Airtel ரீசார்ஜ் விலைகளை உயர்த்த திட்டம்.. கஸ்டர்மர்களே ரெடியா இருங்க?
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம், அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு நியூ இயர் ஆஃபர் 2024-ஐ (New Year Offer 2024) அறிவித்துள்ளது. ஏர்டெல் (Airtel) நிறுவனமும் இதேபோல ஏதாவது ஒரு புத்தாண்டு சலுகையை அறிவிக்கும் என்று பார்த்தால்.. கஸ்டமர்கள் தலையில் பெரிய இடி ஒன்றை இறக்கியுள்ளது.
எக்கனாமிக் டைம்ஸிற்கு பேட்டி அளித்த பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கோபால் விட்டல் (Airtel CEO Gopal Vittal), ரீசார்ஜ் கட்டண விலை உயர்வு (Tariff Price Hike) மற்றும் 5ஜி மானிடைசேஷன் (5G Monetization) குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளார்.

ரீசார்ஜ் கட்டண விலை உயர்வு (Recharge Price Hike) பற்றிய கேள்விக்கு.. சரியான கட்டத்தில், ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதற்கான முதல் படியை எடுக்க ஏர்டெல் தயாராக உள்ளது. அது வேலை செய்யவில்லை என்றால்.. மற்ற டெலிகாம் நிறுவனங்களும் தத்தம் திட்டங்களின் விலைகளை உயர்த்தவில்லை என்றால்.. ஏர்டெல் நிறுவனம் எப்போது வேண்டுமானலும் அந்த விலைகளை திரும்ப பெறலாம் என்று கோபால் விட்டல் கூறியுள்ளார்.
மேலும் ஏர்டெல் நிறுவனம் பெரிய அளவிலான விலை உயர்வுக்கு திட்டமிடவில்லை. ஏனென்றால் ஏர்டெல் நிறுவனம் குறுகிய காலத்திற்குள்ளேயே ஏஆர்பியூ (ARPU - Average revenue per user) இலக்கான ரூ.200 ஐ எட்டியுள்ளது. இப்போது ஏர்டெல்லின் அடுத்த இலக்கு ரூ.300 ஆகும். ஆனால் அது உடனே நடக்காது.

ரூ.250 ஏஆர்பியூ என்கிற அளவை எட்டுவதற்கே இரண்டு அல்லது மூன்று முறை விலை உயர்வை அறிவிக்க வேண்டியிருக்கும். ஆக ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை ஒரே அடியாக உயர்த்திவிட்டு முடியாது. அது மெல்ல மெல்ல தான் அதிகரிக்கப்படும் என்பதை கோபால் விட்டல் சூசாகமான கூறியுள்ளார்.
ஏர்டெல் நிறுவனத்தின் ஏஆர்பியூ-வை அதிகரிப்பதற்கு விலை உயர்வு மட்டுமே ஒரு வழியாக இருக்காது என்பதையும் கோபால் விட்டல் விளக்கினார். நாட்டில் பல எண்ணிக்கையிலான ஃபீச்சர் போன் பயனர்கள் (Feature Phone Users) இருப்பதாகவும், அவர்கள் ஸ்மார்ட்போனுக்கு மாறியவுடன் ஏஆர்பியூ கணிசமாக வளரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ப்ரீபெய்ட் பயனர்களை போஸ்ட்பெய்டுக்கு (Prepaid to Postpaid) மாற்றுவதன் வழியாகவும் கூட ஏர்டெல் நிறுவனத்தின் ஏஆர்பியூ-வை அதிகரிக்க முடியும். ஏர்டெல் நிறுவனமானது ஏர்டெல் பிளாக் சேவையையும் (Airtel Black Service) கொண்டுள்ளது, இது பல வகையான சேவைகளின் ஒருங்கிணைப்பாகும். இதுவும் கூட ஏஆர்பியூ-வை அதிகரிப்பதற்கான ஒரு நல்ல வழியாக இருக்குமென்று கோபால் விட்டல் நம்புகிறார்.
அறியாதோர்களுக்கு ஏஆர்பியூ என்றால் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் (Average revenue per user) ஆகும். மொத்த வருவாயை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் உள்ள பயனர்களின் எண்ணிக்கையால் வகுக்கப்படுவதே ஏஆர்பியூ ஆகும். இன்னும் எளிமையாக கூற வேண்டுமென்றால்.. ஒரு நிறுவனம் ஒவ்வொரு பயனரிடமிருந்தும் சராசரியாக எவ்வளவு வருவாய் ஈட்டுகிறீர்கள் என்பதே ஏஆர்பியூ ஆகும்.
5ஜி சேவைக்காக கூடுதல் கட்டணம் (Extra Charge) வசூலிப்பதோ அல்லது 5ஜி-க்கான பிரத்யேக திட்டங்களை (5G Plans) அறிமுகம் செய்வதாலோ ஏர்டெல்லுக்கு எந்த பயனும் இருக்காது என்பதையும் கோபால் விட்டல் வெளிப்படுத்தியுள்ளார் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி பிக்சடு வயர்லெஸ் அக்செஸை (5G Fixed Wireless Access) தவிர 5ஜி-யின் கூடுதல் பயன்பாட்டு நிகழ்வுகளை உருவாக்க வேண்டும் என்றும் கோபால் விட்டல் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








