IRCTC புது ரூல்ஸ்: வீட்டிலிருந்தே இனி ஓபன் டிக்கெட்.. அன்ரிசர்வுடு டிக்கெட் எடுக்கலாம்.. எப்படி?
இனி வீட்டில் இருந்தபடியே உங்கள் பயணத்திற்கு தேவையான ஓபன் ரயில் டிக்கெட்களை (open train ticket) நீங்கள் ரயில் நிலையம் (railway station) செல்லாமலே எடுக்கும் புதிய வசதியை IRCTC அறிமுகம் செய்துள்ளது. இனி நீங்கள் வீட்டில் இருந்தபடி, உங்கள் ஸ்மார்ட்போன் (smartphone) அல்லது மொபைல் போன் (mobile phone) மூலமாக ரயில் பயணத்திற்கு தேவையான டிக்கெட்களை வாங்கலாம். இந்த புதிய வசதியை பொதுமக்கள் எப்படி பயன்படுத்தி பயன்பெறலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
ரயில் பயணத்திற்காக டிக்கெட் (train ticket) எடுப்பது என்பது ஒரு தலைவலியான செயல்முறையாகும். காரணம், மக்கள் நீண்ட நேரம் டிக்கெட் கவுண்டர்களில் (train ticket counter) காத்திருக்க வேண்டிய நிலை இங்கு உள்ளது. அதிலும் குறிப்பாக, பெரிய ரயில் நிலையங்கள் அல்லது முக்கியமான நகரங்களின் ரயில் நிலையங்களில் நீண்ட வரிசைக்கு (long que) பஞ்சமே இருக்காது.

IRCTC புது ரூல்ஸ்: வீட்டிலிருந்தே இனி ஓபன் டிக்கெட்.. அன்ரிசர்வுடு டிக்கெட் எடுக்கலாம் (IRCTC New Rules You can now buy open ticket.. unreserved ticket from home):
நீண்ட நேரம் வரிசையில் நின்றே மக்கள் ரயில் டிக்கெட் மற்றும் ஓபன் டிக்கெட்களை வாங்கும் நிலைமை இன்னும் பல ரயில் நிலையங்களில் நம்மால் காண முடிகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வாக இந்திய ரயில்வே நிர்வாகம் (IRCTC) யுடிஎஸ் என்ற மொபைல் ஆப்ஸ் (UTS movile apps) சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது டிஜிட்டல் ரயில் டிக்கெட்களை பயணிகளுக்கு வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
இந்த மொபைல் ஆப்ஸ் உதவியோடு, பொதுமக்கள் ரயில் நிலையம் பகுதிக்குள் அல்லது அருகில் ஒரு குறிப்பிட்ட தூர வரம்பிற்குள் இருக்கும் பொழுது மட்டுமே பயணத்திற்கான டிக்கெட்களை வாங்க முடியும் என்ற ஒரு நிபந்தனையை IRCTC இதற்கு முன் வைத்திருந்தது. ஆனால், இப்போது அந்த தூர வரம்பை IRCTC அகற்றியுள்ளது. சமீபத்திய புதிய அப்டேட் மூலம் இனி உங்களால் எங்கிருந்து வேண்டுமானாலும் போன் மூலம் ரயில் டிக்கெட் எடுக்க முடியும்.
ஆம், இனி நீங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இருந்தால் தான் ஓபன் டிக்கெட் எடுக்க முடியும் என்பதில்லை. உங்கள் வீட்டில் இருந்தால் கூட, இனி உங்களால் யுடிஎஸ் ஆப்ஸ் (UTS apps) மூலமாக அன்ரிசர்வுடு டிக்கெட், ப்லாட்ஃபோர்ம் டிக்கெட், நீண்ட தூர பயணத்திற்கான ஓபன் டிக்கெட், என்று இன்னும் பல சேவைகளை இந்த யுடிஎஸ் ஆஃபிஸ உங்களுக்கு இப்போது வழங்குகிறது.
யுடிஎஸ் மொபைல் ஆப்ஸ் பயன்படுத்துவது எப்படி? (How to Use UTS IR Unreserved Ticketing Mobile Apps):
சரி, இப்போது எப்படி இந்த UTS ஆப்ஸை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்து, டிக்கெட் எடுக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
- முதலில் உங்கள் போனில் யுடிஎஸ் மொபைல் ஆப்ஸை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
- உங்கள் பெயர், மொபைல் எண், ஐடி நகல் போன்ற விபரங்களை சமர்ப்பிக்கவும்.
- உங்கள் போனிற்கு வரும் ஒன் டைம் பாஸ்வோர்ட் (OTP) விபரங்களை நிரப்பவும்.
- அடுத்த மெசேஜ்ஜில் லாக்கின் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் அனுப்பப்படும்.
- அதை பயன்படுத்தி UTS ஆப்ஸில் லாகின் செய்யவும்.
- நீங்கள் எந்த ரயில் நிலையத்தில் இருந்து, வேறு எந்த ரயில் நிலையம் செல்ல விரும்புகிறீர்கள் என்பதை உள்ளிடவும்.
- அடுத்து டிஜிட்டல் பேமெண்ட் முறையை கிளிக் செய்து, உங்களுக்கு வசதியான முறையில் கட்டணத்தை செலுத்திக்கொள்ளலாம்.
- இறுதியாக, உங்கள் ஆப்ஸில் டிஜிட்டல் ரயில் டிக்கெட் அனுப்பப்படும்.
- இதை நீங்கள் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த முறையில் யுடிஎஸ் ஆப்ஸை மிகவும் எளிமையாக பயன்படுத்தி, நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல் எந்தவித டென்ஷனும் இல்லாமல் சுலபமாக ஓபன் டிக்கெட்டை நீங்கள் பொதுமக்கள் எடுத்து பயணிக்கலாம் என்று IRCTC அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த சேவையை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








