IRCTC புது ரூல்ஸ்.. இனி ரயிலில் மொபைல், லேப்டாப் சார்ஜ் செய்ய கட்டுப்பாடு? இது தெரியாம பயணம் செய்யாதீங்க..
இந்திய ரயில் பயணிகளுக்கு ஒரு மிக முக்கியமான சில புது விதிமுறைகளை (New rules) இந்திய ரயில்வே நிர்வாகம் (Indian Railway) தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி, ரயிலில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் என்னென்ன விஷயங்களை இனி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்த தகவலை ஆர்சிடிசி (IRCTC) தற்போது வெளியிட்டுள்ளது. இதில் லோயர் பெர்த் ரிசர்வேஷன், மொபைல் (Mobile) மற்றும் லேப்டாப் (Laptop) சார்ஜிங் செய்ய புதிய நேர வரம்பு, ரயிலில் செய்யவே கூடாத செயல்கள் மற்றும் அபராதங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் எளிமையான பொது போக்குவரத்து சேவை என்றால் பலரும் கட்டாயம் ரயில் சேவையை தான் சுட்டிக்காட்டுவார்கள். இந்தியாவின் மூலைமுடுக்கு வரை பயணிக்க, ரயில் சேவை தான் முக்கியமான பயண ரேகையாக இந்தியா முழுக்க பறந்து விரிந்து கிடைக்கிறது. பொதுக்களுக்காக பெரியளவில் சேவை வழங்கி வரும் முக்கியமான பயண சேவை இது தான்.

IRCTC வெளியிட்ட புது ரூல்ஸ்.. இது தெரியாம பயணம் செய்யாதீங்க:
இந்தியாவின் IRCTC சேவை உண்மையில் பயணிகளுக்கான ஒரு மாபெரும் பயண சாம்ராஜ்யமாக செயல்பட்டு வருகிறது. அதிகளவு பயணிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல IRCTC பல புதிய மேம்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது IRCTC சில புதிய மாற்றங்களை (IRCTC new rules) கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய தகவலின் படி, இனி ரயிலில் பயணிக்கும் பயணிகளின் மொபைல் போன் (Mobile phone), ஸ்மார்ட்போன் (Smartphone) மற்றும் லேப்டாப் (Laptop) போன்ற சாதனங்களை ரயில் இருக்கைகளில் இருக்கும் சார்ஜ்ர் (Train compartment charger) மூலம் சார்ஜிங் செய்ய இனி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக IRCTC அறிவித்துள்ளது. அதாவது, இனி பயணிகளின் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை ரயில் கம்பார்ட்மெண்ட்களில் சார்ஜ் செய்ய கட்டுப்பாடுகள் உள்ளது.
IRCTC இன் தகவல் படி, இனி ரயில் பயணிகள் அவர்களின் நீண்ட தூர பயணத்தின் போது, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அவர்களுடைய மொபைல் போன், ஸ்மார்ட்போன், பியூச்சர் போன், லேப்டாப், பவர் பேங்க் போன்ற எந்தவிதமான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களையும் சார்ஜ் செய்ய கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குள், ரயில் பயணிகள் இனி சாதனங்களை சார்ஜ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய லோயர் பெர்த் ரிசர்வேஷன் விதிகள்:
இதற்கான காரணத்தையும் இந்திய ரயில்வே தெளிவாக விளக்கியுள்ளது. ரயில் பயணிகள் பெரும்பாலானோர், ரயிலில் அவர்களுடைய சாதனங்களை சார்ஜிங்கில் போட்டுவிட்டு அப்படியே உறங்கிவிடுகிறார்கள் என்று IRCTC சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக ஏற்படும் விபத்துக்களை தடுக்க, IRCTC தற்போது இத்தகைய புதிய விதியை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.
இதேபோல், IRCTC வெளியிட்டுள்ள புதிய தகவலில் இன்னும் பல தகவல்களையும் சேர்த்துள்ளது. இதில், யாருக்கெல்லாம் லோயர் பெர்த் (Lower berth) பயன்படுத்த கிடைக்கும் என்ற தெளிவான புதிய விதியை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. வயதானவர்களுக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும், கர்பிணிப் பெண்களுக்கும் இனி லோயர் பெர்த் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பொது பயணிகள் லோயர் பெர்த் வேண்டுமென்று விண்ணப்பித்தாலும், வயது அடிப்படையிலேயே இனி இருக்கைகள் வழங்கப்படும் என்று IRCTC தெரிவித்துள்ளது.
அதேபோல், ரயிலில் இனி மது அருந்திவிட்டு பயணம் செய்தாலோ அல்லது மதுபானங்களை ரயிலில் எடுத்து சென்றாலோ அபராதமாக ரூ.500 அல்லது 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலுக்குள் எளிதாக தீ பிடிக்கும் பொருட்களான எரிவாயு சிலிண்டர்கள், பட்டாசுகள், அமிலம், மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், வெல்டிங்க், ஈரமான தோல்கள், உலர்ந்த புல், இலைகள், கழிவு காகிதம், இறந்த கோழி, அரிக்கும் அமிலப் பொருட்கள் போன்றவற்றை எடுத்து செல்ல கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








