இதை மட்டும் தொடவே தொடாதீங்க.. ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு IRCTC எச்சரிக்கை! ஏன்?
ஸ்மார்ட்போனில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் முன்பு அவற்றின் பாதுகாப்பு தன்மையைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது நல்லது. இல்லையெனில் நமது போனில் தகவல் திருடப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் ஆண்ட்ராய்டு பயனர்களின் பாதுகாப்பு கருதி ஐஆர்சிடிசி சார்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ஐ.ஆர்.சி.டி.சி பெயரில் போலியான செயலிகளின் லிங்க் பரவுவதாகவும், பயனர்கள் இதை தங்களது போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் எனவும் ஐ.ஆர்.சி.டி.சி பயனர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

வெளியூர்களுக்குச் செல்லும் பயனர்கள் பேருந்தை விட ரயிலில் பயணம் செய்யத் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதுவும் தற்போது ரயில்களில் பல்வேறு சிறப்பான வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயனர்கள் செல்போன் மூலம் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலமாக சில நிமிடங்களில் டிக்கெட் புக் செய்து விடலாம்.
இதுதவிர ரயில் டிக்கெட் புக் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி செயலியையும் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இந்த செயலியை டவுன்லோடு செய்து அதன் மூலம் டிக்கெட்டுகளை மிகவும் எளிமையாக புக் செய்யலாம். குறிப்பாக ஐ.ஆர்.சி.டி.சியின் இந்த செயலியை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி போலவே இருக்கும் போலியான செயலியின் ஏபிகே பைல்ஸ் டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த செயலியை யாரும் தவறுதலாக போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் ஐ.ஆர்.சி.டி.சி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதுவும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் பயனர்களுக்கு தான் ஐ.ஆர்.சி.டி.சி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது ஐ.ஆர்.சி.டி.சி விடுத்துள்ள அறிவுறுத்தலில், "irctcconnect.apk," என்ற போலியான சாஃப்ட்வேர் தற்போது சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக ஐ.ஆர்.சி.டி.சி போன்ற தோற்றத்தில் சில கிரிமினல்கள் உங்களின் முக்கியமான தகவல்களைத் திருடக்கூடும்.
அதாவது யுபிஐ, டெபிட் கார்டு கிரெட் கார்டு போன்ற முக்கிய தரவுகளை இந்த போலியான சாஃப்ட்வேர் திருட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே போலியான செயலிகளைக் கவனமாக பார்த்து புறக்கணிக்க வேண்டும். மேலும் எப்போதும் போல பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஐ.ஆர்.சி.டி.சியின் அதிகாரப்பூர்வ'IRCTC Rail Connect' என்ற செயலியை மட்டும் பயன்படுத்துவது மிகவும் நல்லது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஐஆர்சிடிசி சார்பில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களான (கடவுச்சொல்), கிரெடிட் கார்டு எண், ஒடிபி, வங்கி கணக்கு எண், யுபிஐ போன்றவை மொபைல் போன் மூலம் கேட்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிளே ஸ்டோரில் கிடைக்கும் பாதுகாப்பான செயலிகளைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








