ஐஓஎஸ் விட ஆன்டிராய்டு தான் சிறந்தது, எப்படி என்று பாருங்கள்
ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் இவைகளை பயன்படுத்துபவர்கள் நீண்ட நாட்களாக எந்த இயங்குதளம் சிறந்தது என்பதில் அடிக்கடி மோதி கொண்டு தான் வருகின்றனர்.
தொழில்நுட்ப பாகங்களின் மூலம் செய்யப்பட்ட பிரபலங்களின் உருவப்படம்
இங்கு ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் இவைகளில் பயன்படுத்த சிறந்த இயங்குதளமாக ஆன்டிராய்டு இருக்கின்றது என்பதை விளக்கும் முக்கிய காரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

மெமரி
ஸ்மார்ட்போனிற்கு மிக அவசியமான ஒன்று மெமரி தான், அந்த வகையில் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களில் மெமரி தீர்ந்ததும் மெமரி கார்டை கழற்றி எளிதாக மாற்றிக்கொள்வதோடு பேக்கப் எடுத்து கொள்ளவும் முடியும்.

பேட்டரி
பேட்டரி பழுதாகி பிரச்சனை செய்தால் ஆன்டிராய்டு கருவிகளில் வேற பேட்டரியை எளிதாக மாற்றி கொள்ள முடியும், இது ஐபோன்களில் எளிதான காரியம் இல்லை என்பது உங்களுக்கே தெரியும்.

ரிமோட்
பல ஆன்டிராய்டு கருவிகளிலும் இன்ப்ராரெட் இருப்பதால் எளிதாக ரிமோட் கன்ட்ரோல் கருவியாக பயன்படுத்த முடியும், இது ஐபோன்களில் சாத்தியம் இல்லை

படங்கள்
ஆன்டிராய்டு ஃபைல் ஸ்கிரீன்ஷாட்கள், பதிவிறக்கம் செய்த புகைப்படங்களை வேற போல்டருக்கு மாற்ற முடியும். ஐபோன்களில் இது சற்று கடினமாக இருக்கும்.

பாடல்
ஆன்டிராய்டில் எங்கிருந்தும் பாடல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஐபோன்களில் ஐட்யூன்ஸில் இருந்து மட்டும் தான் பாடல்களை கேட்க முடியும். இதற்கு கட்டனம் பொருந்தும் பாஸ்.

சார்ஜ்
மைக்ரோ யூஎஸ்பி கேபிள் மூலம் ஆன்டிராய்டு கருவிகளுக்கு சார்ஜ் செய்ய முடியும், ஆனால் ஆப்பிள் போனில் சார்ஜ் செய்ய லைட்னிங் கேபிள் மிக முக்கயமாகும்.

செயளி
ஆன்டிராய்டு போன்களில் செயளிகளை இணையங்களில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்ய முடியும், ஐபோன்களில் செயளிகளை பதிவிறக்கம் செய்ய முதலில் ஐட்யூன்ஸை பதிவிறக்கம் செய்ய வேண்டும்

டேப்ளெட்
ஆன்டிராய்டு டேப்ளெட்களில் பல அக்கவுன்டகளை பதிவு செய்ய முடியும், ஆனால் இதை ஐபேடில் செய்ய முடியாது.

வரைபடம்
ஆப்பிளின் வரைபடங்களை விட கூகுளின் வரைபடங்கள் மிகவும் சிறப்பாகவும் தெளிவாகவும் இருக்கின்றன.

லாக்
ஐபோன்களில் கைரேகை மற்றும் பாஸ்கோடு மூலம் போனை அன்லாக் செய்ய முடியும், ஆனால் ஆன்டிராய்டில் இதற்கு பல சேவைகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications