IRCTC அலர்ட்: இனி பெர்த் காலியாக இருந்தால் உடனே இன்ஸ்டன்ட் புக்கிங் செய்யலாமா? எப்படி?

|

ரயில் பயணிகளுக்கு இது ஒரு நம்ப முடியாத செய்தியாக இருக்கலாம், ஆனால், IRCTC உண்மையிலேயே இப்படி ஒரு சிறப்பான வசதியைத் தனது ரயில் பயணிகளுக்காக இப்போது அறிமுகம் செய்துள்ளது என்பது தான் மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. இனி ரயில் பயணிகள், பயணத்தின் போது காலி பெர்த் அல்லது இருக்கைகள் பற்றி அறிந்தால், அவற்றை உடனடியாக இன்ஸ்டன்ட் புக்கிங் செய்துகொள்ளும் வசதியை IRCTC இப்போது அறிமுகம் செய்துள்ளது.

இனி காலி பெர்த் அல்லது இருக்கைகள் இருந்தால் என்ன செய்யலாம்?

இனி காலி பெர்த் அல்லது இருக்கைகள் இருந்தால் என்ன செய்யலாம்?

ஆம், விஷயத்தைச் சரியாகத் தான் படித்தீர்கள். இன்ஸ்டன்ட் டீ, இன்ஸ்டன்ட் காபி போல இனி ரயிலில் இருக்கும் காலி இடங்களைப் பயணிகள் அவர்களுடைய மொபைல் வழியாக இன்ஸ்டன்ட் புக்கிங் செய்துகொள்ளலாம் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சேவை எப்படிச் செயல்படும்? பயணிகளுக்கு காலி பெர்த் மற்றும் காலி இருக்கைகள் பற்றி எப்படி தகவல் அனுப்பப்படும் என்பது போன்ற விபரங்களை இந்த பதிவின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஐஆர்சிடிசி அறிமுகம் செய்த முன்பதிவு வசதி

ஐஆர்சிடிசி அறிமுகம் செய்த முன்பதிவு வசதி

ரயிலில் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுடன் நீங்கள் பயணிக்க வேண்டும் என்றால், கட்டாயமாக ஓரிரு மாதங்களுக்கு முன்பாகவே அந்த பயணத்திற்கான டிக்கெட்டுகளை நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, உங்களுக்கான உறுதிப்படுத்தப்பட்ட பயண டிக்கெட்டை உங்களால் முன்பதிவு செய்ய முடியும். இல்லையென்றால், இறுதி நேரத்தில் தக்கல் மூலமாக முன்பதிவு செய்ய முயலலாம். ஆனாலும், பெரும்பாலான நேரங்களில் உறுதியான டிக்கெட்கள் கிடைப்பதில்லை.

IRCTC பயணிகளின் குழப்பத்தை தீர்க்க புதிய வசதி

IRCTC பயணிகளின் குழப்பத்தை தீர்க்க புதிய வசதி

இது ரயில் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் நாம் புக் செய்யும் டிக்கெட்கள் வெயிட்டிங் லிஸ்டில் வைக்கப்படுகிறது. இதனால், உறுதியான இருக்கைகள் இல்லாமல் பயணம் செய்ய முடியாமல் பெரும் குழப்பத்திற்கு ஆளாகின்றனர். ஆனால், இனி பயணிகள் இப்படிக் குழப்பமடையத் தேவையில்லை என்கிறது IRCTC. காரணம், IRCTC இப்போது புதிதாக புஷ் நோட்டிபிகேஷன் (Push Notification) என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

காலி பெர்த் அல்லது இருக்கைகளை இன்ஸ்டன்ட் புக்கிங் செய்ய அனுமதியா?

காலி பெர்த் அல்லது இருக்கைகளை இன்ஸ்டன்ட் புக்கிங் செய்ய அனுமதியா?

இதன் படி, இனி ரயிலில் ஏதேனும் பெர்த் காலியாக இருந்தால், அல்லது ஏதேனும் இருக்கைகள் இறுதி நேரத்தில் கேன்சல் செய்யப்பட்டு காலியாக இருந்தால், அதைப் பற்றிய தகவல்கள் இனி உடனடியாக பயணிகளுக்குத் தெரிவிக்கப்படும் என்று IRCTC கூறியுள்ளது. விருப்பமுள்ள பயணிகள், அந்த காலி பெர்த் அல்லது இருக்கைகளை உடனடியாக இன்ஸ்டன்ட் புக்கிங் செய்துகொள்ள இனி அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC இன் புதிய புஷ் நோட்டிபிகேஷன் வசதி என்ன செய்யும்?

IRCTC இன் புதிய புஷ் நோட்டிபிகேஷன் வசதி என்ன செய்யும்?

IRCTC இன் இந்த புதிய சேவையைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள். இந்திய ரயில்வே இப்போது அதன் ரயில் பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு புஷ் நோட்டிபிகேஷன் சேவை மூலம் பல தகவல்களை வழங்கவிருக்கிறது. இனி ரயில் விபரங்கள் மற்றும் அந்தந்த வழித்தடத்தின் வழியாகச் செல்லும் ரயிலில் உள்ள காலியான பெர்த்கள் பற்றிய தகவல்கள் IRCTC பயனர்களின் மொபைல் எண்ணிற்கே நேரடியாக அனுப்பும் என்று தெரிவித்துள்ளது.

IRCTC இன் முன்பதிவு செயல்முறை எப்படி செயல்படுகிறது?

IRCTC இன் முன்பதிவு செயல்முறை எப்படி செயல்படுகிறது?

