நம்பலாமா? க்கீ., கீ.,: நிச்சயமாவா? க்கீ., கீ: இன்று இந்தியாவில் வெளியாகிறதா பப்ஜி?

|

நான் வருவது உறுதி ஆனால் நேரமும், தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீண்டகாலமாக நீடித்து வந்த கேள்விக்குக் கூட பதில் கிடைத்துவிட்டது. ஆனால் தடை செய்யப்பட்ட நாளில் இருந்து இப்போ வரும் அப்போ வரும் என்று பப்ஜி மொபைல் இந்தியா அறிமுகம் குறித்த தகவல் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது.

Pubg Mobile India

Pubg Mobile India

அதன்படி Pubg Mobile India விளையாட்டின் அறிமுகம் ஜனவரி 19 இன்று நடைபெறும் என தகவல்கள் பரவி வருகிறது. இதையடுத்து பப்ஜி வீரர்கள் தங்களது மொபைல் போனை முழு சார்ஜ் செய்து களத்தில் இறங்க தயாராகி வருகின்றனர்.

பப்ஜி மொபைல் இந்தியா வெளியீடு

பப்ஜி மொபைல் இந்தியா வெளியீடு

பப்ஜி மொபைல் இந்தியா வெளியீடு குறித்த தகவல் செப்டம்பர் 2020 முதல் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது. அதேபோல் இந்தியாவில் விளையாட்டு மீண்டும் அறிமுகம் செய்வது குறித்து ஏராளமான டீசர்கள் வெளியாகின. அதேபோல் பப்ஜி போஸ்டரில் தீபத்தின் படத்தை பதிவிட்டு தீபாவளி என்று வெளியாகும் எனவும் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் எனவும் தகவல்கள் பரவின.

இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை

இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை

இந்த நிலையில் பப்ஜி மொபைல் இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என இந்திய அரசு வெளிப்படையாக தெரிவித்தது. அரசு தரப்பில் வெளியான தகவலுக்கு பிறகும் சமூகவலைதளங்களில் பப்ஜி வெளியீடு குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது.

கூகுள் பே, போன்பே மூலம் மொய் வசூல்: அப்பறம் சகல சாப்பாடு எப்படி ஸ்விக்கியா, சொமாட்டோவா?கூகுள் பே, போன்பே மூலம் மொய் வசூல்: அப்பறம் சகல சாப்பாடு எப்படி ஸ்விக்கியா, சொமாட்டோவா?

வெளியான தகவல் தவறானது

வெளியான தகவல் தவறானது

ஜனவரி 15 முதல் ஜனவரி 19 ஆம் தேதிக்குள் பப்ஜி மொபைல் இந்தியா குறித்த ஒரு பெரிய அறிவிப்பு வரும் என தகவல்கள் பரவின. ஆனால் இந்த தகவல் தவறானது. பப்ஜி மொபைல் இந்தியா வெளியீடுக்கு இந்திய அரசிடம் இன்னும் அனுமதியே வாங்கவில்லை என கூறப்படுகிறது.

விரைவில் வரும்

விரைவில் வரும்

பப்ஜி மொபைல் இந்தியா மார்ச் 2021 இல் தொடங்குவதை இலக்காகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பப்ஜி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விரைவில் வரும் (Coming Soon) என்றுதான் காட்டப்படுகிறது. இந்த விளையாட்டு தற்போது, அதான் இந்த நாளில் அறிமுகமாகாது என்பதே நிதர்சனமான உண்மையாக கருதப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Is Pubg Mobile India Launching Today?- Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X