ரயில் பயணிகள் கவனிக்கவும்: ஐஆர்சிடிசியின் புதிய சேவை.!

|

ரயில் பயணிகளுக்கு தகுந்தபடி ஐஆர்சிடிசி அமைப்பு பல்வேறு புதிய சேவைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அதன்படி சமீபத்திய தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்திய ரயல்வே கேட்டரிங் மற்றும் சுற்றலா கார்ப்பரேஷன்(ஐஆர்சிடிசி) புக் நவ், பே லேட்டர்' என்ற புதிய சேவையை கொண்டு வந்துள்ளது.

இபே லேட்டர்

கண்டிப்பாக ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு இந்த "இ பே லேட்டர்" முறை உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

"இ பே லேட்டர்" என்றால் என்ன?

அதாவது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட்களுக்கு இந்த "இ பே லேட்டர்" (ePay Later)சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தட்கல் டிக்கெட்டுகளை புக் செய்யும்போது சில பணம் செலுத்தும் சில நொடியில், டிக்கெட் மிஸ்ஸாகி விடும். அத்தகைய நேரங்களில் இந்த "இ பே லேட்டர்" முறைமிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்

அதன்படி முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளுக்கு "இ பே லேட்டர்" சேவை கிடைக்கு என்றுஐஆர்சிடிசி தெரிவித்துள்ளத. தட்கல் டிக்டிகட்டுகளை வாங்கும் போது வாடிக்கையாளர் எந்தவொரு தாமதம் அல்லது
கட்டண நுழைவாயில் தோல்விகளையும் சந்திக்க வேண்டியதில்லை என்பதால் இந்த விருப்பத்தேர்வு குறிப்பாகஅவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

3.50% வட்டி

3.50% வட்டி

ஆனால்டிக்கெட் முன்பதிவு செய்த 14 நாட்களுக்குள் டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும். 14 நாட்களுக்குள்செலுத்தத் தவறினால், 3.50% வட்டியும் சேர்த்து கட்ட வேண்டும்.

இந்த வசதியை பெறும் வழிமுறைகள்

இந்த வசதியை பெறும் வழிமுறைகள்

வழிமுறை 1:
ஐஆர்சிடிசி கணக்கை லாக் இன் செய்யவும்

வழிமுறை 2:
பயண விபரத்தை குறிபிட்டு, டிக்கெட்டை முன்பதிவு செய்யவும்

இந்த வசதியை பெறும் வழிமுறைகள்

வழிமுறை 3:
அடுத்து பணம் செல்லுத்தும் பக்கத்தில் அருகே "இ பே லேட்டர்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கிளிக் செய்யவும், உடனே புதிய பக்கம் திறக்கும்

 இந்த வசதியை பெறும் வழிமுறைகள்

வழிமுறை 4:
அந்த புதிய பக்கத்தில் உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, "இ பே லேட்டரை" லாக் இன் செய்யவும்

வழிமுறை 5:
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும், அதனை சரியாகக் குறிப்பிடவும்

வழிமுறை 6:
பின்னர் முன்பதிவு தொகையை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும், அடுத்து உங்கள் டிக்கெட் உறுதியாகிவிடும்.

Source: livemint.com

Best Mobiles in India

English summary
IRCTC train ticket booking: Now you can book tickets and pay later : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X