திடீரென IRCTC ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதியில் மாற்றம்: இதை செய்தால் டிக்கெட், இல்லையெனில் இருக்கை கிடையாது

|

இந்திய ரயில்வேவின் சமீபத்திய அறிவிப்பின் படி, இந்த செய்தி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயனர்களின் முக்கிய கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்திய ரயில்வே பயணிகள் அனைவரும் இந்த தகவலைத் தெரிந்துகொள்வது சிறப்பானது. காரணம், IRCTC வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இனி ரயிலில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை IRCTC தற்போது மாற்றி அமைத்துள்ளது. இனி புதிய விதிமுறையைப் பின்பற்றினால் மட்டுமே பயனர்களுக்குப் பயணிக்க இருக்கை வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் மக்களின் கவனத்திற்கு

ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் மக்களின் கவனத்திற்கு

IRCTC இன் கீழ் இருக்கும் Online Rail Tickets Booking Rule பிரிவில் உள்ள விதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில் பயணத்திற்காக இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் IRCTC பயனர்கள் முதலில் இந்த செய்தியை முழுமையாகக் கண்டிப்பாகப் படியுங்கள். இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மூலம் ஆன்லைனில் டிக்கெட் வாங்குபவர்கள் இனி என்ன விதிமுறையைப் பிறப்பற்ற வேண்டும் என்பதை தெளிவாக பார்க்கலாம் மற்றும் IRCTC கோரும் சரிபார்ப்பை எப்படி செய்து முடக்கிக்கலாம் என்பதையும் பார்க்கலாம்.

இதைச் சரியாகச் செய்தால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும்

இதைச் சரியாகச் செய்தால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும்

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மூலம் ஆன்லைனில் டிக்கெட் வாங்குபவர்கள் இந்த புதிய விதிமுறையின் படி, இனி அவர்களின் மொபைல் எண் மற்றும் அவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் தகவலை IRCTC உடன் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சரிபார்ப்பு சரியாக நிறைவேற்றப்பட்ட பின் மட்டுமே பயனர்களுக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் தான் உங்களுக்கான டிக்கெட் இனி வழங்கப்படும்.

பூமியில் தண்ணீர் எப்படி உருவானது? சூரியன் தான் நமக்கு தண்ணீர் கொடுத்ததா? உண்மையை கட்டவிழ்த்த விஞ்ஞானிகள்..பூமியில் தண்ணீர் எப்படி உருவானது? சூரியன் தான் நமக்கு தண்ணீர் கொடுத்ததா? உண்மையை கட்டவிழ்த்த விஞ்ஞானிகள்..

இந்த புதிய ரயில்வே விதி யாருக்கெல்லாம் பொருந்தும்?

இந்த புதிய ரயில்வே விதி யாருக்கெல்லாம் பொருந்தும்?

கொரோனா தொற்று காரணமாக நீண்ட நாட்களாக டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு ரயில்வே புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அத்தகைய நபர்கள் IRCTC போர்ட்டலில் இருந்து டிக்கெட்டுகளை வாங்க முதலில் தங்கள் மொபைல் எண் மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சலை IRCTC உடன் சரிபார்ப்பு செய்ய வேண்டும். அதன் பிறகுதான் டிக்கெட் கிடைக்கும். இருப்பினும், வழக்கமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகள் இந்த செயல்முறைக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதையும் IRCTC தெரிவித்துள்ளது.

IRCTC இன் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சேவை

IRCTC இன் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சேவை

IRCTC இந்திய ரயில்வேவின் கீழ் ஆன்லைனில் டிக்கெட்டுகளை (இ-டிக்கெட்) விற்பனை செய்கிறது. டிக்கெட்டுகளுக்காக பயணிகள் இந்த போர்ட்டலில் உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும். பின்னர் அவர்களுக்கு ஆன்லைன் முன்பதிவிற்கான சேவையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும். உள்நுழைவு கடவுச்சொல்லை உருவாக்க, நீங்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைப்பேசி எண்ணை வழங்க வேண்டும் என்பது கட்டாயம். அதாவது, மின்னஞ்சல் மற்றும் தொலைப்பேசி எண்ணைச் சரிபார்த்த பின்னரே நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

SBI பயனர்களே உஷார்.! போன் மூலம் 2 லட்சம் இழந்த பெண்.. Yono ஆப்ஸ் யூஸ் பண்ணுறீங்களா? அப்போ இந்த தவறை செய்யாதீர்SBI பயனர்களே உஷார்.! போன் மூலம் 2 லட்சம் இழந்த பெண்.. Yono ஆப்ஸ் யூஸ் பண்ணுறீங்களா? அப்போ இந்த தவறை செய்யாதீர்

இந்த புதிய ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதிகள் ஏன் உருவாக்கப்பட்டது?

