IRCTC அதிரடி அறிவிப்பு: பயணிகளுக்கான சிறப்பு ரயில் சேவை நாளை துவங்குகிறது; முன்பதிவு எப்போதிருந்து?

|

இந்தியாவில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நேரத்தில் இந்திய ரயில்வே தனது சேவையை மே 12ம் தேதி முதல் துவங்கும் என்று தெரிவித்துள்ளது. இந்திய ரயில்வே நாளை முதல் சிறப்புப் பயணிகள் ரயில் சேவையை தொடங்க உள்ளது என்றும், இதற்கான முன்பதிவு எப்பொழுது துவங்கப்படுகிறது, ரயில்கள் எந்த வழிகளில் இயக்கப்படவுள்ளது மற்றும் ரயிலில் பயணிகள் எப்படிப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற முழு விபரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

நாளை முதல் பயணிகள் ரயில் சேவை தொடக்கம்

நாளை முதல் பயணிகள் ரயில் சேவை தொடக்கம்

இந்திய ரயில்வே ஊரடங்கு காரணத்தினால் சரக்கு ரயில்களை மட்டும் இயங்கிக்கொண்டிருந்தது, ஊரடங்கினால் பயணிகள் ரயிலைத் தற்காலிகமாக இயக்காமல் பயணிகள் பயன் செய்ய தடைவிதித்திருந்தது. ஊரடங்கு நிறைவடையும் முன்பே தற்பொழுது இந்திய ரயில்வே நாளை முதல் படிப்படியாகப் பயணிகள் ரயில் சேவையைத் தொடங்கவுள்ளது என்று அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, ஆரம்பத்தில் 15 ஜோடி ரயில்கள் மட்டும் இயக்கப்படவுள்ளன என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

சிறப்பு ரயில்களின் பயண வழி விபரம்

சிறப்பு ரயில்களின் பயண வழி விபரம்

அதவது ஒட்டுமொத்தமாக 30 ரயில்கள் திரும்பும் பயணத்துடன் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 15 ஜோடி சிறப்பு ரயில்களின் பயணம் புது தில்லி நிலையத்திலிருந்து திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை மத்திய, அகமதாபாத் மற்றும் ஜம்முதாவி போன்ற இடங்களை இணைக்கும் சிறப்பு ரயில்களாக இயங்கும் என்று IRCTC கூறியுள்ளது.

ஏர்டெல் அட்டகாச திட்டங்கள்: தினசரி 2 ஜிபி ரூ.99, ரூ.129, ரூ.199 மட்டும்!ஏர்டெல் அட்டகாச திட்டங்கள்: தினசரி 2 ஜிபி ரூ.99, ரூ.129, ரூ.199 மட்டும்!

இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு எப்பொழுது துவங்குகிறது?

இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு எப்பொழுது துவங்குகிறது?

இந்த ரயில்களின் முன்பதிவு மே 11 ஆம் தேதி முதல், அதாவது இன்று மாலை 4 மணி முதல் IRCTC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் துவங்குகிறது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், முன்பதிவு விருப்பம் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும் என்றும், ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் மூடப்பட்டிருக்கும், கவுண்டர் டிக்கெட்கள் எதுவும் வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் நுழைய அனுமதி

பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் நுழைய அனுமதி

ரயில் நிலையங்களில் உள்ள எந்த கவுண்டரிலும் பயணிகள் டிக்கெட்களை வாங்க முடியாது, பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் உட்பட எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், செல்லுபடியாகும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் உள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள், வழியனுப்ப வந்தவர்களுக்கு ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் மதுபாட்டில் விற்பனை: எப்படி தெரியுமா?தமிழகத்தில் ஆன்லைன் மதுபாட்டில் விற்பனை: எப்படி தெரியுமா?

கட்டாயம் முகமூடி அணிந்திருக்க வேண்டும்

கட்டாயம் முகமூடி அணிந்திருக்க வேண்டும்

ரயிலில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முகமூடி அணிந்திருக்க வேண்டும், அதேபோல் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ரயில் புறப்படுவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை மற்றும் திரையிடலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய ரயில்வே கூறியுள்ளது.

தற்பொழுது இயக்கத்தில் உள்ள ஷ்ராமிக் சிறப்பு ரயில்

தற்பொழுது இயக்கத்தில் உள்ள ஷ்ராமிக் சிறப்பு ரயில்

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவுதலைத் தொடர்ந்து தேசிய அளவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ரயில்வே சேவைகள் நிறுத்தப்பட்டது. ஆனாலும், புலம்பெயர்ந்த பிறமாநிலத்தவர்கள் வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கின்றனர், சிக்கலில் சிக்கித் தவிக்கும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்காக அரசாங்கம் தற்போது ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் என்று அழைக்கப்படும் சிறப்பு ரயில் சேவையை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
IRCTC Website Starts Booking For Special Passenger Trains From May 12 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X