








