இந்த புதிய ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதிகள் ஏன் உருவாக்கப்பட்டது?

புதிய ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதிகள் திடீரென ஏன் உருவாக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள், கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் ரயில் சேவை துவங்கப்பட்டு, பெரும்பாலான ரயில்கள் மீண்டும் அதன் வழிகளில் ஓடத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அளவும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், டிக்கெட் விற்பனையும் அதிகரித்துள்ளது. தற்போது 24 மணி நேரத்தில் சுமார் 8 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன என்று IRCTC தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் ஆன்லைன் புக்கிங் தான் இதற்குக் காரணமா?

அதிகரிக்கும் ஆன்லைன் புக்கிங் தான் இதற்குக் காரணமா?

இந்த அதிகரிக்கும் ஆன்லைன் புக்கிங் காரணமாகவும், நீண்ட நாட்களாக எங்கும் பயணிக்காமல் இருக்கும் IRCTC பயனர்களின் IRCTC கணக்குகளை மீண்டும் ஆக்டிவேட் செய்வதற்கு இந்த புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக IRCTC யின் டெல்லி தலைமையகத்தின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா நோய்த்தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலை மற்றும் அதற்கு முன் போர்ட்டலில் செயலிழந்த கணக்குகளை உறுதிப்படுத்த மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் சரிபார்ப்பு செயல்முறை இப்போது தொடங்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

PF விதி மாற்றம்: உங்கள் EPF கணக்கில் கிடைக்கும் ரூ. 7 லட்சம் இலவச பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?PF விதி மாற்றம்: உங்கள் EPF கணக்கில் கிடைக்கும் ரூ. 7 லட்சம் இலவச பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்த புதிய விதிமுறை சரிபார்ப்பு ஆன்லைனில் எவ்வாறு செய்யப்படுகிறது?

இந்த புதிய விதிமுறை சரிபார்ப்பு ஆன்லைனில் எவ்வாறு செய்யப்படுகிறது?

நீங்கள் IRCTC போர்ட்டலில் உள்நுழையும் போது, ​​சரிபார்ப்பு சாளரம் திறக்கும். அதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை நீங்கள் உள்ளிட வேண்டும். இப்போது இடதுபுறத்தில் உள்ள எடிட்டிங் விருப்பம் மற்றும் வலதுபுறத்தில் சரிபார்ப்பு விருப்பம் உள்ளதை நீங்கள் காணலாம். எடிட்டிங் விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் அப்னா எண் அல்லது மின்னஞ்சலை மாற்றலாம். இந்த இரண்டு தகவலையும் பயனர்கள் கட்டாயம் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்பதை நினைவில்கொள்க.

Google இல் இப்படி கூட சர்ச் செய்யலாமா? டாப் 10 டிப்ஸ்.. ஃபாஸ்டான சர்ச்சுக்கு இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..Google இல் இப்படி கூட சர்ச் செய்யலாமா? டாப் 10 டிப்ஸ்.. ஃபாஸ்டான சர்ச்சுக்கு இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலைச் சரிபார்ப்பு செய்வது எப்படி?

மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலைச் சரிபார்ப்பு செய்வது எப்படி?

உங்கள் மொபைல் எண் மற்றும் உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்ப்பு செய்ய, நீங்கள் IRCTC பக்கத்தில் உள்ள சரிபார்ப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து செயல்முறைகளை பின்பற்றியதும், ​​உங்கள் மொபைல் எண்ணில் OTP (ஒரு முறை கடவுச்சொல்) அனுப்பப்படும். இதைச் சரியாக உங்கள் IRCTC பக்கத்தில் உள்ளிட்ட பின் உங்கள் மொபைல் எண் சரிபார்ப்பு செய்யப்படும். OTPயை எண்ணைச் சரியாய் உள்ளிட்டால் மட்டுமே உங்களின் மொபைல் எண் சரிபார்க்கப்படும். இதேபோல், மின்னஞ்சலுக்கும் சரிபார்ப்பு செய்யப்பட வேண்டும். மின்னஞ்சலில் வரும் OTP யை உள்ளிட்டு, உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்ப்பு செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
IRCTC Changed Rules For Online Ticket Booking Know The New Rules For Booking Seats : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X