ஜியோவை ஓரங்கட்ட வோடபோன் புதிய திட்டம்.!

ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை சமாளிக்கப் புதிய கோதாவில் வோடபோன் இறங்கியுள்ளது. விரைவில் செயல்படுத்த இருக்கும் திட்டங்களின் மூலம் அந்நிறுவனம் ஜியோவை வெல்லுமா.?

By Meganathan
|

நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போல் இலவசங்களை வழங்கி இந்தியா முழுக்க ரிலையன்ஸ் ஜியோ பிரபலமாகிவிட்டது. தினமும் பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மற்ற நிறுவனங்களும் தங்களின் சேவைக் கட்டணங்களைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கியிருக்கும் இலவசங்கள் கருப்புப் பணத்தை மாற்றும் நடவடிக்கை எனக் கூறப்படும் நிலையில் இது குறித்த உண்மை தகவல் இல்லை. காரணம் எதுவானாலும் ஜியோ இலவச சேவைகளின் மூலம் பலரும் பயன் பெற்றுள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகச் சலுகையைச் சமாளிக்கப் பாரதி ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் ஜியோ போட்டியை சமாளிக்க வோடபோன் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

நீட்டிப்பு

நீட்டிப்பு

நாடு முழுக்க 4ஜி சேவைகளை வழங்கும் நோக்கில் தனது 4ஜி நெட்வர்க்களைக் கூடுதலான வட்டாரங்களில் வழங்க இருப்பதாக வோடபோன் அறிவித்துள்ளது.

மார்ச் 2017

மார்ச் 2017

அதன் படி வோடபோன் நிறுவனம் கூடுதலாக 8 வட்டாரங்களில் தனது 4ஜி நெட்வர்க்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

புதிய நகரங்கள்

புதிய நகரங்கள்

புதிய நீட்டிப்பின் மூலம் தமிழ் நாடு, மகாராஷ்ட்ரா, கோவா, ஒடிஸ்ஸா, பஞ்சாப், அஸ்ஸாம், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், மற்றும் நாட்டின் வடகிழக்கு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2400 நகரங்களுக்கு 4ஜி சேவைக் கிடைக்கும்.

தாக்கம்

தாக்கம்

மும்பை, தில்லி, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா, ஹர்யானா, குஜராத், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வோடபோன் குறிப்பிடத்தக்க பயனர்களைக் கொண்டுள்ளது. புதிய நீட்டிப்பின் மூலம் ஜியோவிற்குப் புதிய போட்டியை ஏற்படுத்த முடியும்.

ஸ்பெக்ட்ரம்

ஸ்பெக்ட்ரம்

வோடபோன் நெட்வர்க் முன்னதாகச் சுமார் 1000 நகரங்களில் வழங்கப்பட்டு வந்தன. சமீபத்தில் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கைப்பற்றப்பட்ட அலைக்கற்றைகளின் மூலமாக நாடு முழுக்கச் சேவைகளை வழங்க வோடபோன் தயாராகி வருகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Is This Vodafone's Plan to Combat Reliance Jio?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X