உலகின் சோம்பேறி நாடு எது? சுறுசுறுப்பான நாடு எது? இந்தியா எந்தப்பக்கம்?

இந்த தரவு வயது, பாலினம், உயரம் மற்றும் எடையைப் பற்றிய அடிப்படை தகவல்களுடன் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

|

இதுவரை நிகழ்த்தப்பட்ட மனித நடமாட்டம் சார்ந்த ஆய்வுகளிலேயே இது தான் மிகப்பெரிய ஆய்வாகும். இந்த ஆய்விற்காக ஆராய்ச்சியாளர்கள் மொத்தம் 111 நாடுகளில் உள்ள ஸ்மார்ட்போன் பயனாளர்களிடம் இருந்து உடல் செயல்பாடுகள் சார்ந்த தரவுகளை சேகரித்துள்ளனர்.

ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால் - உலகின் மிகவும் சோம்பேறியான நாடு எது.? எந்த நாட்டின் மக்கள் மிகவும் சோம்பேறித்தனமானவர்கள்.? என்பது தான்.!

மொத்தம் 700,000-க்கும் அதிகமான மக்கள் தொகை அளவை ஆராய்ந்து பார்த்தத்தில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்களிடம் சராசரியான அளவில் உடல் செயல்பாடுகள் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தான் உடல் பருமன் பாதிப்பிற்கான முக்கியமான காரணியான "நடவடிக்கை சமத்துவமின்மை" (Activity Inequality) என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றன.

வலிமைமிக்க இடைவெளி

வலிமைமிக்க இடைவெளி

"இந்த நடவடிக்கை சமத்துவமின்மை என்பது ஒரு சில நாட்டில் மிகவும் அதிகமாக இருக்கும், மறுபக்கம் மிகவும் குறைவாக இருக்கும். இந்த இரண்டிற்கும் உள்ள வலிமைமிக்க இடைவெளி தான் அந்தந்த சமூகத்தில் உடல் பருமனை அதிகரிப்பதற்கான குறைப்பதற்கான வலுவான அடையாளமாக இருக்கிறது'' என்று ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் உயிரியல் வல்லுநரான ஸ்காட் டெல்ப் விளக்குகிறார்.

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்

இந்த ஆய்வின் முடிவை கண்டறிய, ஆராய்ச்சியாளர்கள் ப்ரீ அஜியோயோ ஆர்கஸ் ஆக்டிவிட்டி மானிட்டர் (free Azumio Argus activity monitor) பயன்பாட்டின் மூலம் தனிப்பட்ட அடையாளம் காணமுடியாத சுகாதார தரவுகளை சேகரித்துள்ளனர். இந்த பயன்பாட்டின் கீழ், பயனர்களின் ஸ்மார்ட்போனில் உள்ள அக்செலரோமீட்டர் கொண்டு பயனர்களின் அன்றாட நடவடிக்கைகள் (எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்) எண்ணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. அந்த தரவு வயது, பாலினம், உயரம் மற்றும் எடையைப் பற்றிய அடிப்படை தகவல்களுடன் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இரண்டு புள்ளி

இரண்டு புள்ளி

கிடைக்கப்பெற்ற முழுமையான தரவுகளை தொகுத்தபோது, ஒருபக்கம் - குறைந்தளவு உடல் பருமன் உடைய நாடுகளில் உள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் ஒரே அளவில் நடப்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். இருப்பினும் மறுபக்கம் - மற்ற நாடுகளில் சிறிதளவு நடப்பவர்கள் மற்றும் அதிகமாக நடப்பவர்கள் என்ற இரண்டு புள்ளிகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கும் போதிலும் கூட உடல் பருமன் என்பது அங்கு ஒரு பிரச்சினையாகவே இருந்தது.

ஐந்து சோம்பேறி நாடுகள்.!

ஐந்து சோம்பேறி நாடுகள்.!

46 நாடுகளை சேர்ந்த (குறைந்தபட்சம்) 1000 பயன்பாட்டு பயனர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் முடிவில், மிக அதிக அளவிலான நடவடிக்கை சமத்துவமின்மையுடன் கூடிய ஐந்து நாடுகளின் பெயர் கண்டறியப்பட்டது.

இந்தியாவிற்கு என்ன இடம்.?

இந்தியாவிற்கு என்ன இடம்.?

முதல் இடத்தில் சவுதி அரேபியா, அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா, கனடா, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகியவைகள் இடம்பெறுகின்றன. மிகவும் அதிர்ச்சியளிக்கும் வண்ணம் ஒன்பதாவது இடத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இடையில் உள்ள இடங்களை நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் கிரீஸ் நிரப்புகிறது.

சுறுசுறுப்பான நாடுகள் எது.?

சுறுசுறுப்பான நாடுகள் எது.?

இதற்கு நேர்மாறாக உடல் ரீதியான செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படும் நாடுகளின் பட்டியலில் - ஹாங்காங், சீனா, ஸ்வீடன், தென் கொரியா மற்றும் செசியா ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன. நடவடிக்கை சமமின்மை ஆய்வு சார்ந்த முழு விவரங்களையும் காண இங்கே கிளிக் செய்யவும்.

Best Mobiles in India

English summary
Is Your Country Lazy or What Activity Inequality May Be The Best Measure. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X