Home
News

Airtel அதிரடி! இனி 28 நாள்லாம் இல்ல? 35 நாட்கள் வேலிடிட்டி.. கம்மி விலையில் புதிய வரம்பற்ற ரீசார்ஜ் அறிமுகம்!

முழுதாக 30 நாட்கள், அதாவது 1 மாதம் என்கிற வேலிடிட்டியை வழங்கிய ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plans) எல்லாம் காணாமல் போய் விட்டன. தற்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பெரும்பாலான திட்டங்கள் ஆனது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வருகின்றன .

இதற்கிடையில், பார்தி ஏர்டெல் நிறுவனமானது 35 நாட்கள் என்கிற வித்தியாசமான வேலிடிட்டியுடன் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதென்ன திட்டம்? இந்த திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டத்திற்கு பதிலாக வேறு எந்த ஏர்டெல் ரீசார்ஜ்ஜை கருத்தில் கொள்ளலாம்? இதோ விவரங்கள்:

Airtel அதிரடி.. 35 நாட்கள் வேலிடிட்டி.. கம்மி விலையில் புதிய ரீசார்ஜ்!

இந்த திட்டத்தின் விலை என்ன? இதன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின் விலை ரூ.289 ஆகும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் இது 35 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வருகிறது.

அதுமட்டுமின்றி 35 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ஒரே திட்டமும் இதுவாகும். அதாவது இதைப்போல் வேறொரு திட்டம் ஏர்டெல் நிறுவனத்திடம் இல்லை. இதன் கீழ் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை, உள்ளூர் மற்றும் எஸ்டிடி ஆகிய இரண்டிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்குகிறது. மேலும் இது மொத்தம் 4ஜிபி அளவிலான டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இது அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹலோட்யூன்ஸ் (Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) ஆகியவற்றை உள்ளடக்கிய ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) நன்மைகளுடன் வருகிறது. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த திட்டத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டா (Unlimited 5G Data) நன்மைகளும் அணுக கிடைக்கும்.

ரூ.289 க்கு பதிலாக வேறு எந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்? நீங்கள் ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தை கருத்தில் கொள்ளலாம். இதுவும், டேட்டா நன்மைக்கு பதிலாக அதிக வேலிடிட்டியில் கவனம் செலுத்தும் ஒரு திட்டமாகும். இந்த திட்டம் 3ஜிபி டேட்டாவுடன் வருகிறது மற்றும் 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்குகிறது.

இந்த திட்டத்தில் நீங்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ரூ.199 ஆனது ரூ.5 என்கிற டாக்டைம் மட்டுமே வழங்குகிறது, அதாவது, இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் அதிக வாய்ஸ் கால்களை பேசவேண்டுமென்றால் நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும். அதுமட்மின்றி - ஏர்டெல் நிறுவனத்தின் கொள்கையின் காரணமாக - இந்த திட்டம் வரம்பற்ற 5ஜி டேட்டா நன்மையின் ஒரு பகுதியாக இல்லை.

Best Mobiles in India

English summary
Is Airtel Wants to Change 28 Days Validity Format Introduced New Plan Rs 289 With 35 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X