இனி ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய சிரமம் இருக்காது.. அருமையான திட்டத்தை கொண்டுவரும் ஐஆர்சிடிசி..
இந்தியன் ரயில்வே (Indian Railways) தொடர்ந்து புதிய வசதிகயை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு புதிய வசதியும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் பயனர்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வரும் சில பிரச்சனைகளை சரி செய்து, டிக்கெட் புக்கிங் திறனை மேம்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது ஐஆர்சிடிசி (IRCTC). இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது இந்தியாவில் பஸ், விமானங்களை விட ரயில்களில் பயணம் செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக தொலை தூர ரயில் பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி உள்ளது. இதனால் ரயில் நிலையத்தில் உள்ள கவுண்டர்களுக்குச் சென்று டிக்கெட் புக் செய்யும் பழக்கம் பயணிகள் இடையே படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதிக மக்கள் இப்போது ஆன்லைன் மூலம் தான் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.

அதுவும் ஐஆர்சிடிசி செயலி அல்லது வெப்சைட் மூலம் தான் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். ஆனாலும் சில நேரங்களில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்குள் பல சிரமங்கள் வந்துவிடும். சில சமயம் பொறுமையின் எல்லைக்கே செல்ல நேரிடும் நிலைதான் உள்ளது. அதேபோல் தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது பயணியின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்து சப்மிட் கொடுத்தால் அடுத்த பக்கத்திற்குச் செல்ல நீண்ட நேரம் எடுக்கும்.
எனவே ஐஆர்சிடிசி இணையதளத்தில் இதுபோன்ற டெக்னிக்கல் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க செயலியை மேம்படுத்த வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் தான் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அதாவது
தற்போது ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியை மேம்படுத்த ரயில்வே அமைப்பு முடிவு செய்து இருக்கிறது.
அதன்படி டிக்கெட் புக்கிங் திறனை மேம்படுத்தும் விதமாக பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படும். அதாவது ஐஆர்சிடிசி தளத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டதாகவும் மார்ச் 2025-இல் இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி விடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே இதன் மூலம் பயணிகள் டிக்கெட் புக் செய்யும் போது எந்தவொரு சிக்கலும் இருக்காது என்றும், குறுகிய நேரத்தில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பணம் கழிக்கப்பட்டு டிக்கெட் வராமல் போகும் பிரச்சனையும் சீர் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே வரும் காலங்களில் பயணிகள் எந்த சிரமமும் இன்றி டிக்கெட் புக் செய்வது உறுதிப்படுத்தப்படும் என்றும் ரயில்வே வட்டார தகவல்கள் கூறுகின்றன. மேலும் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது நீண்ட நேரம் பிடிப்பது உள்ளிட்ட பல சிரமங்கள் தொடர்பாக ஐஆர்சிடிசி தலைவர் சஞ்செய் ஜெயின் பேசுகையில், டிக்கெட் புக்கிங் திறன் குறைவாக இருப்பதால் இதுபோன்ற பிரச்சனை ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.

அதாவது ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்ய வரும் பயணிகள் எண்ணிக்கையை ஒப்பிடும் போது புக்கிங் கெப்பாசிட்டி குறைவாக உள்ளது எனவும், இதன் காரணமாகவே இந்த பிரச்சனையை பயணிகள் எதிர்கொள்கிறார்கள் என்று கூறியிருந்தார் சஞ்செய் ஜெயின். மேலும் நாள் ஒன்றுக்கு 9 லட்சம் டிக்கெட்டுகள் இந்த ஐஆர்சிடிசி இணையதளத்தில் புக்கிங் செய்யப்படுகின்றன. பின்பு நாள் ஒன்றிற்கு பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மட்டும் 2 கோடியாகும்.
குறிப்பாக டிக்கெட் புக்கிங் திறனை ஒரு நிமிடத்திற்கு 25 ஆயிரம் என்று இருப்பதை 2.25 லட்சமாக உயர்த்த ரயில்வே முடிவு செய்துள்ளது. அதாவது டிக்கெட் முன்பதிவு செய்யும் அமைப்பின் திறனை மேம்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஏற்கனவே ரயில் பயணிகளின் வசதிக்காக சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் என இரண்டுமே மேம்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








