Home
News

பெட்டிக்கடை to ரயில் நிலையம்.. இன்று முதல்.. எல்லா ரயில் நிலையங்களுக்கும் டிக்கெட் எடுக்க புது கட்டண முறை..

இந்திய நாட்டில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்கும் பயனர்களுக்கு வழங்கப்படும் டிக்கெட்களை பெற புதிய கட்டண முறையை IRCTC இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இது ஒரே நேரத்தில் நாடு முழுக்க அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) இந்தியாவில் உள்ள அணைத்து ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் புதிய கட்டண முறையை அமல்படுத்தியுள்ளது. இந்தியாவில்சுமார் 7325 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலையங்களிலும் டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, அன்ரிசர்வுடு கம்பார்ட்மெண்ட்களுக்கான டிக்கெட்களை இந்திய ரயில்வே வழங்கி வருகிறது.

பெட்டிக்கடை to ரயில் நிலையம்.. இன்று முதல்.. டிக்கெட் எடுக்க புது முறை

ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள் புது கட்டண முறை:

தினசரி சுமார் 13 மில்லியன் ரயில் பயணிகள் அன்ரிசர்வுடு கம்பார்ட்மெண்ட் மூலம் பயணிக்கிறார்கள். இவர்களுக்கான முன்பதிவு செய்யப்படாத ஓபன் டிக்கெட்களை இந்திய ரயில்வே டிக்கெட் கவுண்டர் மூலமாக மட்டுமே வழங்கி வருகிறது. இதனால், ரயில் நிலையங்களில் அன்ரிசர்வுடு கம்பார்ட்மெண்ட்களுக்கான பயண டிக்கெட்களை பெற பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக, முக்கியமான பெரிய ரயில் நிலையங்களில் பொது வகுப்பில் பயணிக்கும் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட்டை பெற்ற பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த டிக்கெட்களுக்கான கட்டணத்தை மக்கள் ரொக்கமாக சரியான சில்லறை வழங்கி பெறுவது மற்றொரு சிக்கலாக இருக்கிறது. இதில் சரியான சில்லறையை வழங்க முடியாமல், ரயில்வே நிர்வாகமும் திணறி வந்தது.

இப்போது இந்த சிக்கல்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் இனி QR ஸ்கேன் மூலமும், UPI பேமெண்ட்ஸ் ஆப்ஸ் மூலமாகவும் கட்டணம் செலுத்தும் முறையை இந்திய ரயில்வே அறிமுகம் செய்யதுள்ளது. இந்த புதிய கட்டண முறை வரும் ஏப்ரல் 1, 2024 (இன்று முதல்) நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பெட்டிக்கடை to ரயில் நிலையம்.. இன்று முதல்.. டிக்கெட் எடுக்க புது முறை

UPI மூலம் பணம் செலுத்தி டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் வாங்கலாம்:

IRCTC ஏற்கனவே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு UPI மூலம் பணம் செலுத்தும் முறையை நடைமுறையில் வைத்துள்ளது. இப்போது, பொது வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கும் UPI மூலம் கட்டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி மக்கள் சரியான கட்டணத்தை சில்லறை தட்டுப்பாடு இல்லாமல் எளிமையாக செலுத்திட முடியும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

குறிப்பாக, UPI மற்றும் டிஜிட்டல் முறை கட்டணங்களால் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நேரமும் குறையும் என்று IRCTC தெரிவித்துள்ளது. UPI பேமெண்ட் என்று கூறுகையில், இந்திய ரயில்வே இப்போது கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடியம் (Paytm) ஆப்ஸ்கள் மூலம் பணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

UPI ஆப்ஸ் மற்றும் QR ஸ்கேன் மூலம் டிக்கெட்களுக்கான கட்டணத்தை செலுத்தும் புதிய முறை நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தாலும். ரொக்கமாக காசு கொடுத்து டிக்கெட் வாங்கும் பழைய கட்டண முறையையும் IRCTC தொடர்ந்து வழங்கும் என்றும் கூறியுள்ளது. இன்னும் டிஜிட்டல் கட்டண முறைக்கு மாறாமல் இருக்கும் மக்களை கருத்தில்கொண்டு வழக்கமான கட்டண முறையையும் நடைமுறையில் வைத்திருப்பதாக IRCTC தெரிவித்துள்ளது.

முதலில் பெட்டிக்கடைகளில் தோன்றிய UPI மற்றும் QR ஸ்கேன் கட்டண முறைகள் இப்போது நாட்டில் உள்ள எல்லா முக்கியமான இடங்கள் வரை பறந்து விரிந்து சேவையை வழங்கிவருகிறது. இப்போது, ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர் வரை QR ஸ்கேன் மற்றும் டிஜிட்டல் கட்டண முறை நடைமுறைக்கு வந்துள்ளது என்பது நம்மை வியப்படைய செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
IRCTC Launched QR Scan and UPI Payment Apps Digital Pay Method In All Train Station Ticket Counters
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X