ரூ.20,000 கோடி ஈட்டிய அரசு இணையதளம்..!!

By Meganathan
|

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் முடிந்த வரை அதிக லாபம் பெற நினைக்கும் நிலையில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனமான ஐஆர்சிடிசி கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ.20,000 கோடி வர்த்தகம் செய்திருக்கின்றது. இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பயனுள்ள முன்பதிவு இணையதளமாக ஐஆர்சிடிசி விளங்குகின்றது.

 ரூ.20,000 கோடி ஈட்டிய அரசு இணையதளம்..!!

தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் தகவலின் படி ஐஆர்சிடிசி சரியாக ரூ.20,620 கோடிகளை ஈட்டியிருப்பதோடு இது ப்ளிப்கார்ட் தளத்தை விட இரு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐஆர்சிடிசி பயணச்சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து இத்தகைய வருமானத்தை ஈட்டியிருப்பதாகவும் இது கடந்த ஆண்டை விட சுமார் 34 சதவீதம் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 ரூ.20,000 கோடி ஈட்டிய அரசு இணையதளம்..!!

ஐஆர்சிடிசி இணையதளத்தில் மேம்பாடு, புதிய சேவைகள், தளத்தில் நொடிக்கு 2000 பயணச்சீட்டில் இருந்து 7200 பயணச்சீட்டுகளை வரை முன்பதிவு செய்யக்கூடிய வசதி போன்றவையே இதற்கு முக்கிய காரணம் என ஐஆர்சிடிசி தளத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான சந்தீப் தத்தா தெரிவித்தார்.

 ரூ.20,000 கோடி ஈட்டிய அரசு இணையதளம்..!!

மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாள் ஒன்றைக்கு 13.4 லட்சம் பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டதோடு 55 சதவீதம் பயணச்சீட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
IRCTC records twice the revenue of Flipkart. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X