வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 2,000 கோடி ரூபாய் அபராதம்.. தனியுரிமை சட்டங்களை மீறியதா வாட்ஸ்அப்?

|

உலகளவில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் பயன்பாட்டின் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் தனியுரிமை சட்டங்களை மீறியதாகக் கூறி அயர்லாந்து வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு தற்போது விதிக்கப்பட்டிருக்கும் அபராதத்தின் மதிப்பு மட்டும் சுமார் 200 கோடிக்கும் அதிகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தனியுரிமை சட்டங்களை மீறியதா வாட்ஸ்அப்?

தனியுரிமை சட்டங்களை மீறியதா வாட்ஸ்அப்?

வாட்ஸ் அப் தனியுரிமை சட்டங்களை மீறியதாகக் கூறி அயர்லாந்து நாடு நிறுவனத்தின் மீது 255 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது. இந்திய மதிப்பில் இந்த அபராதத்தின் மதிப்பு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜ்ஜிங் தளமான வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விதி மீறல் காரணமாக வாட்ஸ் அப் மீது நடவடிக்கை

விதி மீறல் காரணமாக வாட்ஸ் அப் மீது நடவடிக்கை

தனியுரிமை கொள்கைகளை வாட்ஸ்அப் நிறுவனம் மீறுவதாகத் தொடர்ந்து பல நாடுகளில் பலவிதமான சர்ச்சைகளில் நிறுவனம் தொடர்ந்து சிக்கி வருகிறது. இந்த வாடிக்கையான சர்ச்சைகளில் ஒன்றாக இப்போது வாட்ஸ்அப் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமை சட்டங்களை மீறியதாகக் கூறி பிரச்சனையில் சிக்கிக்கொண்டது. இந்த விதி மீறல் காரணமாக வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு சுமார் 225 மில்லியன் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி குளிப்பார்கள் தெரியுமா? முழு வீடியோவை வெளியிட்ட பெண் விண்வெளி வீரர்..விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி குளிப்பார்கள் தெரியுமா? முழு வீடியோவை வெளியிட்ட பெண் விண்வெளி வீரர்..

பயனர் விபரங்களை வாட்ஸ்அப் யாருடன் பகிர்ந்துகொண்டது தெரியுமா?

பயனர் விபரங்களை வாட்ஸ்அப் யாருடன் பகிர்ந்துகொண்டது தெரியுமா?

அயர்லாந்து நாடு இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் விவரங்களை பேஸ்புக் நிறுவனத்தின் பிற செயலிகளுடன் பகிர்ந்துகொள்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வாட்ஸ்அப் நிறுவனம் நாட்டின் விதிமுறைகளை மீறியுள்ளது என்பது உறுதிசெய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனத்தை கதிகலங்கச் செய்த அபராதம்

வாட்ஸ்அப் நிறுவனத்தை கதிகலங்கச் செய்த அபராதம்

இருப்பினும், ஐரோப்பிய அரசாங்கம் ஆணையிட்ட அபராதம் மிகவும் குறைவாக இருப்பதாக ஐரோப்பிய ஒழுங்குமுறையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அயர்லாந்து நாட்டின் தகவல் பாதுகாப்பு ஆணையம் இந்த அபராதத் தொகையை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று கூறி, வாட்ஸ்அப் நிறுவனத்தை கதிகலங்கச் செய்தது. வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் என்பது அதிகப்படியான அபராதம் இல்லை என்பது ஒரு பக்க உண்மை.

ரொம்ப கம்மி சார்., உண்மையாவா., இவ்வளவுதான் விலையா?- 4ஜி ஜியோபோன் நெக்ஸ்ட் விலை, அம்சம் லீக்!ரொம்ப கம்மி சார்., உண்மையாவா., இவ்வளவுதான் விலையா?- 4ஜி ஜியோபோன் நெக்ஸ்ட் விலை, அம்சம் லீக்!

225 மில்லியன் யூரோ அபராதம்

225 மில்லியன் யூரோ அபராதம்

இந்த வாட்ஸ்அப் அபராதம் ஐரோப்பாவின் பொது தரவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஐரிஷ் கட்டுப்பாட்டாளர் வழங்கிய மிகப்பெரிய தண்டனையாகும். பல காரணிகளின் அடிப்படையில் அதன் முன்மொழியப்பட்ட அபராதத்தை மறுபரிசீலனை செய்ய மற்றும் அதிகரிக்கும்படி அயர்லாந்திடம் கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 225 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

746 மில்லியன் யூரோ அபராதம் வாங்கிய நிறுவனம் இது தான்

746 மில்லியன் யூரோ அபராதம் வாங்கிய நிறுவனம் இது தான்

இந்த அபராதம் ஒப்பிட்டளவில் மிகவும் அதிகமானது என்றும் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஊடகத்திற்கு பதில் அளித்துள்ளார், வாட்ஸ்அப் இது போன்ற விதி மீறல்களில் சிக்குவது ஒன்றும் முதல் முறை அல்ல. இதேபோல், விதியை மீறிய காரணத்திற்காக கடந்த ஜூலை மாதம் அமேசான் நிறுவனத்தினர் 746 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் பற்றி கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் இணைந்திருங்கள். டெக் மற்றும் அறிவியல் தொடர்பான செய்திகளுக்கும் எங்கள் பக்கத்தை பார்வையிடுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Ireland Fines WhatsApp 225 Million Euros For Breaching European Union Data Privacy Rules : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X