Home
News

IRCTC-ன் புது சேவை.. டிக்கெட் எடுக்குறவங்க கவனியுங்க.. இனி இதுக்கும் கேன்சலேஷன், ரீபண்ட் உண்டு.. சூப்பர்ல..

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC), இந்தியாவில் உள்ள பல கோடி ரயில் பயணிகள் பயன்பெறும் வகையில், பயணிகளின் தேவைக்கேற்ற புது-புது வசதிகளை இந்திய ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் ஐஆர்சிடிசி (IRCTC) இப்போது மற்றொரு பயனுள்ள வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைன் ரயில் டிக்கெட்கள் மட்டுமின்றி, ஆப்லைன் டிக்கெட்களையும் ஆன்லைன் மூலம் கேன்சல் (cancellation) செய்து ரீஃபண்ட் (refund) பெரும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதியை பயன்படுத்தி எப்படி டிக்கெட்டிற்கான தொகையை திரும்ப பெறலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

இந்திய ரயில்வே (Indian railway) சேவையை தினசரி பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். நாட்டின் பெரிய போக்குவரத்தை சேவை என்றால் அதில் ரயில் சேவை (Train transport service) தான் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இத்தகைய சேவையை நாளுக்கு நாள் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் பயன்படுத்தி வருவதினால், பயணிகளின் தேவைக்கேற்ற பல புதிய முயற்சிகளை IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

IRCTC-ன் புது சேவை.. டிக்கெட் எடுக்குறவங்க கவனியுங்க.. ரீபண்ட் உண்டு..

IRCTC-ன் புது சேவை.. டிக்கெட் எடுக்குறவங்க உடனே கவனியுங்க:

கூட்ட நெரிசலில், நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் டிக்கெட் எடுக்க அனுமதிக்கும் ஆன்லைன் சேவைகளை IRCTC அதன் பயணிகளுக்காக (IRCTC online ticket booking) வழங்கியது. இருப்பினும், பெரும் எண்ணிக்கையிலான ரயில் பயணிகள், ரயில் நிலையங்களில் உள்ள PRS டிக்கெட் கவுண்ட்டர் (ticket counter) மூலம் ரயில் டிக்கெட்களை எடுத்து வருகிறார்கள். இதுவரை IRCTC அமைப்பு, ஆன்லைன் மூலம் எடுக்கப்பட்ட டிக்கெட்களுக்கு மட்டுமே ஆன்லைன் கேன்சலேஷன் சேவையை வழங்கி வந்தது.

ஆன்லைன் மூலம் எடுக்கப்பட்ட டிக்கெட்டை ஆன்லைனில் கேன்சல் (IRCTC online ticket cancellation) செய்து, அதற்காக கட்டணத்தை ரீஃபண்ட் (IRCTC ticket refund) சேவையை இப்போது வரை வழங்கி வருகிறது. இன்று முதல் IRCTC பயணிகள் ஆப்லைன் டிக்கெட்களையும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து (IRCTC offline ticket onlince cancellation), டிக்கெட்டை கேன்சல் செய்து, ரீபண்ட் (offline ticket refund) பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் புதிய சேவையை IRCTC அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ஆப்லைன் டிக்கெட் ஆன்லைன் கேன்சலேஷன் சேவையை எப்படி பயன்படுத்தி, ரீபண்ட் பெறுவது என்பது இங்கே.

- https://www.operations.irctc.co.in/ctcan/SystemTktCanLogin.jsf என்ற இணையதள பக்கம் செல்லுங்கள்.
- இப்போது Transaction Type என்ற லேபிள் விருப்பத்தில் Cancellation என்று விருப்பத்தை தேர்வு செய்க.
- உங்கள் கையில் இருக்கும் ஆப்லைன் டிக்கெட்டை தயார்நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
- இப்போது அதில் உள்ள PNR நம்பர் மற்றும் டிரெயின் நம்பர் தகவல்களை உள்ளிட்ட வேண்டும்.
- பக்கத்தில் காண்பிக்கப்படும் Captcha கோடு விபரங்களை உள்ளிடவும்.

- இறுதியில் Submit என்பதை கிளிக் செய்யுங்கள்.
- ரயில் டிக்கெட் புக் செய்யப்பட்ட போது வழங்கப்பட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.
- அந்த OTP எண்களை அடுத்த பக்கத்தில் உள்ளிடவும்.
- பயணிகளின் விபரம் காண்பிக்கப்படும், எல்லாவற்றையும் சரி பார்த்த பிறகு Submit கிளிக் செய்யவும்.
- உங்கள் PRS கவுண்ட்டர் டிக்கெட் வெற்றிகரமாக கேன்சல் செய்யப்படும்.

கேன்சல் செய்த டிக்கெட்டிற்கு ரீஃபண்ட் பெறுவது எப்படி?

உங்கள் ரீபண்ட் தொகையை பெற நீங்கள் கட்டாயம் அருகில் உள்ள PRS டிக்கெட் கவுண்ட்டர் சென்று, உங்களிடம் இருக்கும் ஆப்லைன் டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டும். ஆப்லைன் டிக்கெட்டை சமர்ப்பித்த பிறகு மட்டுமே உங்கள் டிக்கெட் தொகை திரும்ப வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முன்பாக இந்த டிக்கெட் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
IRCTC Update How to cancel PRS counter offline tickets online and get refund easily check this now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X