உங்கள் Gmail அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதா? எப்படி கண்டுபிடிப்பது? இதோ முழு விவரம்..
ஜிமெயில் (Gmail) சேவையை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஆதார், பான் கார்டு, பேங்க் அக்கவுண்ட் வரை இந்த ஜிமெயில் பயன்படுகிறது. இப்படி அனைத்து விஷயங்களுக்குப் பயன்படும் உங்களது ஜிமெயில் அக்கவுண்ட்டை யாராவது ரகசியமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சந்தேகமாக உள்ளதா? கவலை வேண்டாம் உங்களுடைய சமீபத்திய அக்கவுன்ட் செயல்பாடு குறித்து தெரிந்து கொள்வதற்கு கூகுள் பல்வேறு பாதுகாப்புக் கருவிகளை வழங்குகிறது.
அதாவது உங்களது ஜிமெயில் அக்கவுண்ட் தொடர்பான இறுதி செயல்பாடு மற்றும் அது எங்கு திறக்கப்பட்டது என்பதை ஜிமெயில் பதிவு செய்திருக்கும். இந்த விவரத்தை நீங்கள் சரிபார்ப்பதற்கு உங்களது ஜமெயில் அக்கவுண்ட்டை லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் பிரவுசரில் திறக்க வேண்டும்.

அடுத்து கீழ் வலது மூலையில் காணப்படும் லாஸ்ட் அக்கவுண்ட் ஆக்விட்டி (Last account activity) என்பதன் கீழ் உள்ள விவரங்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்பு இந்தப் பிரிவு உங்களுடைய சமீபத்திய லாகின்கள், அணுகல் வகை, பிரவுசர் பெயர் மற்றும் லொகேஷன் ஆகிய விவரங்களைப் பட்டியலிட்டுக் காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தெந்த சாதனங்களில் லாகின் செய்யப்பட்டுள்ளது?
உங்களது ஜிமெயில் அக்கவுண்ட் எந்தெந்த சாதனங்களில் லாகின் செய்யப்பட்டுள்ளது என்பதை எளிமையாக தெரிந்துகொள்ள முடியும். அதற்கு உங்களது கூகுள் அக்கவுன்ட் செட்டிங்ஸை திறந்து செக்யூரிட்டி பிரிவுக்கு செல்லவும். அடுத்து உங்கள் லாகின் செய்த போன், டேப்லெட் அல்லது கம்ப்யூட்டரை நீங்கள் பார்க்க முடியும். இந்த பட்டியலை கவனமாகப் பார்த்து உங்களுக்கு தெரியாத அல்லது பழைய சாதனங்களில் லாகின் செய்திருத்தால் அதனை நீக்கவிடலாம். அதேபோல் சந்தேகத்திற்குரிய சாதனம் இருக்கும் பட்சத்தில் அதில் உடனடியாக நீங்கள் லாக் அவுட் செய்ய வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க.
உங்கள் ஜிமெயிலை பாதுகாக்க சில குறிப்புகள்
முதலில் டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் செயல்முறையை எனேபிள் செய்யவும்.
அடுத்து ஒரே பாஸ்வேர்டை அனைத்து வெப்சைட்டுகளுக்கும் பயன்படுத்த வேண்டாம்.
குறிப்பாக பப்ளிக் வைஃபை மூலம் சைன் இன் செய்வதை தவிர்க்கவும்.
உங்களது லாகின் விவரங்களை கேட்கும் இமெயில்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்.
ஒருபோதும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.
உங்களது சாதனத்தை அவ்வப்போது அப்டேட் செய்யவும்.
உங்களது சாதனங்களில் சமீபத்திய சாஃப்ட்வேர் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
அதேபோல் கூகுள் நிறுவனம் சமீபத்தில் கூகுள் மேம்ஸ் செயலியில் ஒரு அசத்தலான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த தகவல்களையும் இப்போது பார்க்கலாம்.
பவர் சேவிங் மோடு (Power Saving Mode)
கூகுள் மேப்ஸில் தற்போது பவர் சேவிங் மோடு (Power Saving Mode) எனும் அம்சம் தான் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது நாம் பயணம் செய்யும் போது கூகுள் மேப்ஸில் பவர் சேவிங் மோடு பயன்படுத்தினால் நமது போனின் பேட்டரியை சேமித்து, பயன்பாட்டு நேரத்தை நீட்டிக்க முடியும்.
பவர் சேவிங் மோடு என்பது எளிமையான கருப்பு-வெள்ளை வரைபட காட்சி ஆகும். இதைச் செயல்படுத்தியதும், வழக்கமான நேவிகேஷன் அனுபவம் மாற்றப்பட்டு கருப்பு-வெள்ளை நிறத்தில் அடிப்படை வழி அறிவுறுத்தல்கள் மற்றும் முக்கிய தகவல்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும். அவசியமில்லாத தகவல்கள் இந்த பவர் சேவிங் மோடு முறையில் காட்டப்படாது. இதன் விளைவாக, நமது போனின் பேட்டரியை அதிகமாகச் சேமிக்க முடியும்.

இந்த புதிய அம்சம் தற்போது கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதவது பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல், பிக்சல் 10 ப்ரோ போல்ட் போன்ற போன்களுக்கு மட்டுமே பவர் சேவிங் மோடு அம்சம் கிடைக்கும். கூடிய விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
கூகுள் பிக்சல் 10 சீரிஸ் போன்கள் பயன்படுத்தும் பயனர்கள், இந்த புதிய அம்சம் தங்களின் போன்களில் கிடைக்கிறதா என்பதைச் சரிபார்க்க Google Maps > Settings > Navigation எனப் பின் தொடர்ந்து, Driving Options கீழ் உள்ள Power Saving Mode ஐ இயக்குவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








