தவறாக போன Apple ஸ்கெட்ச்.. பரிதாப நிலையில் iPhone 14 Plus!

|

ஏறத்தாழ இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடலை அறிமுகம் செய்யும் எனவும் இதில் இந்தெந்த அம்சங்கள் எல்லாம் இடம்பெறும் எனவும் தகவல்கள் பரவத் தொடங்கியது.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸை கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்த அடுத்த இரண்டு நாளில் இருந்தே குறிப்பிட்ட மாடல்களின் முன்கூட்டிய ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கியது அனைவரும் அறிந்ததே.

ப்ரீ ஆர்டர் விவரங்கள்

ப்ரீ ஆர்டர் விவரங்கள்

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் இல் Apple iPhone 14, iPhone 14 Plus மற்றும் Apple iPhone 14 Pro, 14 Pro Max மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max ஆகியவை apple.com/in/store, க்ரோமா, பிளிப்கார்ட், அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் விஜய் விற்பனை தளங்களில் செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் முன்கூட்டியே ஆர்டருக்கு கிடைக்கிறது.

iPhone 14 விற்பனை விவரங்கள்

iPhone 14 விற்பனை விவரங்கள்

அதேபோல் iPhone 14 செப்டம்பர் 16 முதலும் iPhone 14 Plus அக்டோபர் 7 முதலும் விற்பனைக்கு கிடைக்கும்.

iPhone 14 Pro மற்றும் 14 Pro Max ஆகிய மாடல்கள் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும்.

ஐபோன் 14 மற்றும் 14 ப்ளஸ்

ஐபோன் 14 மற்றும் 14 ப்ளஸ்

ஐபோன் 14 தொடரில் ப்ரீமியம் மாடலாக ப்ரோ வகைகள் இருக்கிறது. புதிய ஐபோன் 14 மற்றும் 14 ப்ளஸ் மாடல்களானது பழைய ஐபோன் 13 போன்ற வடிவமைப்புடன்ஐபோன் 13 இல் இருக்கும் அதே சிப்செட்டை கொண்டிருக்கிறது.ஆனால் ப்ரோ மாடல்கள் இதில் இருந்து வேறுபட்டு இருக்கிறது.

நான்கு மாடல்களின் விற்பனை தேதி

நான்கு மாடல்களின் விற்பனை தேதி

ஐபோன் 14 சீரிஸ் இல் இருக்கும் நான்கு மாடல்களின் விற்பனை தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரீ ஆர்டர்கள் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பிரபல ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோ ஐபோன் 14 ப்ரீ ஆர்டர் நிலை எந்தளவில் உள்ளது என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

மோசமான வரவேற்பை பெற்று வரும் ஐபோன் 14 ப்ளஸ்

மோசமான வரவேற்பை பெற்று வரும் ஐபோன் 14 ப்ளஸ்

பிரபல ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோ தகவல்படி, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ் மாடல்களின் ப்ரீ ஆர்டர்களை பொறுத்தவரை, ஐபோன் 13 மினி மற்றும் ஐபோன் எஸ்இ 3 ஐ விட மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதாவது ஐபோன் 13 மினி மற்றும் ஐபோன் எஸ்இ 3 ஆப்பிள் ஐபோன்களில் மிகவும் மோசமான வரவேற்பு பெற்ற மாடல்கள் ஆகும்.

அதை விட மோசமான வரவேற்பை ஐபோன் 14 ப்ளஸ் பெற்று வருவதாக மிங்-சி குவோ குறிப்பிட்டுள்ளார்.

நல்ல வரவேற்பை பெற்று வரும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்

நல்ல வரவேற்பை பெற்று வரும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்

மேலும் இதுகுறித்து குவோ கூறுகையில், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸுடன் ஒப்பிடும்போது முன்கூட்டிய ஆர்டர்களில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது.

iPhone 13 Pro உடன் ஒப்பிடும்போது iPhone 14 Proக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது. இந்த 2 ப்ரோ மாடல்களுக்கும் டிமாண்ட் அதிகரித்து வருவதாக குவோ குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும் காரணத்தால் ப்ரீ ஆர்டர் செய்தாலும் டெலிவரிக்கு நீண்ட காத்திருப்பு தேவை என தெரிவித்துள்ளார்.

வலுவான தேவை இருக்கும்

வரும் காலங்களில் ப்ரோ மாடல்களின் ஏற்றமதி நிலை என்னவென்று சரியாக தெரியவில்லை. இருப்பினும் நவம்பர் வரை ப்ரோ மாடல்களுக்கான தேவை வலுவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

தவறாக கணித்ததா ஆப்பிள்?

தவறாக கணித்ததா ஆப்பிள்?

ஐபோன் 13 தொடரில் ஐபோன் 13 மினி அறிமுகமானது. ஆனால் ஐபோன் 14 தொடரில் மினி மாடல் இடம்பெறவில்லை. இதற்கு பதிலாக ஐபோன் 14 ப்ளஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆப்பிள் கவனமாக கணித்து மினி மாடலை தவிர்ததுவிட்டு ஐபோன் 14 சீரிஸ் இல் பிளஸ் மாடலை அறிமுகம் செய்தது. இருப்பினும் ஐபோன் 14 ப்ளஸ் போதிய வரவேற்பை பெறவில்லை எனவும் குறைவான முன்பதிவை மட்டுமே இந்த மாடல் பெற்று வருவதாகவும் குவோ குறிப்பிட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
Is iPhone 14 Plus a Failure Model? Apple iPhone 14 Series Demand Details Here

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X