ரயில் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவிற்கான விபரங்கள் இதோ!

|

இந்தியாவில் கொரோனாவை எதிர்கொள்வதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூட்டும் கூடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில்

உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில்

உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து 31 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்

1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்

அதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா உருவாகிய சீனா கிட்டத்தட்ட அதன் வீரியத்தை கட்டுப்படுத்தி உள்ள நிலையில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினமும் புதிய பாதிப்புகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து கொண்டே வருகிறது.

21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு

21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு

மேலும் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நாட்களில் மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும் படி கை கூப்பி கேட்டுக் கொண்டார். நாட்டின் வளர்ச்சியை விட மக்களின் உயிர் தான் முக்கியம் எனவும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். இந்த உத்தரவானது ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமலில் உள்ளது.

Lockdown ரயில்வே பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி ஒரு பெரிய வசதி

Lockdown ரயில்வே பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி ஒரு பெரிய வசதி

இந்தியாவில் Lockdown செய்யப்பட்டுள்ள நிலையில் 14 ஆம் தேதி வரையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ரயில்வே பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி ஒரு பெரிய வசதியை அறிவித்தது. Lockdown போது ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டாம் என்று IRCTC பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. முழுபணமும் அதே அக்கவுண்டில் திரும்ப செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கம்போல் நடைமுறையில் இருக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு

வழக்கம்போல் நடைமுறையில் இருக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு

IRCTC இன் அறிவிப்புப்படி மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரையிலான முன்பதிவு மற்றும் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏப்ரல் 14ம் தேதிக்கு பின்னர் உள்ள எந்த முன்பதிவையும் IRCTC ரத்து செய்யவில்லை என்றும் வழக்கம்போல் அவை நடைமுறையில் தான் இருக்கிறது என்றும் அறிவித்துள்ளது.

Xiaomi, redmi, poco., அனைத்து ஸ்மார்ட் போன்களின் விலை உயர்வு., எவ்வளவு மற்றும் காரணம் தெரியுமா?Xiaomi, redmi, poco., அனைத்து ஸ்மார்ட் போன்களின் விலை உயர்வு., எவ்வளவு மற்றும் காரணம் தெரியுமா?

விமான போக்குவரத்துக்கான முன்பதிவு விபரங்கள்

விமான போக்குவரத்துக்கான முன்பதிவு விபரங்கள்

அதேபோல், ஊரடங்கை முன்னிட்டுSpiceJet, GoAir, IndiGo போன்ற தனியார் நிறுவன விமானங்களில் சேவைகளை அந்நிறுவனங்கள் நிறுத்திவைத்துள்ளது. விமான போக்குவரத்துக்கான அடுத்தகட்ட முன்பதிவு எப்பொழுது துவக்கப்படும் என்று இன்னும்அதிகாரப்பூர்வதகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்தகட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைக்கும் வரை அனைவரும் காத்திருக்க தான் வேண்டும்.

IRCTC கொடுத்த விளக்கம்

இதற்கு முன்பு வெளியான செய்தியில்IRCTC ஏப்ரல் 15ம் தேதி முதல் ரயில் பயணத்திற்கானமுன்வதிவுகளை இப்பொழுது துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த செய்திக்கு IRCTC தனது டிவிட்டர் பக்கத்தில் தெளிவாகவிளக்கமளித்துள்ளது, அதன்படி ஏப்ரல் 15ம் தேதிக்கான முன்பதிவு வழக்கம்போல 120 நாட்களுக்கு முன்பிலிருந்தே திறப்பில்தான் உள்ளதென்று அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
flight and train reservation started in india from april 15

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X