Home
News

ரயில் டிக்கெட் முன்பதிவு.. இனி சிரமம் இருக்காது.. கொத்தாக போலி கணக்குகளை நீக்கிய IRCTC..

இந்திய ரயில்வே (India Railway) அமைப்பு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் பாதுகாப்பான பயணம் மற்றும் கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதால் தான் அதிக மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் தான் ரயிலில் இடம் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது.

தட்கல் டிக்கெட் (Tatkal ticket)

குறிப்பாக ரயலில் பண்டிகை காலம், விசேஷ நாட்களில் பயணம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. ஆன்லைன் மூலம் பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்வதால் கவுண்டர்களில் வரிசையில் நின்று பெறுவது கடினமாக உள்ளது. அதேபோல் தட்கல் டிக்கெட்களும் எளிதாக கிடைப்பது இல்லை.

ரயில் டிக்கெட் முன்பதிவு.. கொத்தாக போலி போலி கணக்குகளை நீக்கிய IRCTC..

அதேசமயம் மக்கள் சில அவசர தேவைக்காகப் பயணம் மேற்கொள்வதற்காகக் கூடுதல் கட்டணம் செலுத்தி தங்கல் டிக்கெட் எடுக்க முயன்றாலும் எளிதாகக் கிடைப்பது இல்லை. ரயிலில் எல்லா வகுப்புகளிலும் அனைத்து இடங்களும் நிரம்பி விடுகின்றன. தற்போது தட்கல் டிக்கெட் சாதாரணமாகக் கிடைப்பதே இல்லை.

இந்நிலையில் தட்கல் டிக்கெட் (Tatkal ticket) முறைகேடு நடப்பதாக ரயில்வே துறைக்குப் பல புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து ஐஆர்சிடிசி (IRCTC) முடங்கியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் உண்மையான பயனர்களுக்கு மட்டுமே ரயில்வே இணையதளத்தின் அணுகல் எளிதாகியுள்ளது.

குறிப்பாக டிக்கெட் புக்கிங் சேவையில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு, பயனர் அனுபவம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான இந்த நடவடிக்கையை இந்திய ரயில்வே எடுத்துள்ளது.

ஸ்வாரயில் (SwaRail) செயலி

மேலும் சமீபத்தில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) அனைத்து விதமான ரயில்வே சேவைகளையும் ஒரே இடத்தில் கொண்டுவரும் புதிய மொபைல் செயலியான ஸ்வாரயில் (SwaRail) செயலியை அறிமுகம் செய்தது. தற்போது இந்த செயலி ஆண்ட்ராய்டில் சோதனை முறையில் உள்ளது. விரைவில் அனைத்து மொபைல் பயனர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

SwaRail செயலி ஆனது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட், பிளாட்ஃபாரட் டிக்கெட் முன்பதிவு, சீசன் பாஸ், பார்சல் மற்றும் சரக்கு விசாரணைகள், ரயில் மற்றும் PNR நிலை விசாரணைகள், ரயில்களில் உணவு ஆர்டர்கள், புகார் மேலாண்மைக்கான ரயில் மடாட் போன்ற பல்வேறு சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிக்கெட் கேன்சல் செய்த பணத்தைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த ஸ்வாரயில் செயலி வழங்குகிறது.

அதுவும் இந்த ஸ்வாரயில் செயலி தற்போது பீட்டாவில் இருந்தாலும், பயனர்கள் தங்கள் தற்போதைய ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் கணக்குகளைப் பயன்படுத்தி உள்நுழையலாம் அல்லது புதிய கணக்கு ஒன்றை உருவாக்கலாம். அதுவும் இந்த செயலி ஒரு எளிய, சமகால டேஷ்போர்டை வழங்குகிறது. உங்கள் PNR நிலையைச் சரிபார்ப்பது மற்றும் உணவை முன்பதிவு செய்வது என மேற்குறிப்பிட்ட பல்வேறு சேவைகளை எளிதாகப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வாரயில் செயலி நேரடி ரயில் கண்காணிப்பையும் கொண்டுள்ளது. இது சரியான புதுப்பிப்புகள் உடன் ஒரு பிளாட்பாரத்தில் நின்ற எவருக்கும் மிக முக்கியமான கருவியாகச் செயல்படுகிறது. இது ரயில்கள் வரும் நேரம், தாமதங்கள் மற்றும் பிளாட்ஃபார்ம் எண்கள் பற்றிய நிகழ் நேர விவரங்களை வழங்கும்.

மேலும் ஸ்வாரயில் செயலி ஆனது வெறும் ஒரு முன்பதிவு பயன்பாடாக மட்டுமில்லாமல், முழுமையான பயண உதவியாளராக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஹோட்டல் முன்பதிவு, சுற்றுலாப் பயண ஒப்பந்தங்கள் மற்றும் பயணக் காப்பீடு என அனைத்து தகவல்களையும் இந்த செயலி மூலம் பெறமுடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
IRCTC has deactivated 2.5 crore fake IDs in connection with Tatkal ticket scam: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X