இந்த வசதி பயன்படுத்தி இறுதி நேரத்தில் கூட காலி இடத்தை கிளிக் பண்ணி புக் செய்துகொள்ளலாம்.!

முன்பதிவு செய்த பயணிகளின் பட்டியல் வெளியிட்டபின் ரயில்களில் உள்ள காலி இடங்களைத் தெரிந்துகொள்வதற்கு டிடிஇ பின்னால் கால் கடுக்க செல்வது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

|

முன்பதிவு செய்த பயணிகளின் பட்டியல் வெளியிட்டபின் ரயில்களில் உள்ள காலி இடங்களைத் தெரிந்துகொள்வதற்கு டிடிஇ பின்னால் கால் கடுக்க செல்வது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த பழக்கத்தை மாற்றுவதற்காக இந்திய ரயில்வே துறை புதிய சேவை ஒன்றை நேற்று அறிமுகம் செய்துள்ளது.

ஆன்லைன் பயணிகளின் பட்டியல்

ஆன்லைன் பயணிகளின் பட்டியல்

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தபின், பயணிகளின் இடங்களைப் பற்றிய முழு விபரங்களைப் பார்த்துக்கொள்வதற்காகப் பயணிகளின் பட்டியல் வெளியிடப்படும், இந்த பயணிகளின் பட்டியலை இனிமேல் ஆன்லைன் இல் பார்த்துக்கொள்ளும் அனுமதியை தற்பொழுது ரயில்வே துறை அறிமுகம் செய்துள்ளது.

சார்ட்ஸ் / வேகன்சிஸ்

சார்ட்ஸ் / வேகன்சிஸ்

ஐ.ஆர்.சி.டி.சி இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சார்ட்ஸ் / வேகன்சிஸ் என்ற புதிய பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையின்படி பயனர்கள் தாங்கள் பயணிக்கப் போகும் பெர்த்தின் விபரங்கள் மற்றும் முன்பதிவு செய்ய நினைக்கும் காலியாக உள்ள பெர்த்தின் விபரங்களையும் இனி எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

காலி இடங்கள்

காலி இடங்கள்

பயணிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்ட பிறகு, ரயிலில் உள்ள காலி இடங்களைப் பார்ப்பதற்காகவும் அதை எளிதில் புக் செய்துகொள்வதற்காகவும் இந்திய ரயில்வே துறை இந்த புதிய முறையை அறிமுகம் செய்துள்ளதாக இந்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயால் தெரிவித்துள்ளார்.

மொபைல் மூலம் புக் செய்துகொள்ளும் சேவை

மொபைல் மூலம் புக் செய்துகொள்ளும் சேவை

மொபைல் மூலம் அல்லது லேப்டாப் மூலம் இந்த தளத்திற்குச் சென்றால், பயணிகளின் பட்டியலை ஆன்லைன் இல் உடனுக்குடன் பார்த்து, காலியாக உள்ள இடங்களைப் பயணிகள் புக் செய்துகொள்ளும் படி இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்தில் எப்படி காலி இடங்கள் உள்ளது என்பதை அறியலாம்?

ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்தில் எப்படி காலி இடங்கள் உள்ளது என்பதை அறியலாம்?

1. ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்திற்கு சென்று சார்ட்ஸ் / வேகன்சி(Charts/Vacancy) பிரிவை கிளிக் செய்துகொள்ளுங்கள்.

2. பயணியின் பயணிக்கும் விபரங்களைப் பதிவு செய்துகொள்ளுங்கள்.

3. ரயில் எண், ஸ்டேஷன், பயணிக்கும் நாள் போன்ற விபரங்களைச் சரியாகப் பதிவு செய்துகொள்ளுங்கள்.

4. பின் கிளாஸ் முறைப்படி மற்றும் சீட்டின் வரிசைபடி உள்ள காலியான இடங்கள் காண்பிக்கப்படும்.

இறுதி நேரத்தில் கூட புக் செய்துகொள்ளலாம்

இறுதி நேரத்தில் கூட புக் செய்துகொள்ளலாம்

5. உங்களுக்கு பிடித்த கோச்சை கிளிக் செய்து பெர்த் விபரத்தையும் அறிந்துகொள்ளலாம்.

6. காலியாக உள்ள இடங்கள்,பதிவு செய்யப்பட்ட இடங்கள் என அணைத்து சீட்களின் விபரங்களில் தனித்தனி வண்ணங்களுடன் பிரித்துள்ளது.

7. காலி இடங்களை கிளிக் செய்து, முன்பதிவை இறுதி நேரத்தில் கூட புக் செய்துகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
IRCTCs new feature Check vacant train seats reservation chart online : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X