WhatsApp உங்கள் பேச்சை ஒட்டுக்கேட்கிறதா? உங்க மைக்ல பக் இருக்கா? உடனே இப்படி செக் செய்யுங்க!
வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் சமீபத்தில், ஒரு புதிய பாதுகாப்பு சிக்கலில் வலுவாக மாட்டிக்கொண்டது. டிவிட்டர் பொறியாளர் ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கும் போது, வாட்ஸ்அப் தனது ஸ்மார்ட்போனின் மைக்ரோஃபோனை அணுகியதாகக் கூறி, பாதுகாப்பு சிக்கல் குறைபாடு என்று புகார் எழுப்பப்பட்டுள்ளது.
உண்மையில், வாட்ஸ்அப் அதன் பயனர்களின் அனுமதி இன்றி, அவர்களுடைய உரையாடல்களை ஒட்டுக்கேட்கிறதா? என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. இந்த பாதுகாப்பு சிக்கல் மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சிக்கல் இப்போது உலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிவிட்டர் பக்கத்தில், பாதிக்கப்பட்ட நபர் WhatsApp இன் மைக்ரோஃபோன் அணுகலைக் காண்பிக்கும் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளர்.

இந்த குற்றச்சாட்டு தனியுரிமை மற்றும் பயனர் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. இந்த சிக்கலை, டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் 'மிகவும் மோசமான அச்சுறுத்தல்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த சிக்கலின் மூலம் Google மற்றும் Meta ஆகிய இரண்டு நிறுவனங்களும் இப்போது பெரிய சிக்கலில் சிக்கியுள்ளன.
இந்த மைக்ரோஃபோன் அணுகல், சாப்ட்வேர் பிழை காரணமாக ஏற்பட்டதாகவும், வேண்டுமென்றே தனியுரிமை மீறல் நடக்கவில்லை என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த சிக்கல் உடனே கண்டறியப்பட்டு சரி செய்யப்படும் என்று வாட்ஸ்அப் அதன் டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனிலும் வாட்ஸ்அப் மைக்ரோபோனை அணுகியுள்ளதா என்று உடனே செக் செய்யுங்கள்.
செயலி பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் கூட, ஸ்மார்ட்போனில் மைக்ரோஃபோன் அல்லது கேமராவை அணுகும் திறன் வாட்ஸ்அப்பில் உள்ளதா என்பது குறித்து ஒரு பெரிய கேள்வி எழுகிறது. உங்கள் ஸ்மார்ட்போனின் மைக்ரோஃபோனை WhatsApp அணுகுகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, கீழே உள்ள செயல்முறைகளை சரியாக பின்பற்றவும்.

முதலில், உங்கள் ஸ்மார்ட்போன் Android 12 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பில் இயங்குக்கிறதா என்று சோதிக்கவும்.
இரண்டாவதாக, WhatsApp-க்கான மைக்ரோஃபோன் அணுகல் உங்கள் சாதனத்தில் இயக்கப்பட்டிருக்கிறதா என்று சோதிக்கவும்.
உங்கள் Android சாதனத்தில் Settings விருப்பத்தை திறக்கவும்.
"Apps & Notification" அல்லது "Apps" என்ற பிரிவுக்குச் செல்லவும்.
Installed Apps பட்டியலிலிருந்து "WhatsApp" என்பதைக் கண்டுபிடித்து தட்டவும்.
வாட்ஸ்அப் பயன்பாட்டு கிளிக் செய்து, "Permissions" அல்லது "App permissions" கிளிக் செய்யவும்.
வாட்ஸ்அப்பிற்கான மைக்ரோஃபோன் அணுகல் அமைப்புகளைப் பார்க்க "Microphone" என்பதை கிளிக் செய்க.
மைக்ரோஃபோன் அணுகல் டாக்கில் சுவிட்ச் இயக்கப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இயக்கப்பட்டிருந்தால் அதை உடனே OFF செய்துகொள்ளுங்கள்.
இந்த செயல்முறையை பின்பற்றி உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில், வாட்ஸ்அப் மைக்ரோபோனை அணுகுகிறதா? இல்லையா? என்பதை நீங்கள் செக் செய்துகொள்ளலாம். இதேபோல், வாட்ஸ்அப் உங்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் இல்லாத போதும் கேமரா போன்ற அம்சங்களை அணுகுகிறதா என்று செக் செய்துகொள்ளுங்கள். இது உங்கள் பயனர் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என்பதனால், நேரம் தாழ்த்தாமல் உடனே செக் செய்து பாதுகாப்பாக இருங்கள்.


Click it and Unblock the Notifications








