ChatGPT-யால் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களின் வேலை பறிபோகுமா? சுந்தர் பிச்சை சொன்ன 'நச்' பதில்!
மைக்ரோசாஃப்ட்டின் சாட்ஜிபிடி (ChatGPT), கூகுளின் பார்ட் (Bard) போன்ற செயற்கை நுண்ணறிவு டூல்களானது (Artificial Intelligence Tools) கடந்த பல ஆண்டுகளாக மனித இனம் செய்து வரும் பல வகையான வேலைகளை பறிக்கும் என்கிற பீதி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது!
கூடவே, சாட்ஜிபிடி-யின் ஆதிக்கத்தால் எந்தெந்த துறைகளில் இருந்து எந்தெந்த வேலைகளை செய்யும் பணியாளர்கள் தூக்கி எறியப்படலாம் (Jobs May Replaced by AI) என்கிற பட்டியலும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. அந்த பட்டியலின் முதல் இடத்தில் இருப்பது - சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் (Software Engineers) தான்!

சாட்ஜிபிடி-யின் பரவலானது சாஃப்ட்வேர் இன்ஜினியர்ஸ், கோடர்ஸ் (Coders), கம்ப்யூட்டர் ப்ரோகிராமர்ஸ் (Computer Programmers), டேட்டா அனலிஸ்ட்களின் (Data Analysts) வேலையைத்தான் முதலில் காலி செய்யும் என்று கூறப்படும் நிலையில், "இது குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன?" என்கிற கேள்விக்கு சுந்தர் பிச்சை அட்டகாசமான பதிலொன்றை கூறி உள்ளார்.
தி நியூயார்க் டைம்ஸ் உடனான போட்காஸ்டில், ஏஐ (AI) காரணமாக வேலையை இழப்போமா என்கிற அச்சத்தில் உள்ள மென்பொருள் பொறியாளர்கள் பற்றி சுந்தர் பிச்சை பேசினார். அப்போது "இதில் நிறைய சமூக தழுவல் இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதனொரு பகுதியாக, நாம் அனைவரும் நமது பாதைகளை மாற்ற வேண்டியிருக்கலாம்" என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் பேசும்போது, "(ஏஐ டூல்களால்) மென்பொருள் பொறியாளர்களுக்கு இரண்டு விஷயங்கள் நடக்கும் என்று நான் நினைக்கிறேன். ஒன்று - ப்ரோகிராமிங்கின் ஒரு பகுதியாக நீங்கள் செய்யும் சில சிறிய உழைப்பு மேம்படும். எனவே, கூகுள் டாக்ஸ் எவ்வாறு எழுதுவதை எளிதாக்கியது என்பதைப் போலவே, காலப்போக்கில் கோடிங் செய்வது மிகவும் சுவாரஸ்யமானதாக மாறும்".
"மேலும் நீங்கள் ஒரு ப்ரோகிராமராக (Programmers) இருந்தால், காலப்போக்கில், பில்ட்-இன் அசிஸ்டென்ஸ் (Built in Assistance) உடனான இந்த கோலாப்ரேட்டிவ் ஐடிஸ் (Collaborative IDs), ப்ரோகிராமிங் செய்வதை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எளிதாக்கும் என்றும் நான் நினைக்கிறேன்" என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
மேலும் சாட்ஜிபிடி, பார்ட் போன்ற ஏஐ டூல்கள் ஆனது ப்ரோகிராமிங்கை பலருக்கும் அணுகக்கூடியதாக மாற்றும் என்றும் சுந்தர் பிச்சை நம்புகிறார். இதன் கீழ் புதிய ஆப்ஜெக்ட்ஸ் (New Objects) உருவாகும். அதன் மூலம் எதிர்காலத்தில் புதிய பணிகளையும் (New Roles) நம்மால் உருவாக்க முடியும் என்று சுந்தர் பிச்சை நம்பிக்கை அளித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் நிதியளிக்கப்படும் நிறுவனமான ஒப்பன் ஏஐ-யின் சாட்ஜிபிடி-யின் வெற்றி உங்களை ஆச்சரியப்படுத்துகிறதா என்று கேட்டபோது, "நான் அதை கண்டு அதிர்ச்சியடையவில்லை. நாங்கள் ஜிபிடி 2 மற்றும் ஜிபிடி 3-ஐ பின்பற்றி வருகிறோம். அங்குள்ள மக்களின் தரம் எங்களுக்குத் தெரியும், அதனால் அது ஆச்சரியமளிக்கவில்லை." என்று சுந்தர் பிச்சை பதிலிளித்துள்ளார்.
வரவிருக்கும் நாட்களில் கூகுளின் பார்ட் கூட விரிவடையும் என்றும் சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார். "எங்களிடம் அதிக திறன் கொண்ட மாடல்கள் உள்ளன. விரைவில், பார்ட் -ஐ எங்களின் சில திறமையான பாத்வேஸ் லாங்குவேஜ் மாடல் (PaLM) மாடல்களுக்கு மேம்படுத்துவோம். இது அதிக திறன்களை கொண்டுவரும்" என்றும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








