UPI வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் ரூ.10 - ரூ.20 எக்ஸ்ட்ரா கட்டணம்-ஆ? அமைச்சர் விளக்கம்!
இந்திய ரயில்வே துறையானது (Indian Railways) கடந்த ஜூலை மாதத்தில், டிக்கெட் முறையில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி அமலுக்கும் கொண்டுவந்தது. இதில் முகவர்களுக்கான திருத்தப்பட்ட தட்கல் முன்பதிவு நேரங்கள் மற்றும் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பை கட்டாயமாக்குதல் ஆகியவைகள் அடங்கும்.
இதற்கிடையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, ராஜ்யசபா எம்.பி ஆன சஞ்சய் சிங் (Rajya Sabha MP Sanjay Singh), ரயில்வே அமைச்சர் ஆன அஸ்வினி வைஷ்ணவிடம் (Railway Minister Ashwini Vaishnaw) யுபிஐ வழியிலான இரயில் டிக்கெட் முன்பதிவு (IRCTC ticket booking via UPI) தொடர்பான ஒரு கேள்வியை கேட்டார்.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) ஆனது யுபிஐ அல்லது பிற முறைகள் மூலம் முன்பதிவு செய்யும் போது, ஏசி அல்லாத டிக்கெட்டுகளுக்கு ரூ.10 மற்றும் ஏசி டிக்கெட்டுகளுக்கு ரூ.20 என்ற விகிதத்தில் டிஜிட்டல் கட்டணங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறதா என்று கேட்டார்.
மேலும் ரொக்கமில்லா பொருளாதாரம் மற்றும் யுபிஐ பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உந்துதலை மீறி, இதுபோன்ற கட்டணங்களை வசூலிக்கப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வைஷ்ணவ், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை வழங்கியுள்ளதால், பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, முன்பதிவு கவுண்டர்களுக்குச் செல்வதில் இருந்து விடுபடுகிறார்கள். இதனால் பயண நேரம் மற்றும் போக்குவரத்து செலவுகள் மிச்சமாகும் என்று கூறினார்.
மேலும் ரயில்வே அமைச்சர் முன்னதாக வெளியிட்ட எழுத்துப்பூர்வ அறிக்கையில், ஆன்லைன் டிக்கெட் வசதியை வழங்குவதில், ஐஆர்சிடிசி கணிசமான செலவை செய்கிறது. மேலும், டிக்கெட் உள்கட்டமைப்பின் பராமரிப்பு, மேம்படுத்தல் மற்றும் விரிவாக்கத்தில் ஏற்படும் செலவை ஈடுகட்ட, ஐஆர்சிடிசி மிக குறைந்த வசதி கட்டணத்தை வசூலிக்கிறது என்று கூறியிருந்தார்
ஐஆர்சிடிசி வழங்கும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி இந்திய ரயில்வேயின் மிகவும் பயணிகளுக்கு உகந்த முயற்சிகளில் ஒன்றாகும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் சுமார் 87% ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுகின்றன என்தையும் ரயில்வே அமைச்சர் ஆன அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.
இதேபோல யுபிஐ பயனர்கள், விரைவில் யுபிஐ வழியிலான பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்கிற விவாதத்திற்கு, குழப்பத்திற்கு, அடிபோட்டு இருந்தார் ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா. பின்னர் இது பேசுபொருளாக ஆன பின்னர், அவர் ஒரு புதிய விளக்கத்தை வெளியிட்டு இருந்தார்.
முன்னதாக யுபிஐ சேவையானது புதிய உயரங்களை எட்டியுள்ள நிலையில், இந்த அமைப்பை நிதி ரீதியாக நிலையானதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஆர்பிஐ ஆளுநர், இந்த அமைப்பை இலவசமாக வைத்திருக்க அரசாங்கமானது, வங்கிகள் மற்றும் பிற பங்கேற்பாளர்களுக்கு மானியம் வழங்கி வருவதாகவும், ஆனால் செலவுகள் செலுத்தப்பட வேண்டும்; யாராவது அந்த செலவை ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்
அதனை தொடர்ந்து யுபிஐ சேவையின் நிலைத்தன்மையை பராமரிக்க "யாராவது" பணம் செலுத்த வேண்டி இருக்கும் தான். ஆனால் அதற்கு "பயனர்கள்' பணம் செலுத்துவார்கள் என்று அர்த்தமல்ல என்று ஆர்பிஐ ஆளுநர் விளக்கம் அளித்தார். அதாவது யுபிஐ சேவைக்கு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்னு தான் கூறவில்லை என்று கூறியுள்ளார்.
யார் பணம் செலுத்துகிறார்கள் என்பது முக்கியம், ஆனால் ஒருவர் பில் செலுத்துவது அவ்வளவு முக்கியமல்ல. நிலைத்தன்மைக்கு, கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ, யாரோ ஒருவர் செலவுகளுக்கு பணம் செலுத்துகிறார்கள். அரசாங்கம் அதற்கு மானியம் வழங்குகிறது... பயனர்கள் பணம் செலுத்த வேண்டும் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை," என்றும் மல்ஹோத்ரா தெளிவுபடுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications








