Home
News

IRCTC-ன் புது ரூல்ஸ்.. இனி தட்கல் டிக்கெட் புக்கிங் காலை 10 மணிக்கு இல்லை.. நேரம் மாறிடுச்சு.. கவனியுங்க..

இந்திய ரயில்வே (IRCTC) இன்று முக்கியமான சில விதி மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. இரவோடு இரவாக, தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யும் விதிமுறைகளில் பல புதிய மாற்றங்களை இப்போது நடைமுறைக்கு (new Tatkal ticket booking rules 2025) கொண்டுவந்துள்ளது. இனி ரயில் டிக்கெட் முன்பதிவு (train ticket booking) செய்து பயணிக்க விரும்புவோர்கள் இந்த புதிய விதிமுறைங்களை பின்பற்றியே டிக்கெட் புக் செய்ய முடியும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. IRCTC நடைமுறை படுத்தியுள்ள புதிய விதிமுறைகள் மூலம் என்னென்ன மாற்றங்களை இனி பயணிகள் பின்பற்ற வேண்டும் என்பது இங்கே.

இந்திய ரயில்வே (Indian railway) தொடர்ந்து ரயில் பயணிகளுக்கு ரயில் சேவையை எளிமையானதாக மாற்றம் செய்யவும், அவற்றை சிறப்பானதாக மாற்றம் செய்யவும் பல்வேறு புதிய முயற்சிகளையும், புதிய விதிகளையும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த வரிசையில், இப்போது ஆண்டு இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் (Indian railway new rules for tatkal ticket booking) சில முக்கியமான மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

IRCTC-ன் புது ரூல்ஸ்.. இனி தட்கல் டிக்கெட் புக்கிங் காலை 10 மணி இல்லை

IRCTC-ன் புது ரூல்ஸ்.. இனி தட்கல் டிக்கெட் புக்கிங் காலை 10 மணிக்கு இல்லை.. கவனியுங்க நேரம் மாறிடுச்சு:

இந்த புதிய தட்கல் டிக்கெட் புக்கிங் ரூல்ஸ் (Tatkal ticket booking rules) மூலம் இனி பயணிகளுக்கு ரயில் சேவை மிகவும் நெகிழ்வானதாகவும் வெளிப்படையானதாகவும் மாறும் என்று IRCTC நம்புகிறது. கடைசி நிமிடத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு தட்கல் டிக்கெட்டுகள் (Tatkal ticket) தான் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இறுதி நேரத்தில் டிக்கெட் கிடைப்பதை தட்கல் முன்பதிவு செயல்முறை தான் உறுதி செய்கிறது. இது எந்த தடையும் இல்லாமல் இறுதி நேர பயணத்தை எளிதாக்குகின்றன.

- தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தில் மாற்றம்:
புதிய 2025 தட்கல் டிக்கெட் புக்கிங் ரூல்ஸ் படி, இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 11:00 மணிக்குத் தொடங்கும் (new tatkal ticket booking timings). இதற்கு முன்பு தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யும் நேரம் காலை 10:00 மணியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஏசி மற்றும் ஏசி அல்லாத பெட்டிகளில் தனி ஒதுக்கீடு:
ஏசி (AC) மற்றும் ஏசி அல்லாத பெட்டிகளுக்கான (Non-AC coaches) தட்கல் டிக்கெட்டுகளுக்கு தனி ஒதுக்கீடு ரயில்வேயால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பயணிகள் தங்கள் விருப்பப்படி இருக்கைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று IRCTC கூறியுள்ளது

டைனமிக் விலை நிர்ணயம்:
தட்கல் டிக்கெட் விலைகளில் டைனமிக் விலை நிர்ணயம் (tatkal ticket booking dynamic pricing) இந்த புதிய தட்கல் ரூல்ஸ் 2025 இல் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ், டிக்கெட்டின் விலை தேவை மற்றும் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து விலையில் உள்ள ஏற்ற இறக்கங்களை பயணிகள் நேரடியாக காணலாம். இது பயணிகளுக்கு அதிக வெளிப்படைத்தன்மையை வழங்கும்.

- ஆதார் அட்டை கட்டாயம்:
தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஆதார் அட்டையை உள்ளிடுவது கட்டாயம் (Aadhaar card mandatory for tatkal ticket booking) என்று IRCTC தெரிவித்துள்ளது. போலி பிறப்புச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி மற்றவர்களுடன் முன்பதிவு செய்யும் சம்பவங்களைக் குறைக்க ஆதார் இனி கட்டாயமாக்கப்படுகிறது.

- பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தளர்வான விதிமுறைகள்:
தட்கல் டிக்கெட்டு கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான நிபந்தனைகளில் (Tatkal ticket refund rules) சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இனி பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு வரை டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் கூட, பயணிகளால் அதிக பணத்தைத் திரும்பப் பெற முடியும் என்று IRCTC தெரிவித்துள்ளது.

அடுத்து ரயிலில் பயணிக்க திட்டமிடும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த புதிய விதிமுறைகளை அறிந்து, அதற்கேற்றாற் போல உங்கள் பயணத்தை திட்டமிடுவது சிறந்தது என்று IRCTC தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
IRCTC New Tatkal Ticket Booking Rules 2025 Timing Change Dynamic Pricing Aadhaar Mandatory Rules Details Check Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X