விமானம் இல்ல ரயில் தான் நம்புங்க என்று வியக்க வைக்கும் முதல் தனியார் ரயில்!

|

இந்தியாவின் முதல் தனியார் ரயில் போக்குவரத்துக்குச் சேவையை IRCTC தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. விமானத்தில் உள்ளது போன்று அனைத்து சேவைகளும் இந்த தனியார் ரயிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக நம்ப முடியாத பல சேவைகளையும் அறிமுகம் செய்துள்ளது. அவை என்ன என்று பார்க்கலாம்.

முதல் தனியார் ரயில் சேவை

முதல் தனியார் ரயில் சேவை

தேஜாஸ் என்ற தனியார் நிறுவனம், தற்பொழுது இந்தியாவில் புதிய தனியார் ரயில் போக்குவரத்துக்குச் சேவையை IRCTC உடன் இணைந்து இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த தனியார் ரயில் சேவை முதல் முறையாக டெல்லி மற்றும் லக்னோ இடையே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரயிலில் பணிப் பெண்களின் சேவை

ரயிலில் பணிப் பெண்களின் சேவை

இந்த ரயிலைப் பயன்படுத்தி டெல்லியிலிருந்து லக்னோ சென்றடையப் பயணிகளுக்கு வெறும் 6 மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. இத்துடன் விமானத்தில் இருப்பது போலப் பணிப் பெண்களின் சேவையும், இந்த ரயிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆர்டர் செய்யும் உணவு மற்றும் உங்களுக்குத் தேவையான உதவியை இந்த பணிப்பெண்கள் செய்து கொடுக்கிறார்கள்.

மதுரை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல்: ஆனால் இதைபின்பற்ற வேண்டும்.!மதுரை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல்: ஆனால் இதைபின்பற்ற வேண்டும்.!

 ரயில் தாமதமானால் ரூ.100 வழங்கப்படும்

ரயில் தாமதமானால் ரூ.100 வழங்கப்படும்

ரயில் வருவதற்கு தாமதமானால், தாமதமாகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.100 வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பயணிகளின் லக்கேஜ்களை தேஜாஸ் நிறுவனம் தங்களின் ஊழியர்களை வைத்து உங்கள் இடத்திற்கே நேரடியாக வந்து பிக்-அப் செய்துகொள்கிறது. அதேபோல் நீங்கள் சென்றடையும் இடத்திற்கும் உங்கள் லக்கேஜ்-ஐ டோர் டெலிவரி செய்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

பயணிகள் இளைப்பாறப் காபி மெஷின்

பயணிகள் இளைப்பாறப் காபி மெஷின்

இத்துடன் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்க இந்த தனியார் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக ரயில் பேட்டிகளில் காபி மெஷின்கள் வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களுக்குத் தேவையான நேரத்தில் தாங்களே காபி அல்லது டீ செய்து இளைப்பாறப் பருகிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.6,999-விலையில் மிரட்டலான 32-இன்ச் எல்இடி டிவி அறிமுகம்.!ரூ.6,999-விலையில் மிரட்டலான 32-இன்ச் எல்இடி டிவி அறிமுகம்.!

ஒரு நாள் மட்டும் விடுமுறை

ஒரு நாள் மட்டும் விடுமுறை

முதல் முறையாக நம்பமுடியாத பல அட்டகாசமான அம்சங்களுடன் இந்த தனியார் ரயில் போக்குவரத்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் வாரத்தில் 6 நாட்களுக்கு இயங்குமென்றும், செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் விடுமுறை என்றும் தேஜாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிக்கெட்களை எங்கே வாங்குவது?

டிக்கெட்களை எங்கே வாங்குவது?

இந்த ரயிலிற்கான டிக்கெட்களை வாங்கப் பயணிகள் ஆன்லைன் சேவையை மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டிக்கெட் கவுண்டர்களில் இந்த ரயிலிற்கான டிக்கெட்கள் வழங்கப்படமாட்டாது. தேஜாஸ் நிறுவனத்தின் செயலி மூலம் அல்லது ஆன்லைன் வலைதளத்தைப் பயன்படுத்தி மட்டுமே டிக்கெட்களை புக் செய்ய வேண்டும். தக்கல் சேவையும் இந்த ரயிலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL மற்றும் PAYTM கூட்டணி வைத்தது இதற்கு தானா? புதிய புரட்சிக்கு சபாஷ்!BSNL மற்றும் PAYTM கூட்டணி வைத்தது இதற்கு தானா? புதிய புரட்சிக்கு சபாஷ்!

IRCTC இன் தீர்மானம் என்ன?

IRCTC இன் தீர்மானம் என்ன?

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த தனியார் ரயில் போக்குவரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துக் கூடுதல் தனியார் ரயில்கள் இயக்கப்படுமா என்று IRCTC தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் ஏன் முடியவில்லை என்ற கேள்வி?

அரசாங்கத்தால் ஏன் முடியவில்லை என்ற கேள்வி?

இருப்பினும் இத்தனை அம்சங்களுடன் ரயில் சேவை கிடைத்தால் மக்கள் வேண்டாம் என்றா சொல்வார்கள், நிச்சயம் இந்த சேவை வரவேற்பை பெரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒரு தனியார் நிறுவனத்தால் இத்தனை சேவைகளை மக்களுக்கு வழங்க முடியுமென்றால் ஏன் அரசாங்கத்தால் இது போன்ற சேவைகளை மக்களுக்கு வழங்க முடியவில்லை என்பதே கேள்வியாக உள்ளது. உங்கள் கருத்துக்களை கீழே பதிவுவிடுங்கள்.

Best Mobiles in India

English summary
IRCTC Introduced India's First Corporate Private Train Service Tejas Express Between Delhi And Lucknow : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X