IRCTC-ன் புது சூப்பர் வசதி.. டிக்கெட் புக்கிங் செய்றவங்க கவனிச்சீங்களா? மொத்த இந்தியாவுக்கும் ஹேப்பி நியூஸ்..
ஐஆர்சிடிசி (IRCTC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) அமைப்பு, இந்திய ரயில் பயணிகளுக்காக புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய வசதியை ஐஆர்சிடிசி சூப்பர் ஆப்ஸ் (IRCTC Super App) என்ற பெயருடன் இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்த மாதம் அறிமுகமாகவிற்கும் இந்த ஆப்ஸ் மூலம் தான் மக்கள் இனி டிக்கெட் புக்கிங் செய்யப்போகிறார்கள். எப்படி ரயில் டிக்கெட் புக்கிங் சேவை ஒட்டுமொத்தமாக மாறப்போகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தியாவின் முக்கியமான பயண சேவையாகவும், மக்கள் விரும்பும் சேவையாகவும் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் சேவை என்றால் அது ரயில் போக்குவரத்து சேவை தான். இந்தியாவின் முக்கியமான பயண சேவை என்று கூறுவதோடு, இந்தியாவின் மிகவும் மலிவான பயன்சேவை என்றும் நாம் ரயில் சேவையை குறிப்பிடலாம். அந்த அளவில் பெருமளவிலான மக்களை ரயில் சேவை கவர்ந்துள்ளது.

சூப்பராக உருமாறும் இந்திய ரயில்வே.. IRCTC-ன் புது சூப்பர் வசதி.. டிக்கெட் புக்கிங் செய்றவங்க கவனிச்சீங்களா?
தினசரி கோடிக்கணக்கான மக்களின் பயணம் இந்திய ரயில்வே சேவையை நம்பியே இருக்கிறது. என்ன தான் இது மக்களுக்கு பிடித்தமான சேவையாக இருந்தாலும், இந்திய ரயில்வே IRCTC என்று மாறிய பின்பு, மலிவு விலையில் சூப்பரான போக்குவரத்து சேவையை வழங்க துவங்கியுள்ளது. IRCTC தற்போது இந்திய மக்களின் பயணத்தை மேம்படுத்தும் விதமான நடவடிக்கைகளை கொஞ்சம்-கொஞ்சமாக நடைமுறைப்படுத்தி, ரயில் சேவையை மேம்படுத்தி வருகிறது.
இதுவரை IRCTC மூலம் டிக்கெட் பதிவு செய்ய ஒரு தனிப்பட்ட ஆப்ஸ், மற்றும் இந்திய ரயில் தொடர்பான மற்ற முக்கியமான சேவைகளுக்கென்று தனித்தனி மொபைல் ஆப்ஸ்களை வைத்திருந்த IRCTC, இப்போது ரயில்வே தொடர்பான அணைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் இருந்து வழங்க முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக IRCTC அமைப்பு, இந்த மாதத்தில் விரைவில் IRCTC Super App என்ற புதிய மொபைல் ஆப்ஸை பயன்பாட்டிற்கு கொண்டுவரவுள்ளது.
ஐஆர்சிடிசி சூப்பர் ஆப்ஸ் (IRCTC Super App):
IRCTC சூப்பர் ஆப்ஸ், ரயில் சேவை உடன் தொடர்புடைய எல்லா சேவைகளையும் இனி ஒரே பயன்பாட்டின் கீழ் வழங்கும். இதில் குறிப்பாக டிக்கெட் புக்கிங், கார்கோ புக்கிங், ரயில் பயணத்தின் போது உணவு ஆர்டர் செய்வது, PNR ஸ்டேட்டஸ் செக் செய்வது, ரயிலின் லைவ் லொகேஷன், மற்றும் இன்னும் பல சேவைகளை ஒரே இடத்தில் வழங்கவுள்ளது.
இந்த ஆப்ஸ் ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரண்டு தளங்களிலும் விரைவில் வெளியிடப்படும். இந்த ஆப்ஸின் தனி சிறப்பாக, இனி மக்கள் அன்ரிசர்வுடு டிரைன் டிக்கெட் (unreserved train ticket) மற்றும் ரிசர்வுடு டிரைன் டிக்கெட் (reserved train tiket) போன்று எல்லா டிக்கெட்களையும் இனி ஒரே மொபைல் ஆப்ஸில் இருந்து வாங்கி பயன்பெறலாம். ஒரே ஆப்ஸில் இன்னும் ஏராளமான அம்சங்களை IRCTC வழங்க திட்டமிட்டுள்ளது.
இனி இந்த ரயில்வே ஆப்ஸ்களுக்கு வேலை இருக்காது.. மொத்த புக்கிங்கும் ஒரே இடத்தில்:
இந்த புதிய IRCTC Super App மூலம் ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் (IRCTC Rail Connect), யுடிஎஸ் (UTS), மற்றும் ரயில் மாடட் (Rail Madad) போன்ற செயலிகள் சேவை முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. டிக்கெட் புக்கிங் மற்றும் உணவு ஆர்டர் தவிர, இனி இந்திய மக்கள் டிராவல் மற்றும் டூரிஸம் சேவையையும் இனி இந்த ஆப்ஸ் மூலம் அணுக முடியும்.
சுற்றுலா செல்ல பெஸ்ட் பேக்கேஜ்களை இனி நேரடியாக IRCTC Super Apps மூலம் பயன்படுத்தலாம். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் பயணிக்கும் மாநிலம், நகரம் அல்லது எதோ ஒரு ஊரில் உள்ள ஹோட்டல், தங்கும் இடம், ஹாலிடே பேக்கேஜ் போன்றவற்றை ஒரே ஆப்ஸ் மூலம் புக் செய்து அனுபவிக்கலாம். இந்த ஆப்ஸ் இலவசமாக டௌன்லோட் செய்ய 2 வாரங்களுக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








