Home
News

தினமும் 100% ஃபுல் சார்ஜிங்.. உங்க போனை எத்தனை முறை சார்ஜ் செய்கிறீர்கள்? ஆபத்து பற்றி தெரியாமல் மக்கள்..

உங்கள் ஸ்மார்ட்போனை தினமும் ஃபுல் சார்ஜ் செய்கிறீர்களா? அதாவது 100% வரை சார்ஜ் செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளீர்களா? அப்படினால், உங்கள் போனின் ஆயுள் தினம்-தினம் குறைந்துகொண்டே போகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? இல்லையென்றால், என்ன காரணம் என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்.

எல்லோரும் தினம் ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது நம்முடைய ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்கிறோம். இதில், நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நம்முடைய ஸ்மார்ட்போன் சாதனத்தை சார்ஜ் செய்யும் போது, நம்மில் பலர், அதை 100% வரை சார்ஜ் செய்கிறோம். இந்த பழக்கம் பரவலாக பின்பற்ற படுகிறது.

தினமும் 100% ஃபுல் சார்ஜிங்.. போனை எத்தனை முறை சார்ஜ் செய்கிறீர்கள்?

100% சார்ஜ் செய்தால், நீண்ட பேட்டரி பயன்பாடு கிடைக்குமென்று ஒரு கண்முடித்தனமான நம்பிக்கை இங்கு எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால், இது உங்கள் போனில் நேர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. ஆம், இது உங்கள் போனின் பேட்டரி ஆயுளை வேகமாக குறைக்கிறது என்பதே உண்மையாகும். இதுவரை 100% வரை சார்ஜ் செய்வது சரியானது என்று நினைத்தது தவறானது.

சரியான சார்ஜிங் பழக்கம் என்று நினைத்து இதுவரை சார்ஜ் செய்தது போதும். இருப்பதிலேயே இது தான் மிகவும் மோசமான சார்ஜிங் பழக்கமாகும். அப்படியானால், எது பாதுகாப்பான சார்ஜிங் பழக்கம் என்று தானே கேட்கிறீர்கள்? இதோ விடை. உங்கள் போனின் பேட்டரி ஆயுளைப் பாதுகாக்க எப்போதும் அதை 90% வரை சார்ஜ் செய்யலாம். மேலும், உங்கள் போனை 30% அடையும் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் நோட்டிபிகேஷன் சிவப்பு கோட்டை தொடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை ஆரோக்கியமாகவும் நீண்டதாகவும் வைத்திருக்க, உங்கள் சாதனத்தைச் சரியான நேரத்தில் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். குறிப்பாக, 100% வரை சார்ஜ் செய்ய கூடாது. அதேபோல், பேட்டரி 0% அளவை அடையும் வரை போனைப் பயன்படுத்தும் பழக்கமும் மோசமானது.

உங்கள் சாதனம் முழுமையாக சார்ஜ் இல்லாமல் OFF ஆன பிற்பாடு சார்ஜ் செய்யும் பழக்கம் கூட தீங்கானது தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல், இரவு முழுவதும் உங்கள் போனை சார்ஜ்ஜில் வைப்பதும் கேடானது. இதுவும் உங்கள் போனின் பேட்டரி ஆயுளை குறைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

தினமும் 100% ஃபுல் சார்ஜிங்.. போனை எத்தனை முறை சார்ஜ் செய்கிறீர்கள்?

இரவு முழுக்க சார்ஜ் செய்யும் போது, நீண்ட சார்ஜிங் நேரம் மெட்டாலிக் லித்தியத்தை தாக்கி, நீண்ட காலத்திற்குச் செயல்படும் பேட்டரி நிலைத்தன்மையை இது குறைக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எனவே, உங்கள் சாதனத்தை ஒரே இரவில் சார்ஜ் செய்யாதீர்கள். இதற்குப் பதிலாக ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கூட சார்ஜ் செய்து பயன்படுத்தலாம்.

சிறந்த சார்ஜிங் பழக்கம் என்பது, உங்கள் போனை காலையிலும் மாலையிலும் ஒரு முறை சார்ஜ் செய்வது பேட்டரி ஆயுளை அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது. அதேபோல், உங்கள் சாதனம் சார்ஜிங்கில் இருக்கும் போது பயன்படுத்துவதும் மோசமான பழக்கமாகும். இது நிச்சயமாக உங்கள் போனின் பேட்டரி ஆயுளைக் குறைக்கும். ஒரே நேரத்தில் சார்ஜ் ஏறுவதும், மறுமுனையில் சார்ஜ் பயன்படுத்துவதும் ஓவர்ஹீட்டிங் ஆபத்தை ஏற்படுத்தும்.

உங்கள் போனை ஆரோக்கியமான பேட்டரி ஆயுளுடன் கையாள, 100% வரை சார்ஜ் செய்யாமல், நீண்ட நேரம் அல்லது இரவு முழுக்க சார்ஜ்ஜில் சாதனத்தை வைக்கும் பழக்கங்களை கைவிட வேண்டும் என்று அறிவுரைக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Is charging your smartphone or mobile till 100% is good or bad?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X