Home
News

IRCTC முக்கிய அறிவிப்பு.. தீபாவளிக்கு ரயில் டிக்கெட் புக் பண்ண போறீங்களா? உடனே இதை பண்ணுங்க..

ஐஆர்சிடிசி (IRCTC) இன்று முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் (Diwali Festival 2024 Train Ticket Booking) வழக்கம் போல மூன்று மாதங்களுக்கு முன்பவாகவே துவங்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே (Indian Railway) அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி (October 30, 2024) நடைபெறுகிறது. பண்டிகை காலத்திற்கான சிறப்பு ரயில் முன்பதிவுகள் (Diwali Special Train Bookings) இப்போது துவங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 30, 2024 ஆம் தேதி (October 31, 2024) கொண்டாடப்படவுள்ளது. பண்டிகை காலத்தில் பெரும்பாலான பொதுமக்கள் எல்லா இடங்களிலும் இருந்து வெவ்வேறு இடங்களுக்கு பயணிப்பது வழக்கம். இதனால், பயணிகளின் பயணத்தை முடிந்தவரை சிறப்பிக்க இந்திய ரயில்வே பல நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 120 நாட்களுக்கு முன்பாகவே இப்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கும் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

IRCTC அறிவிப்பு.. தீபாவளிக்கு ரயில் டிக்கெட் புக் பண்ண போறீங்களா?

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு ஓபன் செய்யப்பட்டுள்ளது:
இதன் அடிப்படையில், இப்போது அக்டோபர் 29ம் தேதி ரயில் மூலம் பயணிக்க விரும்பும் மக்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு சேவை (Train ticket reservation) நேற்று முதல் ஓபன் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய தினங்களில் பயணிக்க விரும்பும் பயணிகளுக்கான தீபாவளி சிறப்பு ரயில் (Diwali Special Trains) முன்பதிவுகளும் ஓபன் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், தீபாவளி தினத்திற்கு முந்தைய நாளான அக்டோபர் 30 ஆம் தேதிக்கான முன்பதிவுகள் இன்று முதல் ஓபன் செய்யப்படுகிறது. தீபாவளி தினத்தன்று பயணிக்க விரும்புவோருக்கான டிரைன் டிக்கெட் ரிசர்வேஷன் (Train Ticket Reservations) நாளை முதல் திறக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை IRCTC தற்போது வெளியிட்டுள்ளது. ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய விரும்புவோர், அவர்களின் சொந்த IRCTC அக்கௌன்ட் விபரங்களை பயன்படுத்தி ஆன்லைனில் முன்பதிவு (Online Reservation) செய்யலாம்.

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரயில் டிக்கெட்களை எப்படி முன்பதிவு செய்யலாம்?
IRCTC மொபைல் ஆப்ஸ் (IRCTC Mobile Apps) வாயிலாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லது பொதுமக்கள் நேரடியாக, அருகில் உள்ள ரயில் நிலையம் (Railway station) சென்று நேரடியாக டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று IRCTC அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே போன்ற சேவையை இந்திய ரயில்வே நடைமுறைப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நேரத்தில், ரயில் டடிக்கெட் முன்பதிவிற்கான டிக்கெட்கள் ஒரே நாளின் புக் செய்யப்பட்டு (Train ticket online booking) முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், முடிந்த வரை உடனே ஆன்லைன் அல்லது நேரில் சென்று அவர்களுக்கான பயண டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ளுமாறு IRCTC கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்கள் இந்த தகவலை முடிந்த வரை அனைவரிடமும் சென்று சேரும்படி பகிர்ந்துகொள்ள அறிவுரைக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
IRCTC Opened Online Train Ticket Booking For This Year Diwali On October 31 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X