Home
News

ஸ்மார்ட்போன் கருவிகள் நமக்கு நல்லதா கெட்டதா.?

By Meganathan

ஸ்மார்ட்போன் எனப்படும் கைப்பேசி கருவியில்லாமல் இன்று யாரும் இல்லை என்றாகிவிட்டது. பள்ளி செல்வோர் துவங்கி வயதானோர் வரை எல்லோரிடமும் பரவலாக காணப்படும் ஸ்மார்ட்போன் மக்கள் தகவல் தொடர்பையும் தாண்டி பல்வேறு இதர விடயங்களிலும் உதவியாக இருக்கின்றது.

இது ஒரு விதத்தில் நல்லது தான் என்றாலும், சக மனிதர்களையும் தாண்டி மின்சாதன கருவி மிக முக்கியமா என்ன.??

உண்மையில் ஸ்மார்ட்போன்கள் நல்லதா கெட்டதா??

பீச்சர் போன்

பீச்சர் போன்

இன்று எல்லோரும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினாலும் இந்த ஸ்மார்ட் கருவிக்கு முப்பாட்டனாக இருந்தது பீச்சர் போன்கள் தான். பிரச்சனை இங்கு தான் துவங்கியது. பீச்சர் போன் வரவு மக்களின் பல்வேறு பழக்க வழக்கங்களை முழுமையாக மாற்றியமைத்தது.

போன் நம்பர்

போன் நம்பர்

பீச்சர் போன் வரவுக்கு முன் மக்கள் எப்போதும் கையேடு ஒன்றை வைத்திருந்தனர். அவ்வப்போது சந்திக்கும் மக்களின் தொடர்பு எண் அதாவது லேண்ட்லைன் போன் நம்பர்களை அதில் குறித்து வைத்துக் கொண்டனர். அன்று யாரும் திரையை பார்த்துக் கொண்டே மற்றவரிடம் பேசவில்லை. சிலர் கையேடு இல்லாத போதும் முடிந்த வரை போன் நம்பர்களை தங்களது நினைவில் கொண்டிருந்தனர்.

நினைவு திறன்

நினைவு திறன்

பீச்சர் போன் வரவு இந்த வழக்கத்தை மெல்ல மாற்றியது. மக்கள் தங்களது காண்டாக்ட்களை அதில் சேமித்து கொண்டனர். இந்தக் கருவி சிலரது நினைவு திறனை குறைத்தது. பின் பீச்சர் போன் கருவி அலாரம் கடிகாரம், நாளேடு போன்றவற்றை வெறும் காட்சி பொருளாக மாற்றியது. ஓரளவு பயன்பாட்டில் இருந்து வந்த கடிதம் எழுதும் வழக்கம் எஸ்எம்எஸ் எனும் டிஜிட்டல் குறுந்தகவல்களால் குறைய ஆரம்பித்தது.

டிஜிட்டல்

டிஜிட்டல்

கடிதத்திற்கான மோகம் குறைந்ததோடு மக்கள் தங்களுக்கு உண்டான அழகிய கையெழுத்தை மறக்கத் துவங்கினர். கையெழுத்து பீச்சர் போன்களில் டிஜிட்டல் மையம் கண்டது. அன்று புதிதாக இருந்த மோகம் இன்றும் தொடர்கிறது.

காட்சி பொருள்

காட்சி பொருள்

பீச்சர் போன் வரவினால் காட்சி பொருளாக மாறிய மற்றொரு கருவி தான் வானொலி. அனைவரது வீட்டிலும் சில காலம் காட்சி பொருளாக இருந்த இந்தக் கருவி இன்று பெரும்பாலான வீடுகளில் இடம் பிடிக்க முடியாமல் கிட்டதட்ட அழிந்தே விட்டது எனலாம்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

இந்தப் பட்டியலில் இன்னும் பல்வேறு கருவிகளை இணைத்துக் கொண்டே போகலாம். இந்த இடைவெளியைக் குறைக்க அறிமுகமான கருவி தான் ஸ்மார்ட்போன். அன்று இயல்பான மின்னஞ்சல், இசை, இண்டர்நெட் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளியான இந்தக் கருவி இன்று கணினிகளுக்கு மாற்றாக உருவெடுத்துள்ளது.

உள்ளங்கை

உள்ளங்கை

ஸ்மார்ட்போன் மூலம் இன்று எல்லாமே மேற்கொள்ள முடியும், பள்ளி மாணவர்களின் வீட்டுப் பாடம் செய்வதில் துவங்கி, தெரியாத தகவல்களை இண்டர்நெட் மூலம் அறிந்து கொள்வது, மின்னஞ்சல், பாடல், திரைப்படம், கேமிங், தரவுகளைச் சேமித்து கொள்வது, வங்கி சேவை, என ஒட்டு மொத்த உலகையும் நம் உள்ளங்கையில் அடக்கி விட்டது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இதோடு இத்தனை தரவுகளைப் பாதுகாக்க கைரேகை மூலம் அவற்றைப் பாதுகாக்கும் வசதி, தொலைந்து போனால் மீட்கும் வசதி உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பது என ஸ்மார்ட்போன்களின் பயன் பட்டியல் நீளும் அதே வேலையில் இந்தக் கருவி நம்மை அடியோடு மாற்றிவிட்டது என்பதே உண்மை.

ஸ்மார்ட்போன் ஆப்

ஸ்மார்ட்போன் ஆப்

தகவல் தொடர்பு என்ற ஒரே காரணத்தை கொண்டு உருவான தொலைப்பேசி கருவிகள் இன்று நம் அருகில் இருப்போரிடமிருந்து நம்மைப் பிரித்து விட்டது. ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இந்தியாவில் இருந்து இத்தாலி வரை பேச முடிகிறது, ஆனால் நம் அருகில் இருப்பவரிடமே நேரில் முகம் பார்த்து பேசுவதில்லை. பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்களும் தங்களது ஊழியர்களுடன் நேரில் பேச நேரம் ஒதுக்கும் நிலை வந்துவிட்டது.

குழந்தைகள்

குழந்தைகள்

வீட்டில் அனைவரும் ஒன்றாக ஒரே அறையில் இருந்தாலும் எல்லோர் கவனமும் ஸ்மார்ட்போன் திரையில் தான் இருக்கின்றது. ஸ்மார்ட்போன் மோகத்தின் உச்சக்கட்டம் இன்று அவை குழந்தைகளிடம் பரவலாக வழங்கப்படுவது தான். பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் பயன்படுத்துவதோடு இல்லாமல் குழந்தையின் அழுகையை நிறுத்தவும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர்.

நல்லது

நல்லது

எதுவாயினும் கால மாற்றம் மற்றும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக மக்களுக்கு உதவும் வகையில் கண்டுபிடிக்கப்படும் கருவிகள் அதிகம் வெளியாவது நமக்கு நல்ல விடயம் தான்.

தீங்கு

தீங்கு

இருந்தும் வெளியாகும் புதிய கருவி அல்லது கண்டுபிடிப்புகளையும் அளவோடு பயன்படுத்துவதோடு நிறுத்தி கொள்ள வேண்டும், மாறாக வெளியாகும் கருவிக்கு நாம் அடிமையாவது நமக்கும் நமது சமூகத்திற்கும் தீங்கினை விளைவிக்கும்.

Best Mobiles in India

English summary
Is Smartphone usage Good or Bad Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X