எல்லாமே போலி தானா? அதிகமாக புழங்கும் போலி iPhone-கள்.. எப்படி ஒரிஜினல் ஐபோனை கண்டறிவது? இதை தெரிஞ்சுக்கோங்க..
ஆப்பிள் சமீபத்தில் உலகளவிலும், இந்தியாவிலும் ஐபோன் 16 தொடர் (iPhone 16 Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இந்த வெளியீட்டைத் தொடர்ந்து, நிறுவனம் சில பழைய ஐபோனை மாடல்களை நிறுத்தியுள்ளது. அதேபோல், ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) போன்ற மாடல்களின் விலையை ரூ. 10,000 வரை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு பல புதிய ஐபோன் வாங்க விரும்புவோரை ஈர்த்துள்ளது. இருப்பினும், போலியான ஐபோன்களின் புழக்கத்தினால், மக்கள் இப்போது கவலையடைந்துள்ளனர்.
இந்தக் கவலைகளைப் போக்க, உண்மையான ஐபோன் எது? மற்றும் போலியான ஐபோன்களை எப்படி அடையாளம் கண்டு எளிமையாக பிரித்தெடுப்பது பொண்டேயா சில முக்கியமான குறிப்புகளை தான் இங்கே பார்க்கவிருக்கிறோம். கீழே குறிப்பிட்டுள்ள குறிப்புகளை கட்டாயம் நீங்கள் தெரிந்துவைத்துக்கொள்வது பாதுகாப்பானது. உங்களிடம் ஐபோன் இல்லை என்றாலும், உங்கள் நண்பர் கையில் இருக்கும் ஐபோன் ஒரிஜினலா இல்லையா என்பதை நீங்களே சோதனை செய்து உதவலாம்.

எல்லாமே போலி தானா? ஒரிஜினலுக்கு இடையே அதிகமாக புழங்கும் போலி iPhone-கள்:
ஒவ்வொரு உண்மையான ஐபோன் சாதனமும் IMEI எண்ணுடன் வருகிறது. அதைத் தெரிந்துகொள்ள, ஐபோன் செட்டிங்ஸுக்குச் சென்று, General அம்சத்தை தேர்ந்தெடுத்து, About விருப்பத்தை கிளிக் செய்யவும். IMEI எண்ணைக் கண்டுபிடிக்க கீழே ஸ்க்ரோல் செய்யவும். IMEI அல்லது சீரியல் எண்ணைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், iPhone போலியானது என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
அடுத்தபடியாக, நீங்கள் பார்க்க வேண்டியது OS தான். iஐபோன்கள் எல்லாமே iOS இல் இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு (Android) லிருந்து முழுமையாக வேறுபட்டது. இதைச் சரிபார்க்க, செட்டிங்ஸ்க்கு சென்று, Software டேப் செல்லவும். iOS இல் இயங்கும் உண்மையான iPhones-ல் சஃபாரி (Safari), ஹெல்த் (Health) மற்றும் ஐமூவீ (iMovie) போன்ற தனிப்பட்ட ஆப்க்ஸ்கள் இருக்கும். இவற்றை உங்களால் காண முடியவில்லை என்றால், அந்த ஐபோன் போலியானது.
பெரும்பாலான போலி ஐபோன்கள் மலிவான கட்டமைப்பைக் கொண்டிருக்கும் மற்றும் உண்மையான மாதிரிகளை விட சற்று வேறுபட்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும். குறிப்பாக போனின் நாட்ச், பிரேம்கள் மற்றும் கேமரா மாட்யூல் போன்ற விவரங்களுக்கு கவனம் செலுத்துங்கள். சமீபத்திய ஐபோன் மாதிரிகள் பிரீமியம் மெட்டல் மற்றும் கண்ணாடியால் தயாரிக்கப்படுகின்றன. ஆகையால், ஐபோனின் வடிவமைப்பை நன்கு உற்று நோக்குங்கள். போலிகளை அடையாளம் காணலாம்.
இந்த விஷயங்கள் தெரிஞ்சா போலி ஐபோனை வாங்காமல் தவிர்க்கலாம்:
உங்கள் iPhone-ன் அசல் தன்மையை உறுதிப்படுத்த மென்பொருள் விவரங்கள், IMEI எண், சேமிப்பு திறன் மற்றும் மற்ற செட்டிங்ஸ்களை சரிபார்க்கவும். கூடுதல் உறுதிக்கு, நீங்கள் அருகில் உள்ள அதிகாரப்பூர்வமான Apple ஸ்டோர்களுக்கே நேரில் சென்று சோதிக்க சொல்லலாம். உண்மையான ஐபோன்கள் போன்ற போலி மாடல்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இந்த வழிகாட்டி போலியான பொருட்களுக்கு இரையாகுவதை தவிர்க்க சாத்தியமான வாங்குவோருக்கு உதவும்.
சமீபத்திய விலை குறைப்பு பல வாடிக்கையாளர்களை புதிய மாதிரிகளை வாங்ககூடிய ஆர்வத்தை தூண்டுகிறது. ஆனால், போலிகளின் புழக்கத்தினால் மக்கள் அதிக விலை கொடுத்து போலிகளை வாங்கி ஏமாற்றப்படுகிறார்கள். இந்த குறிப்புகளை உற்று நோக்கி இந்த படிகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் புதிய சாதனம் அசல் தன்மை உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் நம்பிக்கையுடன் சரிபார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications