Home
News

அசத்திட்டீங்க IRCTC.. ஓடும் ரயிலில் ATM சேவை.. எந்த வழித்தடத்தில் அறிமுகம்? பணம் எடுப்பதில் சிக்கல் இருக்கா?

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) இப்போது அனைவரும் பாராட்டும் படியான ஒரு செயலை செய்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக ஓடும் ரயிலில் ஏடிஎம் (ATM) சேவையை ரயில் பெட்டிக்குள் கிடைக்கும் படி செய்துள்ளது ஐஆர்சிடிசி (IRCTC). என்னது ஓடும் ரயிலுக்குள் ஏடிஎம் சேவையா? என்று சிலர் வியப்படையாளம். உண்மை தான் மக்களே, இந்தியாவில் முதல் ரயில் ஏடிஎம் சேவையை IRCTC இப்போது துவங்கி வைத்துள்ளது. இது இப்போது வழித்தடத்தில் ஓடும் ரயிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? என்பது போன்ற கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

இந்திய ரயில்வே அதன் பயணிகளின் போக்குவரத்து அனுபவம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல மேம்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது. ரயில் சேவையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், IRCTC பல புதிய சேவைகளையும் அவ்வப்போது அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது. இந்த வரிசையில் தற்போது இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ரயிலுக்குள் முதல் ஏடிஎம் சேவையை துவங்கி வைத்துள்ளது.

அசத்திட்டீங்க IRCTC.. ஓடும் ரயிலில் ATM சேவை.. எந்த வழித்தடம்..

அசத்திட்டீங்க IRCTC.. ஓடும் ரயிலில் ATM சேவை.. எந்த வழித்தடத்தில் அறிமுகம்?

இந்தியாவில் உள்ள பல முக்கியமான இடங்களில் நாம் ஏடிஎம் சேவை மையங்களை பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கட்டாயம் ஒரு ATM மையமாவது அமைக்கப்பட்டிருக்கும். பேருந்து நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட் ஏரியா, ஷாப்பிங் மால், பொழுதுபோக்கு இடங்கள் என்று எல்லா இடங்களிலும் ATM மையங்களை வங்கிகள் மக்கள் பயன்பாட்டிற்காக நிறுவி வைத்துள்ளன.

ரயில் நிலையங்களில், பொதுவாக ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் கட்டாயம் ஒரு ATM மையமாவது அமைக்கப்பட்டிருக்கும். ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பு, பயணிகளுக்கு ரொக்கமாக பணம் தேவைப்படும் என்பதனால், நுழைவாயில்களில் ATM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கூட்டமான ரயில் நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருந்து பணம் எடுப்பது ஒரு பெரும் சிக்கலாக இருந்து வந்தது.

ஓடும் ரயிலில் இந்தியாவின் முதல் ATM சேவை:

பல பயணிகள் வரிசையில் நின்று பணம் எடுக்க நேரமில்லாமல், அவர்களுடைய ரயில் பயணத்தை மேற்கொள்ள வேண்டியதிருந்தது. இந்த சிக்கலுக்கு தீர்வாக ரயில் பெட்டிகளுக்குள் ATM இயந்திரங்களை பொருத்தினால், பயணத்தின் போது, பணம் தேவைப்படுபவர்கள் ATM-ல் இருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று யோசிக்கப்பட்டதை தொடர்ந்து, IRCTC இப்போது ஓடும் ரயிலில் ATM சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் இந்த முதல் ரயில் ஏடிஎம் சேவை இப்போது மகாராஷ்டிர மாநிலத்தின் வழித்தடத்தில் இயக்கப்படும் பஞ்சவாடி விரைவு ரயிலில் இந்த ATM இயந்திர சேவையை அறிமுகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை ஒரு சோதனையோட்டமாக IRCTC துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவுடன் IRCTC இணைத்து இந்த ரயில் ATM சேவையை இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பித்தக்கது.

ஓடும் ரயிலில் பணம் எடுப்பதில் சிக்கல் இருக்கா? உண்மை என்ன?

ரயிலில் ஏசி வகுப்பு பெட்டியில் பயணிகளுக்காக வழங்கப்படும் உணவுப் பொருள்கள் சேமித்து வைக்கப்படும் ஸ்டோரேஜ் அறையில் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, இப்போது அந்த இடத்தில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஓடும் ரயிலில் ATM சேவையை இதுவரை சிறப்பாக தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இருப்பினும், பயண பாதையில் நெட்வொர்க் கிடைக்காத சில இடங்கள் மற்றும் சுரங்கப்பாதை வழியாக ரயில் செல்லும் போது, ATM-ல் சில தொழில்நுட்ப கோளாறுகளால் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

பிறகு, அவை சிறிது நேரத்தில் தானாக சரி செய்யப்பட்டு ATM மீண்டும் இயங்க துவங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயிலில் அறிமுகம் செய்யப்பட்ட ATM சேவை 90% வெற்றி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. IRCTC விரைவில் 100% வெற்றியை பெற்ற பிறகு, அணைத்து வழித்தடங்களில் ஓடும் முக்கியமான ரயில்களில் ATM சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
IRCTC Launched ATM Machine Service In Running Train Enroute To Panchvati Express
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X