ஐஆர்சிடிசி சேவையில் மிகவும் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.!
இப்போது குறுந்தகவல் வடிவில் பதில் அளிக்கும் ஆஸ்க்திஷா சாட்பாட் விரைவில் குரல் வடிவில் பதில் அளிக்கும் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
ஐஆர்சிடிசி சார்பில் வெளியிடப்பட இணையதளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இன்று ஐஆர்சிடிசி இணையதளத்தில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது, இந்த அம்சம் பல்வேறு
மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஐஆர்சிடிசி இணையதளம் மேம்படுத்தப்பட்டது, அதில் புதிய இன்டர்ஃபேஸ் மற்றும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன, குறிப்பாக புதிய இன்டர்ஃபேஸ் அம்சங்களுடன் ஐஆர்சிடிசி சேவையில் ஏஐ-எனப்படும் செயற்கை
நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி
ஐஆர்சிடிசி சேவையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த புதிய அம்சத்திற்கு ஆஸ்க்திஷா (AskDisha) என பெயரிடப்பட்டுள்ளது, இது வாடிக்கையாளர் சேவை மைய உதவியாள் போன்று செயல்படும். ஆஸ்க்திஷா மூலம் பயனர்கள் எந்நேரமும் தங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டு அதற்கு உடனடியாக பதில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள்
மேலும் ஐஆர்சிடிசி பயனர்கள், வாடிக்கையாளர் சேவை மையம் பற்றி அதிகளவு குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், இந்த புதிய சாட்பாட் தொழில்நுட்பம் வாடிக்கையாளர்கள் சேவை மைய அனுபவத்தை மேம்படுத்தும் என்றும், வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

குறுந்தகவல்
இப்போது குறுந்தகவல் வடிவில் பதில் அளிக்கும் ஆஸ்க்திஷா சாட்பாட் விரைவில் குரல் வடிவில் பதில் அளிக்கும் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. ஆஸ்க்திஷா குரல் வடிவம் ஐஆர்சிடிசி ஆண்டராய்டு செயலியில் வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கோரோவர்
குறிப்பாக கோரோவர் என்ற நிறுவனம் மூலம் தான் இந்த சாட்பாட் இயங்குகிறது. பின்பு பயனர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் என்றும், பயனர்கள் பொதுவாக கேட்க நினைத்து டைப் செய்ய துவங்கும் கேள்விகளை சரியாக பரிந்துரை செய்யும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் கேட்கும் வித்தியாசமான கேள்விகளுக்கு போது
வாடிக்கையாளர் சேவை மைய மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண் வழங்கும்.


Click it and Unblock the Notifications