ஐஆர்சிடிசி-யின் புதிய இணையதளம்: புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

|

இந்திய ரயில்வே துறை தற்சமயம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது, அதன்படி ஐஆர்சிடிசி இணையதளத்தில் பல்வேறு அம்சங்கள் தற்சமயம் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக அனைவரும் எளிமையாக டிக்கெட் புக் செய்யும் படி புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஆர்சிடிசி-யின் புதிய இணையதளம்: புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

இப்போது பிளாஸ்டிக் இல்லா ரயில்வே நிலையங்களை உறுவாக்கும் முயற்சியில் பிளாஸ்டிக் பாட்டில் நொறுக்கும் புதிய இயந்திரத்தை கொண்டுவந்துள்ளது ரயில்வே துறை. மேலும் பிளாஸ்டிக் பாட்டில் நொறுக்கும் இந்த புதிய இயந்திரம் பல்வேறு வரவேற்புகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இப்போது ஐஆர்சிடிசி இணையதளத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகளைப் பார்ப்போம்.

 வழிமுறை-1:

வழிமுறை-1:

இப்போது irctc.co.inஎன்ற ஐஆர்சிடிசி வலைதளத்தில் இடது பக்கம் கொடுக்கப்பட்டுள்ள try new version of Website என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பயன்படுத்த வேண்டும்.

 வழிமுறை-2:

வழிமுறை-2:

try new version of Website கிளிக் செய்த பின்பு அடுத்து உங்களை புதிய பக்கத்திற்கு அழைத்து செல்லும். அங்கு படிவம் ஒன்று கொடுக்கப்படும் அதில் நீங்கள் புறப்படும் இடத்தை குறிப்பிட வேண்டும், பின்னர் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும். குறிப்பாக எந்த நாளில் நாளில் பயணிக்க விரும்புகிறீர்களோ அந்த நாளை குறிப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 வழிமுறை-3:

வழிமுறை-3:

மேலும் புதிய ஐஆர்சிடிசி தளத்தில் find train எனும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும், இது எந்த ரயிலில் எத்தனை இருக்கை இருக்கிறது என்பதையும் பின்பு வெயிட்டிங் லிஸ்ட்ல் உள்ள விவரங்களையும் காண்பிக்கும். குறிப்பாக நீங்கள் எடுத்த டிக்கெட் எவ்வளவு சதவிகிதம் உறுதியாக கிடைக்கும் என்ற தகவலை தெரிந்துகொள்ள முடியும்.

 வழிமுறை-4:

வழிமுறை-4:

ஐஆர்சிடிசி புதிய வலைத்தளம் பயனர்கள் எழுத்துரு அனுபவத்தை இணையதளம் முழுவதும் வசதியாக பார்க்கும் அனுபவத்தை மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது.

 வழிமுறை-5

வழிமுறை-5

ரயில் எண், ரயில் பெயர், தோற்றம் மற்றும் இலக்கு நிலையம் மற்றும் அவற்றுக்கிடையே உள்ள தொலைவு, வருகை மற்றும் புறப்படும் நேரம் மற்றும் பயண நேரம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒற்றை திரை தகவல் இப்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழிமுறை-6:

வழிமுறை-6:

இப்போது‘My Transactions' எனும் விருப்பம் ஐஆர்சிடிவசி தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது, இதில் பயணிகள் டிக்கெட், முன்பதிவு தேதி, வரவிருக்கும் பயணம் மற்றும் முழுமையான பயணம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள

முடியும்.

வழிமுறை-7:

வழிமுறை-7:

காத்திருப்பு பட்டியல் அல்லது ஆர்.ஏ.சி. டிக்கெட் உறுதிப்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை பயனர்கள் பெறும் வகையில் புதிய 'காத்திருப்புப் பட்டியல்' அம்சம் ஐஆர்சிடிசி தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

வழிமுறை-8:

வழிமுறை-8:

ஐஆர்சிடிசி தளத்தில் இப்போது Vikalp scheme எனும் விருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது, இது நீங்கள் ரயில் டிக்கெட் புக் செய்துள்ளீர்கள் ஆனால் உங்களுக்கு உறுதியாகும், மேலும் confirmation-சதவிகிதம் குறைவாக இருந்தால் வேறு ரயிலில் டிக்கெட் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
IRCTC’s new website: Waitlist prediction, check seats without login and 10 other features : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X