இனி GPay, PhonePe பாடு திண்டாட்டம்.. UPI சேவையில் BSNL.. கஸ்டமர்களுக்கு மட்டுமா அல்லது எல்லோருக்குமா?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது - நாம் யாருமே கற்பனை கூட செய்திராத ஒரு சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. வெறும் ரூ.1 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 4ஜி பிளானின் கிடைக்கும் தன்மையை மேலும் சில நாட்களுக்கு நீட்டித்த கையோடு, அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனமானது, தனது சொந்த யுபிஐ சேவையை அறிமுகம் செய்கிறது.
பிஎஸ்எஸ்எல் நிறுவனம் அதன் சொந்த டிஜிட்டல் பேமண்ட் சேவையான பிஎஸ்என்எல் பே-வை (BSNL Pay) விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. பீம் யுபிஐ (BHIM UPI) கட்டமைப்பின் கீழ் இயக்கப்பட உள்ள இந்த புதிய சேவையானது, ஒரு முழுமையான ஆப் ஆக வெளியிடப்படுவதற்கு பதிலாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தற்போதைய செல்ஃப்கேர் ஆப் (BSNL Selfcare App) உடன் ஒருங்கிணைக்கப்படும்.

இதுகுறித்த எக்ஸ் தள பதிவில், பிஎஸ்என்எல் பே - விரைவில் அறிமுகமாகும் என்றும், இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய டிஜிட்டல் படியாக இருக்கும் என்றும், இதன்கீழ் யுபிஐ கட்டணங்கள் பாதுகாப்பானதாக இருக்கும் என்றும், பீம் ஆல் இயக்கப்படும் பிஎஸ்என்எல் பே சேவையானது பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப் மூலம் நேரடியாக அணுக கிடைக்கும் என்றும் பிஎஸ்என்எல் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அதே எக்ஸ் தள பதிவில், பிஎஸ்என்எல் பே சேவை வழியாக வாடிக்கையாளர்கள் - ரீசார்ஜ் செய்யலாம், பில்களை செலுத்தலாம் மற்றும் பணத்தை தடையின்றி அனுப்பலாம் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் பிஎஸ்என்எல் பே (BSNL Pay) சேவையானது சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற வெளியீட்டு தேதியை பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
இதுகுறித்த தகவல் வெளியானதும் அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம். பிஎஸ்என்எல் பே ஆப் ஆனது, மற்ற யுபிஐ ஆப்களை போலவே, அதாவது கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற ஆப்களை போலவே அனைவருக்கும் அணுக கிடைக்குமா அல்லது செல்ஃப்கேர் ஆப்பின் கீழ் கிடைப்பதால் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பிஎஸ்என்எல்-ன் ரூ.1 4ஜி ரீசார்ஜின் கிடைக்கும் தன்மை நீடிக்கப்பட்டுள்ளதை பொறுத்தவரை, முதலில் இது 2025 சுதந்திர தின சலுகையின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இது 2025 செப்டம்பர் 15 ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
புதிய பிஎஸ்என்எல் பயனர்களுக்கு வெறும் ரூ.1 என்கிற விலையின் கீழ் கிடைக்கும் இந்த திட்டம், தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இது அனைத்தும் 30 நாட்கள் செல்லுபடியாகும். மேலும் இந்த உங்களுக்கு இலவச பிஎஸ்என்எல் சிம் கார்டும் கிடைக்கும்.
இதேபோல பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 1 ஜிபிபிஎஸ் ஸ்பீட் திட்டம் மீதும் ஒரு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் குறிப்பிட்ட திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு ரூ.6,000 தள்ளுபடி கிடைக்கிறது. பிஎஸ்என்எல்-ன் 1 ஜிபிபிஎஸ் பிளான் ஆனது ஃபைபர் ரூபி ஓடிடி (Fiber Ruby OTT) பிளான் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வழக்கமான செலவு ரூ.4,799 ஆகும்.
ஆனால் 2025 செப்டம்பர் 13 ஆம் தேதி வரையிலாக இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு முதல் 6 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். அதாவது முதல் ஆறு மாதங்களுக்கு, இந்த திட்டம் ரூ.4,799 க்கு பதிலாக ரூ.1000 தள்ளுபடியை பெற்று ரூ.3,799 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். ஆக ஒவ்வொரு மாதமும் ரூ.1000 தள்ளுபடி என மொத்தம் 6 மாதங்களுக்கு ரூ.6000 தள்ளுபடி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








