IRCTC புது அம்சம்.. போன்ல பேசி டிக்கெட் புக் செய்யலாம்.. கேன்சல் செய்து.. பணத்தை கூட திரும்ப பெறலாம்? எப்படி?
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் ஐஆர்சிடிசி (IRCTC), பயணிகளுக்கு சிறந்த வசதியை வழங்குவதற்காக புதிய ஏஐ (AI) சேவையைத் தொடங்கியுள்ளது. இப்போது நீங்கள் போனில் பேசுவதன் மூலமும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இந்திய ரயில்வே புதிதாக ஆஸ்க் திக்ஷா 2.0 (AskDisha 2.0) என்ற ஏஐ சாட்பாட்டை (AI chatbot) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய AI சாட்பாட் உதவியுடன், நீங்கள் உங்கள் போன் மூலமாகவே பேசி உங்கள் டிக்கெட்டை பதிவு செய்து (book train ticket using IRCTC AI tool) பயணிக்கலாம். ஒரு வேலை நீங்கள் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறீர்கள் என்றால், அதை போனில் பேசி கேன்சல் செய்துக்கொள்ளலாம்.

ஐஆர்சிடிசி ஆஸ்க் திக்ஷா 2.0 ஏஐ சாட்பாட் (IRCTC AskDisha 2.0 AI Chatbot):
இது தவிர, இந்த புதிய ஐஆர்சிடிசி ஏஐ சாட்பாட் (IRCTC AI chatbot) மூலம் நீங்கள் இன்னும் பல சேவைகளை அணுகலாம். இந்த புதிய ஏஐ சேவை மூலம் பயனர்கள் எப்படி டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம், கேன்சல் செய்து, எப்படி பணத்தை கூட திரும்ப பெறலாம் என்பது போன்ற தகவல்களை பற்றி இப்போது பார்க்கலாம். இந்த புதிய ஆஸ்க் திக்ஷா 2.0 (AskDisha 2.0) ஏஐ பற்றிய விபரங்கள் இதோ.
இது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML) மற்றும் NLP அடிப்படையிலான விர்ச்சுவல் அசிஸ்டன்ட் சாட்போட் ஆகும். இது பயணிகளுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், ரத்து செய்யவும், போர்டிங் நிலையங்களை மாற்றவும், பணத்தைத் திரும்பப் பெறவும் அனுமதிக்கும் சேவைகளை பயன்படுத்த அனுமதிக்கிறது. உதாரணமாக, உங்கள் PNR ஸ்டேட்டஸ் நிலையைச் சரிபார்ப்பது தொடர்பான கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறது.
IRCTC வழங்கும் பல சலுகைகள் மற்றும் பல்வேறு வகையான ரயில்வே பயண சேவைகள் இந்த ஏஐ சாட்பாட் மூலம் அணுகலாம். இந்த புதிய IRCTC சாட்பாட் உதவியுடன், முதல் முறையாக, ரயில் இ-டிக்கெட் முன்பதிவை மிகவும் எளிதாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ரயில் டிக்கெட் முன்பதிவை மிக வேகமாகவும் எளிதாகவும் செய்து முடிக்க பயணிகளுக்கு உதவுகிறது என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

IRCTC ஆஸ்க் திக்ஷா 2.0 ஏஐ மூலம் என்னென்ன சேவைகளை பயன்படுத்தலாம்?
இந்த ஆஸ்க் திக்ஷா 2.0 (AskDisha 2.0) ஏஐ மூலம் என்னென்ன சேவைகளை பயனர்கள் அனுபவிக்கலாம் என்பதை இப்போது தெரிந்துகொள்ளல்லாம். இந்த அம்சத்தை வைத்து போனில் பேசி உங்களுக்கான ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், PNR நிலையைச் சரிபார்க்கலாம், டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம், பணத்தைத் திரும்பப் பெறலாம், போர்டிங் நிலையத்தை மாற்றலாம்.
முன்பதிவு வரலாற்றையும் பார்க்கலாம், இ-டிக்கெட்டைப் பார்க்கலாம், ERS ஐப் பதிவிறக்கலாம், E-டிக்கெட்டையும் அச்சிடலாம் மற்றும் பகிரலாம். எளிமையாக தட்க்கல் டிக்கெட்களை கூட உங்களால் இனி ஏஐ அம்சத்தை பயன்படுத்தி செய்து முடிக்க முடியும் என்கிறது IRCTC. இந்த அம்சம் இப்போது IRCTC மொபைல் ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் பயன்படுத்த கிடைக்கிறது. இனி ரயில் பயணிகள் வாய்ஸ் மூலம் எளிமையாக டிக்கெட் பதிவு செய்து பயணிக்கலாம்.


Click it and Unblock the Notifications








