தேஜாஸ் ரயிலில் பொழுதுபோக்கிற்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவை என்ன தெரியுமா?

|

இந்தியாவின் முதல் தனியார் ரயிலான தேஜாஸ் ரயில் போக்குவரத்து சேவையை IRCTC அண்மையில் அறிமுகம் செய்து வைத்தது. விமானத்தில் உள்ளது போன்று அனைத்து சேவைகளும் இந்த தனியார் ரயிலில் கிடைக்கிறது. கூடுதலாக நம்ப முடியாத பல சேவைகளையும் தேஜாஸ் நிறுவனம் அறிமுகம் செய்துவந்தது. தற்பொழுது பயணிகளின் பொழுதுபோக்கிற்காக புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

சென்னை - மதுரை தேஜாஸ் ரயில்

சென்னை - மதுரை தேஜாஸ் ரயில்

தமிழகத்தில் தேஜாஸ் ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு இயக்கப்படுகிறது. வியாழக்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இந்த தேஜாஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ப்ரீமியம் ரக தனியார் ரயிலான இதில் பயணிகளின் இருக்கையில் சிறிய டிவி டிஸ்பிளே அமைக்கப்பட்டுள்ளது.

சிறிய டிவி டிஸ்பிளே

சிறிய டிவி டிஸ்பிளே

இந்த சிறிய டிவி டிஸ்பிளேகள் பல நேரங்களில் சரிவரச் செயல்படுவதில்லை எனப் பயணிகளிடம் இருந்து புகார்கள் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேஜாஸ் நிறுவனம் இருக்கையிலிருந்த டிவி டிஸ்பிளேகளை நீக்கம் செய்ய உத்தரவிட்டு, அதை நீக்கமும் செய்துள்ளது. நீக்கம் செய்யப்பட்ட பின் இன்னும் சில பயணிகள் பொழுதுபோக்கிற்கான அம்சம் தேவை என்று புகார் அளித்துள்ளனர்.

IRCTC பயனர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.! மெயில் செக் பண்ணுங்க! அலர்ட் ஆகிக்கோங்க.!IRCTC பயனர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.! மெயில் செக் பண்ணுங்க! அலர்ட் ஆகிக்கோங்க.!

பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்க வேண்டும்

பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்க வேண்டும்

பயணிகள் பயணிக்கும் நேரத்தில் கண்டிப்பா பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வேவிற்குக் கோரிக்கைகள் வந்தன வண்ணம் உள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்றார் போல் அவர்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கு அம்ஸங்களை தங்களின் ஸ்மார்ட்போன், லேப்டாப்களில் கண்டுகளிக்கும் வகையில் அனைவருக்கும் வைஃபை சேவையை வழங்க முடிவு செய்துள்ளது.

புதிய மேஜிக் பாக்ஸ் வசதி

புதிய மேஜிக் பாக்ஸ் வசதி

இதற்காக தேஜசை ரயிலில் மேஜிக் பாக்ஸ் (magicbox) என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த மேஜிக் பாக்ஸ் வைஃபை நெட்வொர்க்கில் பயணிகள் தங்களின் சாதனங்களை கனெக்ட் செய்து தங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கு அம்சத்தைக் கண்டுகளிக்கலாம். இந்த வைஃபை சேவையுடன் பயணிகள் தங்களை இணைத்துக்கொள்ளப் பயணி விபரங்களைப் பதிவு செய்தால் மட்டும் போதுமானது.

ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக ஸ்டார்ட்டப் நிறுவனம்! 1ரூபாயில் 1ஜிபி டேட்டா-இலவசமாகவும் டேட்டாவா?ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக ஸ்டார்ட்டப் நிறுவனம்! 1ரூபாயில் 1ஜிபி டேட்டா-இலவசமாகவும் டேட்டாவா?

500 மணி நேரம் வரை கண்டுகளிக்கலாம்

500 மணி நேரம் வரை கண்டுகளிக்கலாம்

மேஜிக் பாக்ஸ் வசதியில் பயணநேரத்தின்போது 500 மணி நேரம் வரை கண்டுகளிக்கக் கூடிய அனைத்து மொழி திரைப்படங்கள் பாடல்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு கார்டூன் நிகழ்ச்சிகளும் இந்த சேவையின் கீழ் அணுகக் கிடைக்கிறது. அதில் விருப்பமானவற்றைப் பயணிகள் தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
IRCTC Passengers Getting Wi-Fi entertainment on Tejas Express : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X