IRCTC பயணிகளுக்கு இப்படி ஒரு புது விதியா? ரயில் பயணிகளே கொஞ்சம் கவனியுங்க! இது ரொம்ப முக்கியம்

|

இந்தியாவின் மிக முக்கியமான போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக நம்முடைய இந்திய ரயில்வே திகழ்கிறது. காரணம், மக்களுக்கான வசதியான பயண அனுபவம் ரயில் சேவையின் மூலம் மட்டுமே கிடைக்கிறது. குறிப்பாக, குறைந்த கட்டணத்தில் வசதியான பயணத்தை அனுபவிக்க ரயில் பயணமே சிறந்ததாகக் கருதப்படுகிறது. மக்களின் பயண அனுபவத்தை மேம்படுத்த IRCTC பல புதிய விதிகளை அமல்படுத்தி வருகிறது.

ரயில் பயணிகளுக்காக IRCTC அறிமுகம் செய்த புதிய விதி

ரயில் பயணிகளுக்காக IRCTC அறிமுகம் செய்த புதிய விதி

அந்த வரிசையில், IRCTC தற்போது ஒரு புதிய விதியை ரயில் பயணிகளுக்காக அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய விதி ரயிலைத் தவற விடும் சூழ்நிலை ஏற்படும் பயணிகளுக்குப் பெரிதும் பயனளித்து உதவுகிறது. ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளும் இந்த விதியை கட்டாயம் தெரிந்துகொள்வது சிறப்பானது. சரி, இப்போது இந்த புதிய விதி பயணிகளுக்கு எந்த விதத்தில் பயனளிக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.

40 கோடி பேர் தினமும் பயணிக்கும் வாழ்க்கை பாதை

40 கோடி பேர் தினமும் பயணிக்கும் வாழ்க்கை பாதை

இந்திய ரயில்வே இந்தியாவின் மிக முக்கியமான 'வாழ்க்கை பாதை' என்று அழைக்கப்படுகிறது. காரணம், அதிகளவு மக்கள் ரயில் மூலம் பயணிக்கிறார்கள். இந்திய ரயில்வே சேவையின் மூலம் தினமும் சுமார் 40 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரயில்வே தற்போது 1,490 அஞ்சல் மற்றும் விரைவு ரயில்களையும், 5,397 புறநகர் ரயில் சேவைகளையும், 947 பயணிகள் ரயில்களையும் இயக்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.

பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் IRCTC

பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் IRCTC

ரயிலில் பயணம் செய்யும் போது, ​​ஒவ்வொரு பயணிகளும் தங்கள் பயணம் சுகமாகவும் இனிமையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதை உறுதிப்படுத்த நமது இந்திய ரயில்வே தொடர்ந்து பல புதிய விதிகளையும், திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே அறிமுகம் செய்த ஒரு முக்கிய வசதியைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் இப்போது பார்க்கப்போகிறோம்.

IRCTC Rules: ரயிலில் பயணிக்க 'இது' கட்டாயமா? மிடில் பெர்த் ரூல்ஸ்-னா என்ன தெரியுமா?IRCTC Rules: ரயிலில் பயணிக்க 'இது' கட்டாயமா? மிடில் பெர்த் ரூல்ஸ்-னா என்ன தெரியுமா?

இனி போர்டிங் ஸ்டேஷனை மாற்றி கூட ரயிலில் பயணிக்கலாமா?

இனி போர்டிங் ஸ்டேஷனை மாற்றி கூட ரயிலில் பயணிக்கலாமா?

இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ள புதிய விதியின் படி, இனி ரயில் பயணிகள், அவர்கள் பதிவு செய்திருந்த ரயில் நிலையத்திற்குப் பதிலாக வேறு எந்த நிலையத்திலிருந்து வேண்டுமானாலும் ரயிலைப் பிடிக்கலாம் என்று IRCTC கூறியுள்ளது. இதற்காக இனி எந்தவித அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது என்றும் IRCTC தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த விதியை ரயில் பயணிகள் பின்பற்ற சில நிபந்தனைகளையும் IRCTC வெளியிட்டுள்ளது. இந்த விதி எப்படிச் செயல்படும் என்பது பற்றியும் ஐ.ஆர்.சி.டி.சி விளக்கியுள்ளது.

மக்களின் புகார்களுக்கு செவி சாய்க்கிறதா IRCTC?

மக்களின் புகார்களுக்கு செவி சாய்க்கிறதா IRCTC?

IRCTC பயணிகளால் ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட சில அசவுகரியமான புகார்களைத் தொடர்ந்து இந்த விதி இப்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் போது, சில பயணிகளுக்கான போர்டிங் ஸ்டேஷன் வெகு தொலைவில் இருப்பதால், ரயிலை தவறி விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், சில நேரங்களில் பயணிகள் அருகில் இருக்கும் மற்ற போர்டிங் ஸ்டேஷனில் இருந்து ரயிலைப் பிடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால், அபராதமும் வசூலிக்கப்படுகிறது என்று புகார் அளிக்கப்பட்டது.

