IRCTC சர்வரே படுத்துடுச்சு! அவசரமா ரயில் டிக்கெட் புக் செய்யணுமா? அரசே சொன்ன ஆப்ஸ் இது தான்!
IRCTC பயனர்கள் இப்போது ஐஆர்சிடிசி வலைப்பக்கம் மற்றும் மொபைல் ஆப்ஸ் என்று எந்த வழியாகவும் டிக்கெட்களை புக் செய்ய முடியாத சிக்கலான நிலைமை உருவாகியுள்ளது. ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்க விரும்பும் பயணிகள் இப்போது டிக்கெட் புக் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த சிக்கலை சரி செய்ய IRCTC இப்போது அதன் டிவிட்டர் பக்கம் வழியாக ஒரு முக்கிய அறிவிப்பை பதிவிட்டுள்ளது. இதன் படி, IRCTC தளம் மற்றும் மொபைல் ஆப்ஸ் இல் எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சிக்கலை IRCTC அதிகாரிகள் விரைந்து சரி செய்ய முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் புக் செய்ய விரும்பும் பயனர்கள், உடனே அமேசான் (Amazon) அல்லது பேடியம் (Paytm) வழியாக ரயில் பயண டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அரசு நடத்தும் IRCTC அமைப்பே அதன் டிவீட்டில் தெரிவித்துள்ளது. சரி, இப்போது எப்படி அமேசான் மற்றும் பேடியம் வழியாக ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
அமேசான் வழியாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான படிப்படியான செயல்முறையை இப்போது முதலில் பார்க்கலாம்.
அமேசான் (Amazon) ஆப்ஸை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
அமேசான் பே (Amazon Pay) என்று விருப்பத்தை கிளிக் செய்யவும்.
"புக் டிக்கெட்ஸ் (Book Tickets) என்பதன் கீழ், டிரெயின்ஸ் (Trains) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் பயண இடங்களை உள்ளிட்டு நிலையங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
பயணத் தேதிகள் போன்ற தேவையான பயண விவரங்களை வழங்கவும்.

நீங்கள் ஏசி வகுப்பில் பயணம் செய்ய விரும்பினால், பயன்பாட்டில் உள்ள பொருத்தமான AC பெட்டியை டிக் செய்யவும்.
கூடுதல் ரயில் விருப்பங்களுக்கு, ஃபைண்ட் ட்ரெயின்ஸ் (Find Trains) அம்சத்தை பயன்படுத்தலாம்.
அமேசான் ஆப்ஸ் ஆனது கிடைக்கக்கூடிய ரயில்களை அவற்றின் வழித்தடங்களுடன் காண்பிக்கும்.
உங்கள் பயணத்திற்கு மிகவும் பொருத்தமான ரயில் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்தபடியாக, ஜெனரல் (General), சீனியர் சிட்டிசன் (Senior Citizen) அல்லது பெண்கள் (Ladies) போன்ற குறிப்பிட்ட வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் விருப்பங்களை நீங்கள் முடித்தவுடன், Continue என்பதைக் கிளிக் செய்யவும்.
முன்பதிவை முடிக்க, உங்களின் IRCTC கணக்கு ஐடி மற்றும் பாஸ்வோர்ட் உட்பட உங்களின் IRCTC விபரங்கள் தேவைப்படும்.
உங்களிடம் IRCTC கணக்கு இல்லையென்றால், IRCTC இணையதளத்தில் ஒன்றை உருவாக்கலாம்.
மாற்றாக, கிளிக் ஹியர் (Click Here) விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் Amazon இல் IRCTC கணக்கையும் உருவாக்கலாம்.
கணக்கை அமைக்க இது உங்களை IRCTC இணையதளத்திற்கு திருப்பிவிடும்.
உங்கள் IRCTC விபரங்களை உள்ளிட்ட பிறகு, உங்களுக்கு விருப்பமான முறையில் பணம் செலுத்தலாம்.
இந்த செயல்முறையை பின்பற்றி அமேசான் தளத்தில் இருந்து ரயில் டிக்கெட்டை எளிமையாக புக் செய்யலாம்.

பேடியம் (Paytm) வழியாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
https://paytm.com/train-tickets என்ற பக்கத்தை பார்வையிடவும்.
பயணத்தின் தேதியுடன் உங்கள் சேருமிட நகரத்தை உள்ளிடவும்.
சர்ச் (Search) பட்டனை கிளிக் செய்யவும்.
உங்களுக்கு விருப்பமான இருக்கை, வகுப்பு மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.
புக் (Book) பட்டனை கிளிக் செய்து, உங்கள் IRCTC லாகின் ஐடியை உள்ளிடவும்.
தேவையான தகவலை உள்ளிட்ட பிறகு புக் என்பதைக் கிளிக் செய்யவும்.
பணம் செலுத்துவதற்குச் சென்று உங்களுக்கு விருப்பமான முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
டெபிட்/கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது Paytm வாலட் போன்ற முறைகளை தேர்வு செய்யலாம்.
மேலும் அங்கீகாரத்திற்காக நீங்கள் IRCTC இணையதளத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள், அங்கு உங்கள் IRCTC கணக்கின் பாஸ்வோர்டை உள்ளிட்ட வேண்டும்.
பிறகு உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படும்.
இந்த முறையை பின்பற்றி IRCTC பயனர்கள் இப்போது எந்தவித தடையுமின்றி ரயில் பயணத்திற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். IRCTC-ல் காணப்படும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படும் வரை, மக்கள் இந்த மாற்று ஆப்ஸ்கள் மூலமாக டிக்கெட்களை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.


Click it and Unblock the Notifications








