மே 26முதல் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா இந்தியாவில் தடை?- உண்மை என்ன., புதிய விதிமுறைகள் இதோ!

|

இந்திய அரசு இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021-ன் கீழ் செயல்படாத காரணத்தால் இன்று முதல் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஓடிடி தளங்கள் மே25 முதல் செயல்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. டுவிட்டர், பேஸ்புக் போன்ற குறிப்பிட்ட அளவிலான பயனர்களை கொண்ட சமூகவலைதளத்திற்கு இந்திய அரசு புதிய சட்ட திட்டங்களை அறிமுகம் செய்தது. இதை சமூகவலைதளங்கள் பின்பற்றுவதற்கான கால அவகாசம் மே 25 ஆம் தேதி வரை வழங்கப்பட்டது.

இந்திய அரசு இடைநிலை வழிமுறைகள்

இந்திய அரசு இடைநிலை வழிமுறைகள்

இந்திய அரசு இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021 கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி இந்திய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. இதை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் மே 25 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டது. மத்திய அரசு குறிப்பிட்ட பெரும்பாலான விஷயங்களை சமூகவலைதளங்கள் பின்பற்றவில்லை. இதையடுத்து இந்தியாவில் இந்த தளங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.

குறைகளை கேட்டறியும் அதிகாரி

குறைகளை கேட்டறியும் அதிகாரி

சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ர விதிமுறைகள் விதிக்கப்பட்டது. கூ என்ற இந்திய சமூகவலைதளம் தவிர வேறு எந்த முன்னணி சமூகவலைதளம் நிறுவனத்தின் குறைகளை கேட்கும் அதிகாரி போன்ற எதையும் நியமிக்கவில்லை.

இடையீட்டாளர்கள் என்ற நிலை இழக்க நேரிடும்

இடையீட்டாளர்கள் என்ற நிலை இழக்க நேரிடும்

இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் இடையீட்டாளர்கள் என்ற நிலை சமூகவலைதளம் இழக்க நேரிடும். மேலும் அனைத்து குற்றச் செயல்களுக்கும் அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்கும் நிலை உருவாகும். இது எதையும் சமூகவலைதளங்கள் பின்பற்றவில்லை, இது அரசு தரப்பை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

தனிநபர் கணக்குகள் தனிச்சையாக முடக்குதல், மத ரீதியான அவதூறுகளுக்கு எதிரான நடவடிக்கை, பாலியல் புகார்கள் போன்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மாதத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன அவற்றில் எத்தனை தீர்க்கப்பட்டன போன்ற அறிக்கையும் சமூகவலைதளம் தரவில்லை. சில சமூகவலைதளங்கள் கால அவகாசம் கோரியுள்ளன. கருத்துப்படி உடனடியாக தடைவிதிக்கப்படுமா என்றால் அது கேள்விக்குறியே, சமூகவலைதளங்கள் இதை நிறைவேற்ற கால அவகாசம் கோரலாம், இதற்கான கால அவகாசம் அரசு தரப்பில் நீட்டிக்கப்படலாம் என்பதே நிதர்சணமான உண்மை.

OTT தளங்கள், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம்

OTT தளங்கள், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம்

பிப்ரவரி 25 அன்று, OTT தளங்கள், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்காக தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 ஐ அரசு வெளியிட்டது. புதிய தகவல் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் சமூகவலைதள பயனர்கள் தங்கள் தளங்களின் உள்ளடக்கத்திற்கு மிகவும் பொறுப்பானவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் மாற்றுவதற்கான நடவடிக்கையாகும்.

ஆறு மாதம் வரை கால அவகாசம்

ஆறு மாதம் வரை கால அவகாசம்

புதிய சமூக ஊடக விதிகள் மூலம், இந்தியாவின் இறையாண்மை பாதிப்பு, அரசின் பாதுகாப்பு விவகாரம், பாலியன் புகார் போன்ற சர்ச்சை பதிவுகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 36 மணி நேரத்திற்குள் அந்த உள்ளடக்கத்தை அகற்ற சமூகவலைதள புதிய திருத்தம் வழிவகுக்கும். மேலும் இந்த விவகாரத்தை தீர்க்க நாட்டில் ஒரு அதிகாரி நியமித்து புகார்களை கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் (இந்தியாவில் வசிக்கும் ஊழியர்கள்) ஆகியோரை நியமிக்க அனைத்து சமூகவலைதளத்திற்கும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டது. பெரும்பாலான சமூகவலைதளம் இந்த விதிகளை பின்பற்ற தவறவிட்டன. அரசு இதற்கு வழங்கிய 3 மாத கால அவகாசம் மே 25 உடன் முடிவடைகிறது. ஆனால் இந்தியாவில் பேஸ்புக் தடை, இன்ஸ்டாகிராம் தடை அல்லது டுவிட்டர் தடை இருக்குமா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சில தளங்கல் ஆறு மாதம் வரை கால அவகாசம் கோரியுள்ளன. அதேபோல் சில தளங்கள் அமெரிக்காவில் இருக்கும் தலைமையின் பதிலுக்கு காத்திருக்கின்றன. இருப்பினும் இதற்கு கால அவகாசம் நீடிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Is Facebook, Twitter, Instagram ban in India?: Centre's New Guidelines For Social Media

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X