பணம் கொடுத்து பயன்படுத்துற அளவுக்கு Telegram Premium-ல அப்படி என்ன தான் இருக்கு?

|

நீங்கள் எவ்வளவு பெரிய வாட்ஸ்அப் யூசர் ஆக இருந்தாலும் சரி, 24 மணி நேரமும் வாட்ஸ்அப் வழியாக மெசேஜ், வாய்ஸ் மெசேஜ், வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால்களை பறக்க விட்டாலும் சரி, உங்கள் ஸ்மார்ட்போனில் நிச்சயமாக டெலிகிராம் ஆப் இருக்கும்!

அதுதான் டெலிகிராம் ஆப்பின் மிகப்பெரிய வெற்றி!

டெலிகிராமின் கூற்றுப்படி, இந்த பிளாட்பார்ம் 700 மில்லியன், அதாவது 70 கோடி 'மன்த்லி ஆக்டிவ் யூசர்களை' (Monthly active users) தன்வசம் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட எண்ணிக்கையிலான யூசர்களை கொண்டிருக்கும் டெலிகிராம் அதன் கட்டண சேவையை கொண்டு வந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. அது - டெலிகிராம் ப்ரீமியம் (Telegram Premium) ஆகும்!

காசு கொடுத்து யூஸ் பண்ற அளவுக்கு இது வொர்த்-ஆ!

காசு கொடுத்து யூஸ் பண்ற அளவுக்கு இது வொர்த்-ஆ!

இனிமேல் டெலிகிராம் ஆப் ஆனது பிரீமியம் சந்தா திட்டமாகவும் அணுக கிடைக்கும் மற்றும் டெலிகிராம் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த சேவை இந்த மாதமே அறிமுகம் செய்யப்படும்.

கட்டண விவரங்களை பொறுத்தவரை டெக் க்ரன்ச் வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, டெலிகிராமின் புதிய பிரீமியம் சேவைக்கான கட்டணமானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.390 முதல் ரூ.470 வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணம் கொடுத்து பயன்படுத்தும் அளவிற்கு டெலிகிராம் பிரீமியம் சேவையில் அப்படி என்னதான் இருக்கிறது? அதைப்பற்றி விரிவாக பார்க்கும் முன்னர், இந்த சேவை யாருக்கெல்லாம் கிடைக்கும்? யார் எல்லாம் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்? என்பதை பற்றி பார்த்து விடலாம்.

யாரெல்லாம் - பே அண்ட் யூஸ்; யாரெல்லாம் - ப்ளீஸ் வெயிட்!

யாரெல்லாம் - பே அண்ட் யூஸ்; யாரெல்லாம் - ப்ளீஸ் வெயிட்!

டெலிகிராமின் 'பெயிட் வெர்ஷன்' ஆன ​​டெலிகிராம் பிரீமியம், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரண்டு பிரதான இயங்குதளங்களுக்குமே வந்துள்ளது. இந்தியாவில், ஐஓஎஸ் ஆப் வெர்ஷன் 8.8 அப்டேட்டின் ஒரு பகுதியாக இந்த சேவை அணுக கிடைக்கிறது.

மேலும் இது ஆண்ட்ராய்டு யூசர்களுக்காகவும் வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் இன்னும் குறிப்பிட்ட அப்டேட்டை பெறவில்லை என்றால், சிறிது நாட்கள் காத்திருப்பது நல்லது.

இனிமேல்.. இந்த பெயிட் சர்வீஸின் கீழ் டெலிகிராம் நிறுவனம் அப்படி என்ன ஸ்பெஷலாக வழங்குகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

4 மணி நேர வீடியோவை கூட அப்லோட் செய்யலாம்!

4 மணி நேர வீடியோவை கூட அப்லோட் செய்யலாம்!

அதாவது டெலிகிராம் பிரீமியம் சந்தாதாரர்கள் 4ஜிபி வரையிலான ஃபைல்களை கூட அப்லோட் செய்து, அனுப்ப முடியும். அதாவது ஒரு 4 மணிநேர 1080p வீடியோவை அல்லது 18 நாட்கள் நீளும் ஹை-குவாலிட்டி ஆடியோவை கூட டெலிகிராம் வழியாக அனுப்பலாம்!

VPN பயன்படுத்த தடை; இந்திய அரசாங்கம் அதிரடி உத்தரவு; இந்த லிஸ்டில் Google Drive-வும் இருக்கு!VPN பயன்படுத்த தடை; இந்திய அரசாங்கம் அதிரடி உத்தரவு; இந்த லிஸ்டில் Google Drive-வும் இருக்கு!

வரம்புகள் - நீட்டிக்கப்பட்டுள்ளன!

வரம்புகள் - நீட்டிக்கப்பட்டுள்ளன!

நீங்கள் ஒரு பிரீமியம் யூசராக இருந்தால், "ஆப்பில் உள்ள எல்லாவற்றுக்கும்" அதிகரிக்கப்பட்ட வரம்புகளை பெறலாம்.

