புதிய குழப்பம் : உங்கள் ஜியோ சிம் போஸ்ட்பெயிட் சிம் ஆக மாறுமா.?

|

சுமார் 8 மாதங்களுக்கு முன்னர், ஜியோ என்றவொரு புதிய இந்தியாவின் தகவல்தொடர்பு ஆப்ரேட்டர் அறிமுகமாகி 4ஜி டேட்டா முதல் எஸ்எம்எஸ் மற்றும் குரல் & வீடியோ என பல பிரீமியம் சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அறிவித்த வேகத்தில் ஒரு ஜியோ சிம் அட்டை கிடைக்க என்னவெல்லாம் வழிகள் இருக்கிறதோ அத்தனை வழிகளையும் பின்பற்றி ஆள் ஆளுக்கொரு ஜியோ சிம் பெற்றதை ஒரு மாபெரும் யுத்தத்தில் வென்றது போன்ற உணர்வை நமக்கு வழங்கியது.

சிறை கம்பிகளுக்குள் இருந்துக்கொண்டு "நடுவுல இருந்த கம்பியை மறந்துட்டோமே" என்று வடிவேலு கூறுவது போல சிம் கார்ட் ஒன்று கைக்கு வந்தால் போதும், அதைக்கொண்டு இலவச 4ஜி டேட்டாவை நான் அனுபவித்தால் போதும் என்ற அவசரத்தில் நாம் ஜியோ சேவையின் போஸ்ட்பெயிட் சிம் அட்டையை வாங்கினோமா அல்லது ப்ரீபெயிட் சிம் அட்டையை வாங்கினோமா என்பதை நம்மில் பலர் கவனிக்க தவறிவிட்டோம்.

அட்டை வாங்கும் தருணத்தில்

அட்டை வாங்கும் தருணத்தில்

இன்னும் கூறப்போனால் நம்மில் பலருக்கு நமது ஜியோ தொலைபேசி எண் கூட தெரியாது. அப்படியிருக்க எப்படி நாம் இது போஸ்ட்பெயிட் சேவையா.? ப்ரீபெய்ட் சேவையா என்பதை யோசித்திருப்போம். சிம் அட்டை வாங்கும் தருணத்தில் இது சார்ந்த கேள்விகளை சிம் விற்பனை செய்பவரும் சரி, வாங்குபவரும் சரி - இரண்டு தரப்பினரும் கேட்கவில்லை என்பதே நிதர்சனம்.

போஸ்ட்பெயிட் சேவையாக மாறும்

போஸ்ட்பெயிட் சேவையாக மாறும்

இம்மாதிரியான நிலைப்பாட்டில் தற்போது பெரும்பாலோரான ஜியோ சேவை வாசிகளின் சிம் அட்டை போஸ்ட்பெயிட் சேவையாக உள்ளது என்றும் கட்டண சேவைகள் முழுமையாக செயல்படுத்தப்பட்ட பின்னர் போஸ்ட்பெயிட் சேவையாக மாறும் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரீபெய்ட்.?? போஸ்ட் பெயிட்

ப்ரீபெய்ட்.?? போஸ்ட் பெயிட்

இந்நிலையில் உங்களிடம் இருக்கும் ஜியோ சிம் ஆனது ப்ரீபெய்ட் சிம் அட்டையா.?? அல்லது போஸ்ட் பெயிட் சிம் அட்டையா.? என்பதை கண்டறிவது எப்படி.? - பின்வரும் எளிமையான வழிமுறைகளை முதலில் பின்பற்றவும்.

வழிமுறை #01

வழிமுறை #01

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள மைஜியோ பயன்பாட்டைத் திறக்கவும். பின்னர் அதில் முதலில் தோன்றும் மைஜியோ என்ற டாப் தனை தேர்வு செய்யவும்.

வழிமுறை #02

வழிமுறை #02

பின்னர் சைன் இன் தேர்வு செய்து உள்நுழையவும். வெற்றிகரமாக உள்நுழைந்த பின்னர் செட்டிங்ஸ் அதாவது இடது மூலையில் காட்சியளிக்கும் மூன்று குறுகிய இணை கோடுகளை டாப் செய்யவும்.

வழிமுறை #03

வழிமுறை #03

பின்னர் விருப்ப பட்டியலில் இருந்து மை பிளான்ஸ் என்ற தேர்வை நிகழ்த்த உள்ளே உங்கள் எண் விவரங்கள் மற்றும் அது ப்ரீபெயிட் சேவையை வழங்குகிறாதா.? அல்லது போஸ்ட் பெயிட் சேவையயை வழங்குகிறதா என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

ப்ரீபெய்ட்.?? போஸ்ட் பெயிட்.?

ப்ரீபெய்ட்.?? போஸ்ட் பெயிட்.?

இந்நிலையில் உங்களிடம் இருக்கும் ஜியோ சிம் ஆனது ப்ரீபெய்ட் சிம் அட்டையா.?? அல்லது போஸ்ட் பெயிட் சிம் அட்டையா.? என்பதை கண்டறிவது எப்படி.? - பின்வரும் எளிமையான வழிமுறைகளை முதலில் பின்பற்றவும்.

ரூ.303/-

ரூ.303/-

போஸ்ட்பெயிட் பயனர்களுக்கான கட்டண திட்டங்கள் என்று பார்க்கையில் : ரூ.303/-க்கு ப்ரைம் பயனர்கள் 1 ஜிபி தரவு பயன்பாட்டு எல்லை கொண்ட 30 ஜிபி அளவிலான 4ஜி தரவு, இலவச எஸ்எம்எஸ் பெறுவர், ப்ரைம் பயனர்கள் அல்லாதவர்களுக்கு டேட்டா 2.5 ஜிபியாக குறைக்கப்படும்.

ரூ.499/-

ரூ.499/-

ரூ.499/-க்கு ப்ரைம் பயனர்கள் 2 ஜிபி தரவு பயன்பாட்டு எல்லை கொண்ட 60 ஜிபி அளவிலான 4ஜி தரவு, இலவச எஸ்எம்எஸ் பெறுவர், ப்ரைம் பயனர்கள் அல்லாதவர்களுக்கு டேட்டா 5 ஜிபியாக குறைக்கப்படும்.

ரூ.999/-

ரூ.999/-

ரூ.999/-க்கு ப்ரைம் பயனர்கள் 60 ஜிபி அளவிலான 4ஜி தரவு, இலவச எஸ்எம்எஸ் பெறுவர், ப்ரைம் பயனர்கள் அல்லாதவர்களுக்கு டேட்டா 12.5 ஜிபியாக குறைக்கப்படும்.

பூஸ்டர் பேக்ஸ்

பூஸ்டர் பேக்ஸ்

பூஸ்டர் திட்டங்களை பொறுத்தமட்டில் ரூ.51/-க்கு 1 ஜிபி, ரூ.91/-க்கு 2 ஜிபி, ரூ.201/-க்கு 5 ஜிபி மற்றும் ரூ.301/-க்கு 10 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா பெறலாம்.

தண் தணா தண்

தண் தணா தண்

மறுபக்கம் ஜியோ சமீபத்தில் அறிமுகம் செய்த ரூ.309/- முதல் புதிய தண் தணா தண் அன்லிமிடெட் சலுகைகளை பற்றிய விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Read more about:
English summary
How do I identify whether the JIO sim is a postpaid or prepaid? Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X