தட்கல் முன்பதிவு: புத்தம் புதிய வசதியைக் கொண்டுவந்தது ஐஆர்சிடிசி.!

தட்கல் டிக்கெட்டுகள் உட்பட, இ-டிக்கெட்களை பதிவு செய்வதற்கான ஒரு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஐஆர்சிடிசி.

|

ஐஆர்சிடிசி தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி தற்சமயம் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப் பயன்பாட்டின் மூலம் மிக எளிமையாக தட்கல் முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக மிகக் குறிகிய நேரத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்கல் டிக்கெட்டுகள் உட்பட, இ-டிக்கெட்களை பதிவு செய்வதற்கான ஒரு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஐஆர்சிடிசி, அதன்படி ஐஆர்சிடிசி இ-வாலட் பயனர்கள் தட்கல் டிக்கெட், இ-டிக்கெட் போன்றவற்றை எளிமையாக பணம் செலுத்தி பெற முடியும். வாலட் என்பது பணம் செலுத்துதல் முறையாகும், இது ஐஆர்டிசிசி மூலம் முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கு பயனர்களுக்கு உதவுகிறது.

 ஐஆர்சிடிசி

ஐஆர்சிடிசி

இப்போது ஐஆர்சிடிசி இ-வாலட் பயனர்கள் , இ-டிக்கெட் , தட்கல் டிக்கெட் போன்றவற்றை மிக எளிமையாக முன்பதிவு செய்யமுடியும். குறிப்பாக இந்தப்பயன்பாடு பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஆர்சிடிசி வெப்சைட்

ஐஆர்சிடிசி வெப்சைட்

ஐஆர்சிடிசி வெப்சைட், மொபைல் ஆப்கள் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே எஸ்எம்எஸ் மூலமாக முன்பதிவு குறித்த விவரங்கள் வரும். ஆனால் ரயில் நிலையங்களில் நேரடியாக சென்று முன்பதிவு செய்பவர்களுக்கு சிஎன்எப் குறியீடு மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது என்பதால் இவர்களுக்கு படுக்கை எண், ரயில் பெட்டி எண் போன்றவை அனுப்பப்படமாட்டாது. இந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று தான் விவரங்களை கேட்டறிய வேண்டும். இதனால் டிக்கெட் பரிசோதகருக்கு பணிசுமை அதிகரிக்கும்.

ஓலா

ஓலா

இந்தியாவின் முன்னனி கால் டாக்ஸி நிறுவனமான ஓலா தற்சமயம் ஐஆர்சிடிசி இணையதளத்துடன் இணைகிறது. அதன்படி ரயில்வே பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் 7 நாட்களுக்கு முன்பே ஓலா வாடகை வண்டிகளை புக் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப் பயன்படுகளில் ஓலா கால் டாக்ஸி புக் செய்ய முடியும் என்பதால் மக்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த கூட்டணி மூலம் ஓலா மைக்ரோ, ஓலா மினி, பிரைம் ப்ளே, ஓலா ஆட்டோ போன்ற சேவைகளை ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் மிக எளிமையாக புக் செய்ய முடியும். மேலும் இந்த சேவைகள் கடந்த திங்களன்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

How to Find a domain easily for your business (TAMIL)
 ரயில் கனெக்ட் செயலி

ரயில் கனெக்ட் செயலி

இப்போது ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் செயலி மூலம் மிக எளிமையாக டிக்கெட் புக் செய்ய முடியும் இந்த செயலியில் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்த செயலியை மிக எளிமையாக ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
IRCTC Tatkal Reservation New Facility For Booking Train Tickets; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X