பிரீமியம் யூசர்கள் "1000 சேனல்களை கூட ஃபாலோ செய்யலாம், 200 சாட்கள் வரையிலாக 20 சாட் ஃபோல்டர்களை உருவாக்கலாம், எந்த டெலிகிராம் ஆப்பிலும் நான்காவது அக்கவுண்ட்-ஐ சேர்க்கலாம், மெயின் லிஸ்டில் 10 சாட்களை 'பின்' செய்யலாம் மற்றும் 10 ஃபேவரைட் ஸ்டிக்கர்களை 'சேவ்' செய்யலாம்.

கூடுதலாக ஒரு பிரீமியம் மெம்பர் ஆக, லிங்க் உடனான மிகவும் நீளமான பயோ-வை கூட நீங்கள் எழுதலாம், உடன் மீடியா கேப்ஷன்களில் அதிக எழுத்துக்களை சேர்க்கலாம் மற்றும் 400 ஃபேவரைட் GIFகள் வரை அணுகலாம்.

வேகமான டவுன்லோட்ஸ்; வாய்ஸ்-டூ-டெக்ஸ்ட் கான்வேர்ஷேஷன்!

வேகமான டவுன்லோட்ஸ்; வாய்ஸ்-டூ-டெக்ஸ்ட் கான்வேர்ஷேஷன்!

மேலும் பிரீமியம் சேவையின் கீழ், சந்தாதாரர்கள் மீடியா மற்றும் ஃபைல்களை முன்னெப்போதை விடவும் வேகமாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

உடன் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு வாய்ஸ் மெசேஜ்களை டெக்ஸ்ட் ஆக மாற்றும் விருப்பமும் அணுக கிடைக்கும்.

தனித்துவமான ஸ்டிக்கர்ஸ் மற்றும் ரியாக்ஷன்ஸ்!

தனித்துவமான ஸ்டிக்கர்ஸ் மற்றும் ரியாக்ஷன்ஸ்!

பிரீமியம் சாந்தாவின் கீழ் டஜன் கணக்கான டெலிகிராம் ஸ்டிக்கர்கள் ஃபுல் ஸ்க்ரீன் அனிமேஷன்களுடன் அணுக கிடைக்கும் மற்றும் பிரீமியம் யூசர்களுக்கான ஸ்டிக்கர் கலெக்ஷன் மாதாந்திர அப்டேட்களையும் பெறும்.

உடன் பிரீமியம் யூசர்களுக்காக 10 க்கும் மேற்பட்ட புதிய ஈமோஜிகளையும் இந்த மெசேஜிங் பிளாட்பார்ம் சேர்த்துள்ளது.

Netflix இல் தெரியாம கூட இந்த 3 மேட்டரையும் செஞ்சிடாதீங்க.. இல்லனா Account சோலி முடிஞ்ச்சு!Netflix இல் தெரியாம கூட இந்த 3 மேட்டரையும் செஞ்சிடாதீங்க.. இல்லனா Account சோலி முடிஞ்ச்சு!

அனிமேடட் ப்ரொபைல் பிக்சர் மற்றும் பிரீமியம் பேட்ஜ்கள்!

அனிமேடட் ப்ரொபைல் பிக்சர் மற்றும் பிரீமியம் பேட்ஜ்கள்!

பிரீமியம் சந்தாதாரர்களால் தங்கள் ப்ரொபைல் வீடியோக்களை அனிமேட் செய்துகொள்ள முடியும். மேலும், அவர்கள் பிரீமியம் ஸ்பெஷல் பேட்ஜையும் பெறுவார்கள். இது சாட் லிஸ்ட், சாட் ஹெட்ஸ் மற்றும் க்ரூப்களில் உள்ள மெம்பர் லிஸ்ட்களில் அவரவர்களின் பெயருக்கு அருகில் தோன்றும்.

புதிய ஆப் ஐகான்ஸ்; சாட் மேனேஜ்மேண்ட் அம்சங்கள்; 'நோ' விளம்பரங்கள்!

புதிய ஆப் ஐகான்ஸ்; சாட் மேனேஜ்மேண்ட் அம்சங்கள்; 'நோ' விளம்பரங்கள்!

பிரீமியம் யூசர்கள் தங்கள் ஹோம் ஸ்க்ரீனில் சேர்க்கக்கூடிய புதிய ஐகான்களையும் பெறுவார்கள்.இதன் கீழ் நீங்கள் பிரீமியம் ஸ்டார், நைட் ஸ்கை அல்லது டர்போ-பிளேனிலிருந்து ஒன்றை தேர்வு செய்யலாம்.

மேலும் டீபால்ட் சாட் ஃபோல்டரை மாற்றுவது போன்ற சாட் லிஸ்ட்-ஐ ஒழுங்கமைக்க கூடிய புதிய டூல்களையும் பெறுவீர்கள்.

"லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்" ஆக டெலிகிராம் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரங்கள் எதுவும் தோன்றாது.

Best Mobiles in India

English summary
Is it worth paying money to access Telegram Premium Subscription in India Check the price New features

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X