IRCTC இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, இருக்கைகள் காலியாக இருந்தால், அவற்றை முன்பதிவு செய்ய நாம் அனுமதிக்கப்படுகிறோம். ஒருவேளை, இருக்கைகள் காலியாக இல்லை என்றால் அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை கூட நம்மில் சிலர் புக்கிங் செய்கிறோம். இன்னும் சிலர் அதிக வெயிட்டிங் லிஸ்ட் எண்ணிக்கை இருந்தால் முன்பதிவு செய்ய வேண்டாம் என்று தீர்மானித்துக்கொள்கிறோம்.

இறுதி நேரத்தில் கேன்சல் செய்யப்படும் இருக்கைகளை இனி புக்கிங் செய்யலாமா?

இறுதி நேரத்தில் கேன்சல் செய்யப்படும் இருக்கைகளை இனி புக்கிங் செய்யலாமா?

ஆனால், இறுதி நேரத்தில் சில பயணிகள் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் டிக்கெட்டை கேன்சல் செய்கின்றனர். இந்த டிக்கெட்கள் இறுதியில் காலி இடங்களாக வீணாகிறது. இந்த காலி இருக்கைகளை வீணடிக்காமல், பயணிகளுக்குப் பயனளிக்கும் விதத்தில் மாற்றி அமைக்க IRCTC எடுத்த ஒரு பெரும் முயற்சி தான் இந்த புதிய புஷ் நோட்டிபிகேஷன் அம்சம். இதுவரை, ரயிலில் எந்த இருக்கை இறுதி நேரத்தில் காலியாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாத பயணிகளுக்கு, இனி எல்லாமே வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும் என்கிறது IRCTC.

IRCTC இன் இந்த புதிய முயற்சி பயணிகளுக்கு கைகொடுக்குமா?

IRCTC இன் இந்த புதிய முயற்சி பயணிகளுக்கு கைகொடுக்குமா?

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) சமீபத்தில் தனது இணையதளத்தைப் புதுப்பித்துள்ளது. இதில் புஷ் நோட்டிபிகேஷன் என்ற வசதியை IRCTC தொடங்கியுள்ளது. இதன் மூலம், ரயிலில் இருக்கை காலியாக இருந்தால், அது தொடர்பான அறிவிப்புகள் பயனாளிகளின் மொபைல் எண்ணிற்கே நேரடியாக அனுப்பப்படும். பயனர்கள் தங்கள் வசதிக்கேற்ப காலியாக உள்ள இருக்கையை இனி இன்ஸ்டன்ட் புக்கிங் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று IRCTC கூறியுள்ளது. இது பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது.

புஷ் நோட்டிபிகேஷன் அம்சம் எப்படி செய்லபடும்?

புஷ் நோட்டிபிகேஷன் அம்சம் எப்படி செய்லபடும்?

இந்த புஷ் நோட்டிபிகேஷன் அம்சத்தைப் பயணிகள் ஆக்டிவேட் செய்ய, முதலில் ஐஆர்சிடிசி இணையதளத்திற்குச் சென்று புஷ் நோட்டிபிகேஷன் என்ற வசதியைப் பெற வேண்டும். சரி, இந்த அம்சம் எப்படிச் செயல்படும் என்று கொஞ்சம் புரிந்துகொள்ளலாம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட தேதிக்கு ஒரு ரயிலில் இருக்கும் இருக்கையை முன்பதிவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், ரயிலில் எந்த இருக்கையும் கிடைக்கவில்லை, பின்னர் நீங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டீர்கள்.

மொபைலிற்கு வரும் காலி இருக்கை விபரங்களை வைத்து உடனடி புக்கிங் செய்யலாம்

மொபைலிற்கு வரும் காலி இருக்கை விபரங்களை வைத்து உடனடி புக்கிங் செய்யலாம்

அதன் பிறகு, பிற ரயில்களில் இருக்கும் டிக்கெட்களை சரிபார்த்தீர்கள். ஆனால், காலி இடங்களே உங்களுக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், நீங்கள் புஷ் நோட்டிபிகேஷன் அம்சத்தை இயக்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை, ஏதோவொரு பயணி அவருடைய டிக்கெட்டை ரத்து செய்தால், அந்த காலி இடம் தொடர்பாக உங்கள் மொபைலிற்கு ஒரு அறிவிப்பு அனுப்பப்படும். அந்த SMS இல் ரயில் எண் பற்றிய தகவல், காலி இருக்கை பற்றிய விபரங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும். அதன் பிறகு நீங்கள் விரும்பினால், அந்த டிக்கெட்டை முன்பதிவு செய்து உடனடியாக கட்டணத்தைச் செலுத்தி, இருக்கையை பதிவு செய்துகொள்ளலாம்.

புஷ் அறிவிப்பு விருப்பத்தை எப்படி ஆக்டிவேட் செய்வது?

புஷ் அறிவிப்பு விருப்பத்தை எப்படி ஆக்டிவேட் செய்வது?

IRCTC இன் இணையதளத்தைத் திறக்கும் போது, ​​push notifications என்ற விருப்பத்தைப் பெறுவீர்கள். வாடிக்கையாளர்கள் இந்த சிறப்புச் சேவையை கிளிக் செய்து முற்றிலும் இலவசமாக இதை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். இதற்காக, ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்து, இந்தச் சேவையை நீங்கள் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் என்பதை மறக்காதீர்கள். அவ்வளவு தான் இனி அனைத்து நோட்டிபிகேஷன் விபரங்களும் உங்கள் போனிற்கு நேரடியாக அனுப்பப்படும்.

Best Mobiles in India

English summary
IRCTC Now Allows Passengers To Book Empty Berth In The Train Instantly Through Mobile Notification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X