Home
News

ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகுமா என்பதை உடனே தெரிந்துகொள்ள புதிய வசதி.!

இப்போது முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் உறுதிசெய்யப்படுமா என்பதை ஐஆர்சிடிசி இணையதளமே யூகித்துச் சரியாக சொல்லிவிடும். மேலும் இந்த புதிய வசதியை தற்சமயம் ஐஆர்டிசி இணையதளத்தில் கொண்டுவந்துள்ளனர்.

By Prakash S

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மனிதர்களின் வேலைகளை மிகவும் குறைக்கும் வண்ணம் உள்ளது, அதன்படி ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப் வசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. மேலும் ரயிலில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் உங்களுக்கு உறுதியாகக் கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள புதிய வசதியை கொண்டுவந்துள்ளது ஐஆர்சிடிசி.

ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகுமா: ஐஆர்சிடிசி புதிய ஏற்பாடு.!

மேலும் இந்த புதிய வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, தற்சமயம் ரயில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள், உறுதியாகக் கிடைக்குமா என உடனே தெரிந்துகொள்ள முடியும், இதற்கு வேண்டி புதிய வசதியை ரயில்வே அமைச்சகம் ஐஆர்சிடிசி இணையதளத்தில் அறிமுகம் செய்துள்ளது.

 முன்பதிவு:

முன்பதிவு:

நீங்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, டிக்கெட் இருப்பு இருக்கிறதா, பின்பு முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகள் உறுதியாக கிடைக்குமா அல்லது காத்திருப்பு பட்டியலிலே நீடிக்குமா என்ற கவலை வேண்டாம், இப்போது முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் உறுதிசெய்யப்படுமா என்பதை ஐஆர்சிடிசி இணையதளமே யூகித்துச் சரியாக சொல்லிவிடும். மேலும் இந்த புதிய வசதியை தற்சமயம் ஐஆர்டிசி இணையதளத்தில் கொண்டுவந்துள்ளனர்.

 ரயில்வே அமைச்சக அதிகாரி

ரயில்வே அமைச்சக அதிகாரி

மேலும் ரயில்வே அமைச்சக அதிகாரி தெரிவித்தது என்னவென்றால், ஐஆர்சிடிசி இணையதளத்தில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக
இந்த புதிய வசதி மூலம் காத்திருப்புப் பட்டியலில் உள்ள தங்களது டிக்கெட்டுகள் உறுதி செய்யப்பட வாய்ப்பு இருக்கிறதா என்பதை உடனே
தெரிந்து கொள்ள முடியும். மேலும் ஐஆர்சிடிசி டிக்கெட்டுகள் உறுதியாகும் வாய்ப்பையும் கணித்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

இ-வாலட்:

இ-வாலட்:

தற்சமயம் இ-வாலட் மூலம் ரயில் முன்பதிவு செய்யும் வசதியை பயனிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது ஐஆர்சிடிசி, மேலும் ஐஆர்சிடிசி-ன் ரயில் கனெக்ட் செயலில் இ-வாலட் மூலம் பயணிகள் ரயில் பயண சீட்டுகளை முன்பதி செய்துகொள்ள முடியும். பின்பு யூடிஎஸ் மொபைல் செயலி மூலம் நீங்கள் டிக்கெட் புக் செய்தால் இந்த இ-வாலட் மூலம் எளிமையாக கட்டணத்தை செலுத்த முடியும்.

 புதிய திட்டம்:

புதிய திட்டம்:

மேலும் ரயில் பயணத்தின் போது ரயிலில் வழங்கப்படும் உணவுகளை வாங்குவதர்கள் தங்கள் கைகளில் எப்போதும் பணம் வைத்திருத்தல் அவசியமாகிறது. அதற்கான சில்லைறை இல்லையெனும் போதும், அல்லது பணமாக இல்லாமல் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் மூலம் பொருட்களை
வாங்கும் நபர்கள் தொடர்ந்து அவதிப் பட்டு தான் வருகின்றனர். இந்நிலையில் பயணிகளின் இந்த அவதியினை போக்கும் வகையினில்
ரயில்களில் POS இயந்திரங்களை பயன்படுத்தி பயணிகளிடம் பணம் பெற வழிவகை செய்யும் வகையில் ரயில்வே திட்டமிட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
IRCTC Can Now Predict if Your Railway Ticket Will Get Confirmed:Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X