இந்த விதிக்கு இந்த நிபந்தனையை கடைபிடிப்பது கட்டாயம்

இந்த விதிக்கு இந்த நிபந்தனையை கடைபிடிப்பது கட்டாயம்

இதற்கு முன் இருந்த விதியின் படி, பதிவு செய்யப்பட்ட ரயில் நிலையத்திலிருந்து ரயில் பயணிகள் பயணத்தை துவங்காமல், மற்றொரு நிலையத்திலிருந்து ரயில் பயணத்தைத் துவங்கினால் அதற்கென்று அபராதமும் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய விதியின் படி, ரயில் பயணிகளின் போர்டிங் ஸ்டேஷன் தூரமாக இருக்கிறது என்று கருதினால், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஆன்லைன் மூலம் போர்டிங் ஸ்டேஷன் விபரங்களில் மாற்றிக்கொள்ளலாம்.

நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?

இந்த விதி எத்தனை முறை செல்லுபடியாகும்?

இந்த விதி எத்தனை முறை செல்லுபடியாகும்?

இப்படி போர்டிங் ஸ்டேஷனை விபரங்களை மாற்றிய பின்னர், பயணிகள் முன்னர் பதிவு செய்த போர்டிங் ஸ்டேஷனில் இருந்து ரயிலைப் பிடிக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்படி திருத்தங்களை ஒரு ரயில் பயணத்திற்கு ஒருமுறை மட்டுமே நீங்கள் ஆன்லைன் மூலம் மாற்றி அமைக்க முடியும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த முறையில் உங்களுக்கான போர்டிங் ஸ்டேஷனை மாற்றிய பின் ரயிலைப் பிடித்தால் மட்டுமே அபராதம் வசூலிக்கப்படமாட்டாது.

வேறொரு நிலையத்திலிருந்து ரயிலைப் பிடித்தால் என்னவாகும்?

வேறொரு நிலையத்திலிருந்து ரயிலைப் பிடித்தால் என்னவாகும்?

ஒருவேளை இப்படி இல்லாமல், இக்கட்டான சூழ்நிலையில் பயணிகள் போர்டிங் ஸ்டேஷனை மாற்றாமல் வேறொரு நிலையத்திலிருந்து ரயிலைப் பிடித்தால் என்னவாகும்? என்பதை இப்போது பார்க்கலாம். ரயில் புறப்படுவதற்கு முன்னதாக ஆன்லைன் மூலமாக போர்டிங் ஸ்டேஷனை மாற்றாமல் வேறு நிலையத்தில் இருந்து பயணத்தைத் துவங்கினால், அதற்கான அபராதத்தை IRCTC உங்களிடம் இருந்து வசூலிக்கும் என்பதை மறக்காதீர்கள்.

யாருக்கெல்லாம் இந்த விதி பொருந்தும்?

யாருக்கெல்லாம் இந்த விதி பொருந்தும்?

குறிப்பாக, நீங்கள் பதிவு செய்த போர்டிங் பாயிண்ட் மற்றும் நீங்கள் ரயிலை பிடித்த மாற்று நிலையங்களுக்கு இடையே உள்ள கட்டண வித்தியாசத்தையும் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. IRCTC அறிமுகம் செய்த இந்த விதி, குறிப்பாக ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது ஆன்லைன் மூலம் எப்படி போர்டிங் ஸ்டேஷன் விபரங்களை மாற்றி அமைப்பது என்று இப்போது பார்க்கலாம்.

நீண்ட நாட்கள் வேலிடிட்டி தரும் ஜியோவின் சூப்பரான ரீசார்ஜ் திட்டங்கள்: இதோ பட்டியல்.!நீண்ட நாட்கள் வேலிடிட்டி தரும் ஜியோவின் சூப்பரான ரீசார்ஜ் திட்டங்கள்: இதோ பட்டியல்.!

போர்டிங் ஸ்டேஷன் விபரங்களை எப்படி ஆன்லைன் மூலம் மாற்றுவது?

போர்டிங் ஸ்டேஷன் விபரங்களை எப்படி ஆன்லைன் மூலம் மாற்றுவது?

  • IRCTC இன் https://www.irctc.co.in/nget/train-search என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
  • உங்கள் IRCTC கணக்கிற்கான லாகின் விபரங்களை உள்ளிட்டு, பாஸ்வோர்டை டைப் செய்து உள்நுழையவும்.
  • 'Booking Ticket History என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது பட்டியலில் இருக்கும் ரயில் விபரங்களிலிருந்து, நீங்கள் பயணிக்கும் ரயிலைத் தேர்வு செய்யுங்கள்.
  • இப்போது அதில் உள்ள 'Boarding Point Changes' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • SMS மூலம் மாற்றத்தை உறுதிப்படுத்துங்கள்

    SMS மூலம் மாற்றத்தை உறுதிப்படுத்துங்கள்

    • இப்போது ரயிலுக்கான புதிய போர்டிங் ஸ்டேஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
    • புதிய நிலையத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு OK என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
    • போர்டிங் ஸ்டேஷனை மாற்றங்களை உறுதிப்படுத்த உங்கள் மொபைல் போனிற்கு SMS அனுப்பப்படும்.
    • அதில் உள்ள OTP விபரங்களை உள்ளிட்டு உறுதி செய்யவும்.
    • இப்படி உங்களுடைய போர்டிங் ஸ்டேஷன் விபரங்களை ஆன்லைன் மூலம் நீங்கள் மாற்றி அமைக்கலாம்.

Best Mobiles in India

English summary
IRCTC Introduces New Rule For Train Passengers To Change Boarding Station Details Online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X