ஆதார் கார்டு இருக்கா? இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. இல்லனா சிக்கல் தான்..
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் வழங்கும் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு ஆதார் (aadhaar) கார்டு கட்டாயம் தேவைப்படுகிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் வங்கி, போஸ்ட் ஆபீஸ், பத்திரப்பதிவு, மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் ஆதார் இந்த அட்டை தேவைப்படுகிறது.
இப்படி அனைத்து முக்கிய தேவைகளுக்கும் பயன்படும் இந்த ஆதார் கார்டில் உங்களுக்கு தெரியாமல் யாராவது, எதாவது செய்கிறார்களா என்பதை நீங்கள் சுலபமாக தெரிந்துகொள்ள முடியும். இதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா?
அதாவது ஆதார் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகள் நடக்கின்றன. பின்பு சிம் வாங்குவது, புதிய வங்கி கணக்கு தொடங்குவது போன்றவையும் செய்ப்படுகின்றன. குறிப்பாக இதை ஆதார் கார்டு வைத்திருக்கும் ஒருவருக்கு தெரியாமலேயே செய்து முடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது மொபைல் நம்பர், இமெயில் ஐடி, போன்றவற்றைத் தெரிந்து கொண்டு அதை செய்ய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
எனவேதான் ஆதார் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது அதார் சேவையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது (Unique Identification Authority of India - UIDAI) நமது ஆதார் கார்டை கண்காணிக்க வழிவகை செய்து கொடுத்துள்ளது. இதன் மூலம் நமது ஆதார் கார்டு எங்காவது தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள முடியும்.
ஆனாலும் ஆதார் கார்டு வைத்துள்ள பயனர்கள் இந்த வழியைப் பயன்படுத்தி நேரடியாக எதையும் தெரிந்துகொள்ள முடியாது. இருப்பினும் உங்கள் ஆதார் கார்டு எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். அதாவது, ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி டிராவல், ஹோட்டல் புக்கிங், பேங்க் சேவைகள் செய்யப்பட்டதா? அல்லது வேறு எதற்காவது பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
அதேபோல் உங்கள் ஆதார் விவரங்களை வைத்து நீங்கள் எதாவது செய்திருந்தால் அது சரிதான், ஆனால் நீங்கள் செய்யாமல் வேறு யாராவது அதை பயன்படுத்தி இருந்தால் அதை நீங்கள் தடுக்க வேண்டியது கட்டாயமாகும். அதாவது இதை தடுப்பதற்கு ஆதார் கார்டை நீங்கள் லாக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் ஆதார் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளும் வழிகளைப் பார்க்கலாம்
வழிமுறை-1: முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லுங்கள். இங்கு உங்கள் 12 இலக்க ஆதார் கார்டு எண் மற்றும் கேப்ச்சா கோட் (Captcha Code) கேட்கப்படும். இந்த விவரங்களைக் கொடுத்த பிறகு உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். அந்த OTP-யை பதிவிட்டு உள்நுழையவும்.

வழிமுறை-2: அடுத்து வரும் மெனுவில் ஆதான்டிகேஷன் ஹிஸ்டரி(Authentication History)டேப் இடம்பெற்றிருக்கும். அதை கிளிக் செய்தால் ஆதார் கார்டு மூலம் செய்யப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதில் நீங்கள் செய்யாதது ஏதாவது இருந்தால், வேறு யாரோ அதை பயன்படுத்துகிறார்கள் என்று தான் அர்த்தம். ஒருவேளை உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டு இருந்தால் 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் அல்லது[email protected] மூலம் கூட புகார் கொடுக்கலாம்
அதேபோல் ஆதார் கார்டை லாக் செய்து வைத்துக்கொள்ளலாம். அதாவது யுஐடிஏஐ (UIDAI) தளத்தில் லாக் மற்றும் அன்லாக் டேப் கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்களது விவரங்கள் கேட்கப்படும். அதை கொடுத்துவிட்டால், ஓடிபி கிடைக்கும். இந்த ஓடிபி-ஐ கொடுத்து ஆதார் கார்டு பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்து கொள்ளலாம். எனவே இதன்மூலம் மறுபடியும் உங்கள் ஆதாரை யாரும் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








