ஐஆர்சிடிசி ரயில்வே டிக்கெட் மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்!!!

Posted By:

ஐஆர்சிடிசி கடந்த ஜூலை மாதம் எஸ்ம்எஸ் மூலமாக ரயில்வே டிக்கெட்டை பதிவு செய்யும் வசதியை அறுமுகப்படுத்தியுது. இப்பொழுது IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) விண்டோஸ் ஓஎஸ் கொண்ட மொபைல்கள் மற்றும் சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் புதிய அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது.

மைக்கிரோசாப்ட் நிறுவனம் இந்த அப்ளிகேஷனை விண்டோஸ் பிளாட்பார்ம் கொண்ட கம்பியூட்டர்கள், லேப்டாப்கள், டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் ரயில்வே டிகெட்டை பதிவு செய்யலாம்.

ஐஆர்சிடிசி ரயில்வே டிக்கெட் மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்!!!

1 எம்பி மெமரி அளவு கொண்ட இந்த அப்ளிகேஷனை நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். காலை 8AM முதல் 12AM வரை மற்றும் இரவு 11.30PM முதல் 12.30AM வரை ஆகிய் நேரங்களில் இந்த அப்ளிகேஷன் டிக்கெட் புக் செய்ய முடியாது மற்ற நேரங்களில் நீங்கள் இதை பயன்படுத்தலாம்.

ஆன்டிராய்ட் போன்களுக்கு இந்த அப்ளிகேஷன் கடந்த ஆகஸ்ட் மாதமே வெளியிடப்பட்டது. விண்டோஸ் போன் இந்த லிங்கில் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யலாம். ஆன்டிராய்ட் போன் பயன்படுத்துபவர்கள் இந்த லிங்கில் அப்ளிகேஷனை டவுன் செய்து கொள்ளலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot