ஆன்லைன் வலைத்தளங்களில் ஐபோன்-5!

Posted By: Staff
ஆன்லைன் வலைத்தளங்களில் ஐபோன்-5!

பெரிய காத்திருப்புக்கு பிறகு கடந்த 21ம் தேதி ஐபோன்-5 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் இன்னும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. இதற்கு முந்தைய வெர்ஷனான ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் நமது நாட்டில் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினை பெற்றது.

இதனால் ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கும் சிறந்த நமது நாட்டில் சிறந்த விற்பனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போன் நமது இந்திய சந்தையில் இன்னும் அதிகார பூர்வமாக அறிமுகம் செய்யப்படவில்லை.

இருப்பினும் இந்த புதிய ஐபோன்-5 ஸ்மார்ட்போன் நிறைய ஆன்லைன் வலைத்தளக்களில் ப்ரீ-ஆர்டரில் வழங்கப்பட்டு வருகிறது. அதிகார பூர்வமான அறிவிப்பு இன்றி ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையே ரூ.75,000 இருக்கும் என்று கருதப்படுகிறது. இன்னும் வநாடுகளில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 1 லட்சத்தை எட்டும் என்றும் கூறப்படுகிறது.

ஆப்பிளின் அதிகார பூர்வமான அறிமுகமத்திற்கு பிறகு, இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் விலை, இப்போது ஆன்லைன் வலைத்தளங்களில் இருக்கும் விலையினை விடவும் குறைய வாய்ப்பிருக்ககிறது. இன்னும் சொல்ல போனால் ஐபோன் வாங்க வேண்டும் என்று அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஆப்பிளின் அதிகார பூர்வமான அறிவிப்பு வரை காத்திருப்பது சிறந்தது என்று கூறலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot